இராணி முத்து வீராயி நாச்சியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''இராணி முத்து வீராயி நாச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 2:
 
== வாரிசாக நியமிக்கப்படுதல் ==
விஜய இராமசாமி சேதுபதி கி.பி. 1830இல் இறப்பதற்கு முன்னர் தமது சகோதரியும் சுவீகாரத் தாயாருமான [[இராணி முத்து வீராயி நாச்சியார் |முத்து வீராயி நாச்சியாரைத்]] தமது வாரிசாக நியமித்தார். இதனைச் சுட்டிக்காட்டி இராணி முத்து வீராயி நாச்சியார் விடுத்த வேண்டுதலுக்கிணங்க மதுரைச் சீமை கலெக்டர் விவேஷிங் ஜமீன்தாரியை இவரிடம் ஒப்படைக்கப் பரிந்துரை செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட கும்பெனித் தலைமை இராமநாதபுரம், ஜமீன்தாரியை இராணி முத்து வீராயி நாச்சியாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
 
== வாழ்கைக் குறிப்பு ==
இராணி முத்து வீராயி நாச்சியார் திறமையாக சமஸ்தான மேலாளரான இஸ்மாயில் சாகிபுடன் இணைந்து சமஸ்தான அலுவல்களைத் திறம்பட ஆற்றினார். பல ஆண்டுகளாகப் பற்றாக்குறையினால் அவதிப்பட்டு வந்த சமஸ்தானம் நிதி வசதியுடன் கூடியதாக மேம்பட்டது. இந்நிலையில் மறைந்த [[விஜயரகுநாத இராமசாமி சேதுபதி]]யின் விதவை மனைவியான பர்வதவர்த்தனி நாச்சியாரும் வேறு சிலரும் இராணி முத்து வீராயி நாச்சியாருக்கு எதிராகப் பல வழக்குகளைத் தொடர்ந்தனர். இதேசமயம் எட்டையபுரம் பாளையக்காரர் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் தெற்கு எல்லையில் பல ஆக்கிரமிப்புகளைச் செய்து வந்தார். இவையனைத்தையும் இராணி முத்து வீராயி நாச்சியார் உரியவர்களின் ஆலோசனையோடு சமாளித்துவந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/இராணி_முத்து_வீராயி_நாச்சியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது