அனகாரிக தர்மபால: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
 
1891 இலேயே [[மகாபோதி சங்கம்]] கொழும்பில் தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டில் அதன் அலுவலகங்கள் [[கல்கத்தா]]வுக்கு மாற்றப்பட்டன. புத்த காயாவிலுள்ள மகாபோதி கோயிலின் கட்டுப்பாட்டைப் பௌத்தர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது இச் சங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. இந் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் பல நூற்றாண்டுகளாக அக் கோயிலின் கட்டுப்பாட்டைத் தம் வசம் வைத்திருந்த [[சங்கராச்சாரியார் மடம்|சங்கராச்சாரியார் மடத்தின்]] மீதும், அதன் தலைவர் மீதும் [[வழக்கு]]த் தொடுக்கப்பட்டது. இது உடனடியான பலன் எதுவும் கொடுக்காவிட்டாலும், [[இந்திய விடுதலை]]க்குப் பின்னர் 1949 ஆம் ஆண்டில் இவர்களது கோரிக்கைக்கு அரைகுறை வெற்றி கிடைத்தது.
 
1893 ஆம் ஆண்டில் [[சிக்காகோ]]வில் நடைபெற்ற [[உலகச் சமயங்களின் பேராளர் சபை]]க்கு, [[தேரவாத பௌத்தம்|தேரவாத]] புத்த சமயத்தில் சார்பாளராக அழைக்கப்பட்டார். இவர் தனது முப்பதுகளின் தொடக்கத்திலேயே உலகம் அளவில் இயங்கும் ஒருவரானார். உலகம் முழுதும் பயணம் செய்து விரிவுரைகள் ஆற்றியதுடன், [[விகாரை]]களையும் நிறுவினார். இத் தொண்டு அடுத்த 40 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றது. அதே வேளை, இலங்கையில் பாடசாலைகளையும், மருத்துவ நிலையங்களையும் நிறுவியதுடன் இந்தியாவிலும் பௌத்த கோயில்களையும், விகாரைகளையும் நிறுவினார். இவற்றுள் முக்கியமானது, புத்தர் முதன் முதலாக உபதேசம் செய்ததாகக் கருதப்படும் [[சாரநாத்]] என்னும் இடத்தில் அவர் அமைத்த கோயில் ஆகும். சாரநாத்தில் 1933 ஆம் ஆண்டில் பிக்குவாக ஆன தர்மபால அங்கேயே, அதே ஆண்டில், தனது அறுபத்து ஒன்பதாவது வயதில் காலமானார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அனகாரிக_தர்மபால" இலிருந்து மீள்விக்கப்பட்டது