'''மீனா''' (பிறப்பு: [[16 செப்டம்பர்]], [[1976]]; சென்னை) தென்னிந்திய திரைப்பட [[நடிகை]] ஆவார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் அறியப்பெற்ற நடிகை ஆனார். இவரது முதல் திரைப்படம் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனின்]] ''[[நெஞ்சங்கள்]]'' திரைப்படமாகும். [[1990|90]]களில் இருந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார். [[தமிழ்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]], [[மலையாளம்]] என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார். இவர் கதாநாயகியாக நடித்து வெளியான [[முத்து (திரைப்படம்)|முத்து திரைப்படம்]], [[சப்பான்|சப்பானில்]] வெற்றிகரமாக ஓடியதை அடுத்து சப்பான் நாட்டு ரசிகர்களையும் பெற்றுள்ளார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.