அனகாரிக தர்மபால: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
ஒல்கொட்டுக்கு உதவி வந்த தர்மபால, பெரும்பாலும் அவருக்கு ஒரு மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டார். பிளவத்ஸ்கி அம்மையாரோடும் நெருங்கியவராக இருந்த தர்மபாலவுக்கு, பாளி மொழியைக் கற்கும்படி அம்மையார் ஆலோசனை வழங்கினார். இக் காலத்திலேயே இவர் தனது பெயரை, ''தர்மத்தின் காவலன்'' எனப் பொருள்படும், தர்மபால என்று மாற்றிக்கொண்டார்.
 
தர்மபால, 1891 ஆம் ஆண்டில், [[கௌதம புத்தர்]] ஞானம் பெற்ற இடமான [[புத்த காயா]]வில் உள்ள [[மகாபோதி கோயில், புத்த காயா|மகாபோதி கோயிலுக்கு]] யாத்திரை சென்றார். அப் பௌத்த கோயில், சைவக் குருவானவருடைய பொறுப்பில் இருந்ததையும், அங்கிருந்த [[புத்தர் சிலை]] இந்துக் கடவுளாக மாற்றி வணங்கப்பட்டு வந்ததையும், பௌத்தர்கள் வணங்குவதற்கு அனுமதிக்கப்படாததையும் தர்மபால கண்டார். இதனை எதிர்த்துப் பிரச்சார இயக்கமொன்றை அவர் தொடங்கினார்.
 
1891 இலேயே [[மகாபோதி சங்கம்]] கொழும்பில் தொடங்கப்பட்டது. அடுத்த ஆண்டில் அதன் அலுவலகங்கள் [[கல்கத்தா]]வுக்கு மாற்றப்பட்டன. புத்த காயாவிலுள்ள மகாபோதி கோயிலின் கட்டுப்பாட்டைப் பௌத்தர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது இச் சங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது. இந் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் பல நூற்றாண்டுகளாக அக் கோயிலின் கட்டுப்பாட்டைத் தம் வசம் வைத்திருந்த [[சங்கராச்சாரியார் மடம்|சங்கராச்சாரியார் மடத்தின்]] மீதும், அதன் தலைவர் மீதும் [[வழக்கு]]த் தொடுக்கப்பட்டது. இது உடனடியான பலன் எதுவும் கொடுக்காவிட்டாலும், [[இந்திய விடுதலை]]க்குப் பின்னர் 1949 ஆம் ஆண்டில் இவர்களது கோரிக்கைக்கு அரைகுறை வெற்றி கிடைத்தது.
"https://ta.wikipedia.org/wiki/அனகாரிக_தர்மபால" இலிருந்து மீள்விக்கப்பட்டது