"உருசியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(replaced the 2009 artistic copy (Peter der-Grosse 1838 PR.jpg) by the 1838 original (Peter der-Grosse 1838.jpg))
 
'''உருசியா''' (''Russia'') அல்லது '''இரசியா''' என்பது வடக்கு [[யூரேசியா]]வில் அமைந்துள்ள உலகிலேயே நிலப்பரப்பில் யாவற்றினும் மிகப்பெரிய நாடாகும்.<ref name=britannica>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/513251/Russia|title=Russia|publisher=Encyclopædia Britannica|accessdate=31 January 2008}}</ref> இந்நாட்டின் முறைப்படியான பெயர் '''உருசியக் கூட்டமைப்பு''' என்பதாகும். தமிழில் இரசியா, இரச்சியா என்றும், ருஷ்யா என்னும் பெயர்களாலும் குறிக்கப்படுவது உண்டு.
உருசிய மொழியில் இது Росси́йская Федера́ция (''Rossiyskaya Federatsiya'' அல்லது ''ரசீஸ்க்கய ஃபெதராத்சியா'') அல்லது சுருக்கமாக '''உருசியா''' (உருசிய மொழியில்: Росси́я, ஆங்கில ஒலிபெயர்ப்பு: ''Rossiya'' அல்லது ''Rossija'') என அழைக்கப்படுகிறது. [[ஆசியா]], [[ஐரோப்பா]] ஆகிய கண்டங்களின் பெரு நிலப்பரப்பில் மிகவிரியும் ஒரு பெரும் நாடாக விளங்கும் இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 17,075,200 சதுரக் கிலோமீட்டர். [[பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியலைப் பார்த்தால்]], உருசியாவின் பரப்பளவு அடுத்த பெரிய நாடான [[கனடா]]வின் நிலப்பரப்பைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகமாகும். உருசியா, மக்கள்தொகை அடிப்படையில் உலகில் எட்டாவது இடம் வகிக்கிறது. ஏறத்தாழ 143-145 மில்லியன் மக்கள் (2002ன் கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 145,513,037) இந்நாட்டில் வாழ்கிறார்கள். ஏறக்குறைய வட [[ஆசியா]] முழுவதையும் மற்றும் 40% [[ஐரோப்பா]] பகுதிகளையும் உள்ளடக்கியது. 11 விதமான கால வேறுபாடுகளை (''Time zone'') யும், பரந்த வேறுபட்ட நிலப்பரப்பையும் கொண்டது. உருசியா உலகிலேயே அதிகமான அளவு [[காடு|காட்டு]] ஒதுக்கங்களைக் (8,087,900 ச. கிமீ) கொண்டுள்ளதுடன், இங்குள்ள ஏரிகள் உலக நன்னீர் நிலைகளின் பரப்பளவில் நான்கில் ஒரு பாகமாகவும் உள்ளன.<ref name=loc>{{cite web|last=Library of Congress|title=Topography and drainage|url=http://countrystudies.us/russia/23.htm|accessdate=26 December 2007}}</ref> உலகின் மிகக் கூடிய கனிம வளங்களும் ஆற்றல் வளங்களும் உருசியாவிலேயே உள்ளதுடன்<ref>{{cite web|url=http://www.unesco.ru/en/?module=pages&action=view&id=1|title=Commission of the Russian Federation for UNESCO: Panorama of Russia|publisher=Unesco.ru|accessdate=29 October 2010}}</ref> உலகின் மிகப் பெரிய எண்ணெய், இயற்கை வாயு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நாடாகவும் விளங்குகிறது.<ref name=IEA-Oil>[http://omrpublic.iea.org/omrarchive/18jan12sup.pdf International Energy Agency – Oil Market Report 18 January 2012]. Retrieved 20 February 2012.</ref><ref name=cia-gas>[https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2180rank.html Country Comparison :: Natural gas – production]. CIA World Factbook. Retrieved 17 February 2012.</ref> உருசியா, பின்வரும் நாடுகளுடன் தன் நில எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது (வடமேற்கிலிருந்து தென்கிழக்கு முகமாக): [[நார்வே]], [[பின்லாந்து]], [[எஸ்டோனியா]], [[லத்வியா]], [[லித்துவானியா]], [[போலந்து]], [[பெலாரஸ்]], [[உக்ரைன்]], [[ஜார்ஜியா]], [[அசர்பைஜான்]], [[கசகஸ்தான்]], [[சீன மக்கள் குடியரசு|சீனா]], [[மங்கோலியா]] மற்றும் [[வட கொரியா]].
 
உருசியாவின் வரலாறு, கி.பி 3ம் முதல் 8ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க ஒரு குழுவினராக உருவாகிய கிழக்கு சிலேவ் என்னும் பூர்வகுடிமக்களுடன் தொடங்குகிறது.<ref name=autogenerated1>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/513251/Russia/38597/The-Indo-European-group?anchor=ref422350|title=Russia|publisher=Encyclopædia Britannica|accessdate=31 January 2008}}</ref> அதன் பிறகு இப் பகுதியில், வைக்கிங் என்னும் மறக் குடியினர் 9வது நூற்றாண்டில் "ருஸ்" என்னும் நடுக் கால நாட்டை உருவாக்கி ஆண்டு வந்தனர். 988 ஆம் ஆண்டில், இந்த அரசு பைசன்டியப் பேரரசிடம் இருந்து பெற்ற பழமைக் கோட்பாட்டுக் கிறித்தவத்தைத் தழுவிக்கொண்டது.<ref name=Curtis/> இது, பைசன்டியப் பண்பாடும், சிலாவியப் பண்பாடும் இணைந்து, அடுத்த ஆயிரவாண்டு காலத்தில் இடம்பெற்ற [[உருசியப் பண்பாடு|உருசியப் பண்பாட்டு]] வளர்ச்சியின் தொடக்கமாக அமைந்தது.<ref name=Curtis>{{cite web|last=Excerpted from Glenn E. Curtis (ed.)|title=Russia: A Country Study: Kievan Rus' and Mongol Periods|publisher=Washington, DC: Federal Research Division of the Library of Congress|year=1998|url=http://www.shsu.edu/~his_ncp/Kievan.html|accessdate=20 July 2007}}</ref> சில காலங்களின் பின் "ருஸ்" நாடு பல சிறிய நாடுகளாகச் சிதைவுற்றது. இவற்றுட் பலவற்றைக் கைப்பற்றிக்கொண்ட மங்கோலியர் அவற்றைத் தமது சிற்றரசுகளாக ஆக்கிக்கொண்டனர்.<ref>''The Mongol empire: its rise and legacy'', By [[Michael Prawdin]], Gérard Chaliand, (2005) page 512-550</ref> பின்னர், [[மாசுக்கோ பெரும் டச்சி]] (''Grand Duchy of Moscow'') படிப்படியாக அருகில் இருந்த "ருஸ்" சிற்றரசுகளையும் ஒன்றிணைத்து விடுதலை பெற்றுக்கொண்டு "கீவிய ருஸ்" பகுதியின் பண்பாட்டு, அரசியல் மரபுகளின் முன்னணிச் சக்தியாக உருவானது. பிற நாடுகளைக் கைப்பற்றுவது மூலமும், பிற நிலப் பகுதிகளை இணைத்துக் கொள்வதன் மூலமும் பெருமளவு விரிவடைந்த இது 18 ஆம் நூற்றாண்டில் உருசியப் பேரரசாக உருவானது. வரலாற்றில் மூன்றாவது பெரிய பேரரசான இது, ஐரோப்பாவின் [[போலந்து]] முதல் வட அமெரிக்காவில் உள்ள [[அலாசுக்கா]] வரை பரந்து இருந்தது.<ref>{{cite journal|author=Rein Taagepera|authorlink=Rein Taagepera|title=Expansion and Contraction Patterns of Large Polities: Context for Russia|journal=[[International Studies Quarterly]]|volume=41|issue=3|pages=475–504|year= 1997|doi=10.1111/0020-8833.00053}}</ref><ref>Peter Turchin, Thomas D. Hall and Jonathan M. Adams, "[http://jwsr.ucr.edu/archive/vol12/number2/pdf/jwsr-v12n2-tah.pdf East-West Orientation of Historical Empires]", ''Journal of World-Systems Research'' Vol. 12 (no. 2), pp. 219–229 (2006).</ref>
 
உருசியா கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் உருசியப் பேரரசாகவும், [[சோவியத் ஒன்றியம்]] மூலமாகவும் உலகின் வல்லரசுகளில் ஒன்றாக வளர்ந்தது. 1917ல் உருசியப் புரட்சியைத் தொடர்ந்து உலகின் முதல் அரசியல் சட்ட சோசலிச நாடாக உருவான 15 குடியரசுகளை உள்ளடக்கிய சோவியத் யூனியனில் பெரிய பகுதியாகவும் முன்னணி உறுப்பாகவும் உருசியா இருந்தது.<ref>{{cite book|author1=Jonathan R. Adelman|author2=Cristann Lea Gibson|title=Contemporary Soviet Military Affairs: The Legacy of World War II|url=http://books.google.com/books?id=XXcVAAAAIAAJ&pg=PA4+|accessdate=15 June 2012|date=1 July 1989|publisher=Unwin Hyman|isbn=978-0-04-445031-3|page=4}}</ref> [[சோவியத் ஒன்றியம்]] உலகின் முதல் மற்றும் பெரிய ஜனநாயக சோசலிச நாடாகும். அப்போதைய இரண்டு [[வல்லரசு]]களில் ஒன்றாகவும் இருந்தது. இரண்டாம் உலகப் போரில் கூட்டுப் படைகளின் வெற்றியில் சோவியத் ஒன்றியத்தின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது.<ref>{{Cite book|author=Weinberg, G.L.|title=A World at Arms: A Global History of World War II|isbn=0-521-55879-4|publisher=Cambridge University Press|page=264|year=1995}}</ref><ref>Rozhnov, Konstantin, [http://news.bbc.co.uk/2/hi/europe/4508901.stm Who won World War II?]. BBC.</ref> சோவியத் ஒன்றியக் காலத்தில் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டன. உலகின் முதலாவது மனித விண்வெளிப் பறப்பும் இவற்றுள் அடங்கும். 1991ல் சோவியத் யூனியன் கலைக்கப்படடதால் பிறகு மீண்டு உருசியா குடியரசாக உருவானது. எனினும், உருசியாவே கலைக்கப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் சட்டத் தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
கீவிய ரசியாவை ஆண்ட ரூரிக் வம்சத்தினரிடையேயான தொடர்ச்சியான உட்போர்கள் காரணமாக [[நிலமானிய முறைமை|மானியமுறைமையும்]] அதிகாரப் பரவலாக்கமும் ஏற்பட்டது. கீவின் அதிகாரம் நலிவடைந்ததால் வடகிழக்கில் விளாடிமிர்-சுஸ்டால், வடமேற்கில் நோவோகொரட் குடியரசு, தென்மேற்கில் கலிசியா-வொல்கினியா போன்ற சுயாதீன அரசுகள் உருவாகின.
 
இறுதியாக 1237-40ல்1237–40ல் மொங்கோலியரின் படையெடுப்பினால் கீவிய ரசியா பிளவடைந்தது.<ref>{{Cite book|author=Hamm, M.F.|title=Kiev: A Portrait, 1800–1917|publisher=Princeton University Press|isbn=0-691-02585-1|year=1995}}</ref> இது கீவின் அழிவுக்கும்,<ref>{{cite web|url=https://tspace.library.utoronto.ca/citd/RussianHeritage/4.PEAS/4.L/12.III.5.html |title=The Destruction of Kiev |publisher=Tspace.library.utoronto.ca |accessdate=19 January 2011}}</ref> ரசியாவின் அரைவாசி மக்களின் அழிவுக்கும்<ref>{{cite web|url=http://www.parallelsixty.com/history-russia.shtml|title=History of Russia from Early Slavs history and Kievan Rus to Romanovs dynasty|publisher=Parallelsixty.com|accessdate=27 April 2010}}</ref> காரணமானது. தாத்தார்கள் எனப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் கோல்டன் ஹோர்ட் எனப்பட்ட நாட்டை உருவாக்கினர். இவர்கள் ரசியச் சிற்றரசுகளைக் கொள்ளையடித்ததோடு, ரசியாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆண்டனர்.<ref>{{Cite book|author=Рыбаков, Б. А.|title=Ремесло Древней Руси|year=1948|pages=525–533, 780–781}}</ref>
 
கலிசியா-வொல்கினியா போலிய-லிதுவேனிய பொதுநலவாயத்தினுள் உள்வாங்கிக்கொள்ளப்பட்டதோடு, கீவின் எல்லைப்புறத்தில் அமைந்திருந்த விளாடிமிர்-சுஸ்டால் மற்றும் நோவோகொரட் குடியரசு ஆகிய பகுதிகளில் மொங்கோலியர் ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு பகுதிகளுமே நவீன ரசிய நாட்டுக்கான அடிப்படையாகும்.<ref name=Curtis/> மொங்கோலியப் படையெடுப்பின்போது நோவோகொரட் மற்றும் ஸ்கோவ் ஆகியன சிறிதளவு சுயாட்சி அதிகாரம் உடையனவாக இருந்தன. மேலும் இவை நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைபெற்ற அட்டூழியங்களிலிருந்தும் தப்பிக்கொண்டன. அலெக்சாண்டர் நெவ்ஸ்கி என்ற இளவரசனால் வழிநடத்தப்பட்ட நோவோகொராடியர்கள் 1240ல் நடைபெற்ற நேவா போரின் மூலம் சுவீடிய ஆக்கிரமிப்பையும், 1242ல் நடைபெற்ற ஐஸ் போரின் மூலம் ஜெர்மானிய சிலுவைப் போராளிகளின் ஆக்கிரமிப்பையும் தடுத்து, வடக்கு ரசியாவை ஆக்கிரமிக்கும் அவர்களது முயற்சியையும் முறியடித்தனர்.
[[படிமம்:Ivan the Terrible (cropped).JPG|thumb|upright|left|விக்டர் வாஸ்னெட்சோவால் வரையப்பட்ட சார் பயங்கர இவான்]]
 
மூன்றாம் ரோமச் சிந்தனைகளில் ஏற்பட்ட வளர்ச்சியால், பெரும் டியூக்கான 4ம் இவான், ("மிகச்சிறந்த"<ref>Frank D. McConnell. [http://books.google.com/books?id=rqhZAAAAMAAJ Storytelling and Mythmaking: Images from Film and Literature.] [[ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்]], 1979. ISBN 0-19-502572-5; p. 78: "But Ivan IV, Ivan the Terrible, or as the Russian has it, ''Ivan Groznyi'', "Ivan the Magnificent" or "Ivan the Awesome," is precisely a man who has become a legend"</ref>) 1547ல், ரசியாவின் முதல் சார் ("சீசர்") ஆக உத்தியோகபூர்வமாக முடிசூட்டப்பட்டான். சார் மன்னன் ஒரு புதிய சட்டத் தொகுப்பை (1550ன் சுடெப்னிக்) வெளியிட்டான். இதன் மூலம் முதலாவது ரசிய மானியமுறை அமைப்பு (செம்ஸ்கி சொபோர்) உருவாக்கப்பட்டதோடு கிராமியப் பகுதிகளுக்கு உள்ளூர் சுயாட்சி அமைப்பொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref>{{Cite book|author=Solovyov, S.|title=History of Russia from the Earliest Times|publisher=AST|year=2001|pages=562–604|volume=6|isbn=5-17-002142-9}}</ref><ref>{{Cite book|author=Skrynnikov, R.|title=Ivan the Terrible|publisher=Academic Intl Pr|year=1981|page=219|isbn=0-87569-039-4}}</ref>
 
இவனது நீண்ட ஆட்சிக்காலத்தின்போது, மூன்று தாத்தார் கானேட்டுகளான (கோல்டன் ஹோர்டின் சிதறிய பகுதிகள்), வொல்கா நதிக்கருகில் இருந்த கசான் மற்றும் அஸ்ட்ராகான் என்பவற்றையும், தென்மேற்கு சைபீரியாவிலிருந்த சைபீரியன் கானேட்டையும் இணைத்த பயங்கர இவான், ஏற்கனவே பெரிதாக இருந்த ரசியப் பகுதியை கிட்டத்தட்ட இருமடங்காக்கினான். இதனால், 16ம் நூற்றாண்டின் முடிவில் ரசியாவை பல்லின, பல்சமய மற்றும் [[ஒன்றுக்கு மேற்பட்ட கண்டங்களில் அமைந்துள்ள நாடுகளின் பட்டியல்|கண்டம் கடந்த]] ஒரு நாடாக்கினான்.
[[படிமம்:Minin & Pozharskiy 01.JPG|upright|thumb|மொஸ்கோவிலுள்ள, மினின் மற்றும் பொசார்க்கி ஆகியோருக்கான நினைவுச்சின்னம்]]
 
இவானின் மகன்களின் மரணம் காரணமாக 1598ல் பண்டைய ரூரிக் வம்சம் முடிவு பெற்றது. மேலும் 1601-031601–03 பஞ்சம்<ref>{{Cite book|author=Borisenkov E, Pasetski V.|title=The thousand-year annals of the extreme meteorological phenomena|isbn=5-244-00212-0|page=190}}</ref> உள்நாட்டுக் கலகத்துக்கு வழிகோலியது. 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், குழப்ப காலத்தின் போது, ஆட்சி உரிமையாளர்களினதும், வெளிநாட்டினரினதும் குறுக்கீடுகள் ஏற்பட்டன.<ref>{{Cite book|author=Solovyov, S.|title=History of Russia from the Earliest Times|publisher=AST|year=2001|volume=7|pages=461–568|isbn=5-17-002142-9}}</ref> போலிய-லிதுவேனிய பொதுநலவாயம் மொஸ்கோ உள்ளிட்ட ரசியாவின் பகுதிகளை ஆக்கிரமித்தது. 1612ல் இரண்டு தேசிய வீரர்களான குஸ்மா மினின் என்ற வணிகனாலும், திமித்ரி பொசார்கி என்ற இளவரசனாலும் வழிநடத்தப்பட்ட ரசியத் தொண்டர் படையினால் போலியர்கள் பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். செம்ஸ்கி சொபோரின் தீர்மானம் காரணமாக 1613ல் ரோமனோவ் வம்சம் அதிகாரத்துக்கு வந்தது. இதனால் நாடு நெருக்கடியிலிருந்து சிறிதுசிறிதாக மீண்டது.
 
17ம் நூற்றாண்டில் கொசக்குகளின் காலத்தில் ரசியா தனது நிலப்பரப்பை தொடர்ந்தும் விஸ்தரிக்கத் தொடங்கியது. கொசக்குகள் என்போர், கொள்ளையர் மற்றும் புதுநில ஏகுனர்கள் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவ சமூகங்கள் ஆவர். 1648ல், கெமெல்நைட்ஸ்கி கிளர்ச்சியின்போது போலந்து-லிதுவானியாவுக்கு எதிராக, [[உக்ரேன்|உக்ரேனின்]] விவசாயிகள் சபோரோசியன் கொசக்குகளில் இணைந்து கொண்டனர். இதற்குக் காரணம், போலிய ஆட்சியின்கீழ் சமூக, மத அடக்குமுறைகளுக்கு உள்ளானமையேயகும்.1654ல் உக்ரேனிய தலைவரான போடான் கெமெல்நைட்ஸ்கி, உக்ரேன் ரசிய சார் மன்னரான முதலாம் அலெக்சியின் பாதுகாப்பில் இருப்பதற்கு சம்மதித்தார். அலெக்சி இதற்கு சம்மதித்ததால், இன்னொரு ரசிய-போலிய யுத்தம் (1654–1667) ஏற்பட்டது. இறுதியில், நீப்பர் நதியை எல்லையாகக் கொண்டு உக்ரேன் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மேற்குப்பகுதி (அல்லது வலது கரை) போலிய கட்டுப்பாட்டிலும், கிழக்குப்பகுதி (அல்லது இடதுகரை மற்றும் கீவ்) ரசிய கட்டுப்பாட்டிலும் இருந்தன. பின்பு, 1670–71ல் ஸ்டென்கா ரசினால் வழிநடத்தப்பட்ட டொன் கொசக்குகள் வொல்கா பகுதியில் பாரிய கிளர்ச்சியொன்றை ஆரம்பித்தனர். ஆயினும் சாரின் படைகள் கலகத்தை வெற்றிகரமாக அடக்கின.
[[படிமம்:Peter der-Grosse 1838.jpg|left|thumb|upright|மகா பீட்டர், ரசியாவின் முதலாவது பேரரசன்]]
 
1721ல், [[ரஷ்யாவின் முதலாம் பீட்டர்|மகா பீட்டரின்]] கீழ், ரசியா ஒரு பேரரசானதுடன், அறியப்பட்ட உலக வல்லரசானது. 1682இலிருந்து 1725 வரை அரசாண்ட பீட்டர், பெரும் வடக்குப் போரில் சுவீடனைத் தோற்கடித்தான். மேலும், மேற்கு கரேலியா, இங்கிரியா (குழப்பகாலத்தின் போது ரசியாவால் இழக்கப்பட்ட இரு பிரதேசங்கள்),<ref>{{Cite book|author=Solovyov, S.|title=History of Russia from the Earliest Times|publisher=AST|year=2001|volume=9, ch.1|url=http://militera.lib.ru/common/solovyev1/09_01.html|isbn=5-17-002142-9|accessdate=27 December 2007}}</ref> எஸ்ட்லாந்து மற்றும் லிவ்லாந்து ஆகியவற்றை பெற்றுக்கொண்டான். இதன்மூலம் ரசியாவுக்கு கடல் வழிப் போக்குவரத்தும், கடல் வணிகமும் மேற்கொள்ள முடியுமாயிருந்தது.<ref>{{Cite book|author=Solovyov, S.|title=History of Russia from the Earliest Times|publisher=AST|year=2001|volume=15, ch.1|url=http://militera.lib.ru/common/solovyev1/15_01.html}}</ref> [[பால்டிக் கடல்|பால்டிக்]] கடற்கரையில் பீட்டர் புதிய தலைநகரான [[சென் பீட்டர்ஸ்பேர்க்|செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை]] நிறுவினான். இது பிற்காலத்தில் ரசியாவின் ''ஐரோப்பாவுக்கான நுழைவாயில்'' என அழைக்கப்பட்டது. பீட்டரின் பாரிய மறுசீரமைப்புக்கள் ரசியாவில் குறிப்பிடத்தக்க மேற்கு ஐரோப்பிய கலாசாரத் தாக்கங்களை ஏற்படுத்தின.
 
1741–62 வரை, முதலாம் பீட்டரின் மகளான [[எலிசவேத்தா பெட்ரோவ்னா|எலிசபெத்தின்]] ஆட்சிக்காலத்தில் ரசியா [[ஏழாண்டுப் போர்|ஏழாண்டுப் போரில்]] பங்கேற்றது (1756–63). இந்த போராட்டத்தின்போது, ரசியா கிழக்குப் பிரசியாவையும், மேலும் பெர்லினையும் சிறிதுகாலம் இணைத்திருந்தது. எவ்வாறாயினும், எலிசபெத்தின் மரணத்தின் பின், கைப்பற்றப்பட்ட அனைத்துப் பிரதேசங்களும், ரசியாவின் [[உருசியாவின் மூன்றாம் பீட்டர்|மூன்றாம் பீட்டரினால்]] [[பிரசியா|பிரசியப் பேரரசுக்கு]] திருப்பி வழங்கப்பட்டது.
 
1762–96 வரை ஆண்ட [[உருசியாவின் இரண்டாம் கத்தரீன்|இரண்டாம் கத்தரீன்]] ரசிய அறிவொளிக் காலத்துக்கு தலைமை தாங்கினார். இவர் போலிய-லிதுவானிய பொதுநலவாயத்தின் மீது ரசியாவின் ஆதிக்கத்தை நிலை நாட்டியதோடு, போலந்து பிரிவினையின் போது, இதன் பெரும்பாலான பகுதிகளை ரசியாவுடன் இணைத்துக்கொண்டார். இதன்மூலம் ரசியாவின் மேற்கெல்லை மத்திய ஐரோப்பா வரை பரந்தது. ஒட்டோமன் பேரரசுக்கெதிரான ரசிய-துருக்கியப் போர்களின் வெற்றியின் பின் கிரிமியன் கானேட்டைத் தோற்கடித்ததன் மூலம் அவர் ரசியாவின் தென் எல்லையை கருங்கடல் வரை விரிவு படுத்தினார். 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஒட்டோமன்களுக்கெதிரான வெற்றிகளைத் தொடர்ந்து, ட்ரான்ஸ்காக்கேசியாவின் சில பகுதிகளையும் பெற்றுக்கொண்டது. முதலாம் அலெக்சாண்டரின் (1801-251801–25), 1809ல், பலவீனமான சுவீடனிடமிருந்தான [[பின்லாந்து|பின்லாந்தின்]] பறித்தெடுப்பு, 1812ல், ஒட்டோமன்களிடமிருந்தான பெஸ்ஸராபியாவின் பறித்தெடுப்பு என, இவ் விரிவுபடுத்தல் தொடர்ந்தது. இதேவேளை ரசியர்கள் அலாஸ்காவில் தமது குடியேற்றங்களை ஏற்படுத்தியதோடு, கலிபோர்னியாவிலும் கூட (ஃபோர்ட் ரொஸ்) தமது குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொண்டனர்.
 
1803–06 வரை முதலாவது ரசிய உலகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. பிற்காலத்திலும் குறிப்பிடத்தக்க கடற்பயணங்கள் சிலவும் மேற்கொள்ளப்பட்டன. 1820ல் ஒரு ரசிய நாடுகாண் பயணத்தின் மூலம் [[அண்டார்டிக்கா]] கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது.
நிக்கலசின் பின் ஆட்சிக்கு வந்த [[இரண்டாம் அலெக்சாண்டர்]] (1855–81) நாட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தினார். இவற்றுள் 1861ன் அடிமைத்தன விடுதலை மறுசீரமைப்பு குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பாரிய மாற்றங்கள் கைத்தொழில்மயமாக்கத்தை ஊக்குவித்ததுடன், ரசிய ராணுவத்தையும் நவீனமயப் படுத்தியது. இதன் மூலம் ரசிய ராணுவம் 1877–78 ரசிய-துருக்கிய யுத்தத்தின் போது, [[பல்கேரியா]]வை ஒட்டோமன் ஆதிக்கத்திலிருந்து வெற்றிகரமாக விடுவித்தது.
 
19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்வேறு சோசலிச இயக்கங்கள் ரசியாவில் தோற்றம் பெற்றன. 1881ல் இரண்டாம் அலெக்சாண்டர் புரட்சியாளர்களால் கொல்லப்பட்டார். அவரது மகனான மூன்றாம் அலெக்சாண்டர் (1894–94) ஆட்சிக்காலம் மிகவும் சமாதானமானதும், தாராளமயம் குறைந்ததுமாக இருந்தது. கடைசி ரசியப் பேரரசரான [[ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ்|இரண்டாம் நிக்கலஸ்]] (1894-19171894–1917) [[உருசியப் புரட்சி, 1905|1905ன் ரசியப் புரட்சியைத்]] தடுக்க முடியாதவராக இருந்தார். இப்புரட்சிக்குத் தூண்டுகோலாக இருந்தது ரசிய-சப்பானியப் போரில் ரசியாவின் தோல்வியாகும். இப்புரட்சி நிகழ்வுகள் [[இரத்த ஞாயிறு (1905)|இரத்த ஞாயிறு]] என அழைக்கப்படுகிறது. கிளர்ச்சி கைவிடப்பட்டது. ஆனால், அரசாங்கம் [[கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்|பேச்சுச் சுதந்திரம்]], [[கூடல் சுதந்திரம்|ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம்]], அரசியல் கட்சிகளை சட்டபூர்வமாக்கல் மற்றும் சட்டவாக்கக் கழகமொன்றை உருவாக்குதல் (ரசியப் பேரரசின் டூமா) போன்ற பாரிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஸ்டொலிபின் விவசாயச் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து, [[சைபீரியா]]வுக்கான குடிபெயர்வு வேகமாக அதிகரித்தது. 1906க்கும் 1914க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான குடியேற்றக்காரர்கள் இந்தப்பகுதிக்கு வந்தனர்.<ref>N. M. Dronin, E. G. Bellinger (2005). "''[http://books.google.com/books?id=9a5j_JL6cqIC&pg=PA38 Climate dependence and food problems in Russia, 1900–1990: the interaction of climate and agricultural policy and their effect on food problems]''". Central European University Press. p. 38. ISBN 963-7326-10-3</ref>
 
1914ல் ரசியாவின் கூட்டாளியான [[செர்பியா]]வுக்கு எதிராக ஆஸ்திரியா-ஹங்கேரி போர்ப் பிரகடனம் செய்ததையடுத்து, ரசியா [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலக யுத்தத்தினுள்]] பிரவேசித்தது. இதன் முக்கூட்டு நட்பு அணிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த வேளையில், பல்வேறு போர்முனைகளில் போராடவேண்டியிருந்தது. 1916ல் ரசிய ராணுவத்தின் பிரசிலோவ் தடுப்பு நடவடிக்கை மூலமாக ஆஸ்திரியா-ஹங்கேரியின் ராணுவம் கிட்டத்தட்ட முற்றாகவே அழிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், போர்ச் செலவுகள், உயர் இழப்புகள், ஊழல் பற்றிய வதந்தி மற்றும் தேசத்துரோகம் என்பன காரணமாக ஆட்சியாளருக்கெதிரான மக்களின் அவநம்பிக்கை அதிகரித்தது. இத்தகைய நடவடிக்கைகள் 1917ல் இரு தடவைகளில் நடந்த [[ரஷ்யப் புரட்சி (1917)|ரசியப் புரட்சிக்கான]] சூழலை உருவாக்கியது.
டிசம்பர் 30, 1922ல், ரசிய சோவியத் கூட்டாட்சிச் சோசலிசக் குடியரசு (அந்த நேரத்தில் ''ரசிய சோசலிச கூட்டாட்சி சோவியத் குடியரசு'' என அழைக்கப்பட்டது), உக்ரேனிய, பெலாரசிய மற்றும் ட்ரான்ஸ்காக்கேசிய சோவியத் சோசலிசக் குடியரசுகளுடன் இணைந்து [[சோவியத் ஒன்றியம்|சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம்]] அல்லது சோவியத் ஒன்றியத்தை உருவாக்கிக் கொண்டன. சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தை உருவாக்கிய 15 குடியரசுகளில், ரசிய சோவியத் சோசலிசக் கூட்டுக் குடியரசே பரப்பளவில் மிகவும் பெரியதாகும். மேலும், இது சோவியத் ஒன்றியத்தின் மொத்த சனத்தொகையின் அரைவாசியிலும் மேலதிகமான சனத்தொகையையும் கொண்டிருந்தது. இதுவே 69-வருடகால ஒன்றிய வரலாற்றில் முக்கிய பங்களிப்புச் செய்துள்ளது.
 
1924ல் லெனினின் இறப்பைத் தொடர்ந்து, ட்ரொய்க்கா எனப்பட்ட குழுவொன்று சோவியத் ஒன்றியத்தை ஆட்சி புரிய அமர்த்தப்பட்டது. எவ்வாறாயினும், கொமியூனிசக் கட்சியின் தெரிவுசெய்யப்பட்ட பொதுச்செயலாளரான [[ஜோசப் ஸ்டாலின்]], அனைத்து எதிர்ப்புக் குழுக்களையும் தனது கட்சிக்குள் இணைத்துக்கொண்டு, பெரும்பாலான அதிகாரங்களைத் தன்வசப்படுத்திக் கொண்டார். 1929ல், உலகப் புரட்சியின் முக்கிய ஆதரவாளரான, [[லியோன் ட்ரொட்ஸ்கி]] சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் ஸ்டாலினின் ஒரு நாட்டில் சோசலிசம் எனும் கருத்து முன்வைக்கப்பட்டது. [[பெரும் துப்புரவாக்கம்|பெரும் துப்பரவாக்கத்தின்போது]], போல்செவிக் கட்சிக்குள் காணப்பட்ட உட்பூசல் உச்சநிலையை அடைந்தது. 1937-381937–38 வரையான இந்த அடக்குமுறை வாய்ந்த காலகட்டத்தில், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பலாத்கார ஆட்சி மாற்றத்துக்கு திட்டம் தீட்டிய இராணுவத் தலைவர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.<ref>Abbott Gleason (2009). ''[http://books.google.com/books?id=JyN0hlKcfTcC&pg=PA373 A Companion to Russian History]''. Wiley-Blackwell. p. 373. ISBN 1-4051-3560-3</ref>
 
[[படிமம்:RIAN archive 93172 Defenders of Leningrad.jpg|thumb|left|[[லெனின்கிராட் முற்றுகை|லெனின்கிராட்டின் பாதுகாவலர்கள்]]]]
 
ஸ்டாலினின் தலைமைத்துவத்தின் கீழ், அரசாங்கம் [[திட்டமிட்ட பொருளாதாரம்]], பெரும்பாலும் கிராமிய நாடாக இருந்த ரசியாவில் கைத்தொழில்மயமாக்கம் மற்றும் [[சோவியத் ஒன்றியத்தின் கூட்டுப் பண்ணைத் திட்டம்|விவசாயக் கூட்டுப் பண்ணைகள்]] என்பவற்றைச் செயற்படுத்தியது. விரைவான பொருளாதார மற்றும் சமூக மாற்றங்கள் நிறைந்த இக்காலப்பகுதியில், மில்லியன் கணக்கான மக்கள் தொழிலாளர் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.<ref name="Getty">Getty, Rittersporn, Zemskov. Victims of the Soviet Penal System in the Pre-War Years: A First Approach on the Basis of Archival Evidence. The American Historical Review, Vol. 98, No. 4 (Oct. 1993), pp. 1017–49.</ref> இவர்களுள் ஸ்டாலினின் ஆட்சியை எதிர்த்த அரசியல் கைதிகளும் அடங்குவர். மேலும் மில்லியன் கணக்கானோர், சோவியத் ஒன்றியத்தின் ஒதுங்கிய பகுதிகளுக்கு நாடுகடத்தப்பட்டனர்.<ref name="Getty" /> கடுமையான சட்டங்கள் மற்றும் வரட்சி ஆகியவற்றுடன் நாட்டின் விவசாயத்தில் ஏற்பட்ட இடைக்காலச் சிதைவு காரணமாக 1932-331932–33 காலப்பகுதியில் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது.<ref>[[R.W. Davies]], [[S.G. Wheatcroft]] (2004). ''The Years of Hunger: Soviet Agriculture, 1931–33'', pp. 401.</ref> எவ்வாறாயினும், பாரிய இழப்புக்களுடன், குறுகிய காலத்தில், சோவியத் ஒன்றியம் பாரிய விவசாயப் பொருளாதாரச் சமூகத்திலிருந்து, முக்கிய கைத்தொழிற் சக்தியாக மாறியது.
 
[[அடோல்ப் ஹிட்லர்|அடோல்ப் ஹிட்லரின்]] [[ரூர்]], ஆஸ்திரியா, மற்றும் இறுதியாக [[செக்கோசிலோவாக்கியா]] ஆகியவற்றின் இணைப்பின் மீதான பெரிய பிரித்தானியாவினதும், பிரான்சினதும் அமைதிக் கொள்கை காரணமாக [[நாசி ஜெர்மனி]]யின் பலம் அதிகரித்தது. இதனால், சோவியத் ஒன்றியத்தின் மீது போர் அச்சுறுத்தல் காணப்பட்டது. இதேவேளை [[ஜெர்மன் ரெய்க்]], சப்பானியப் பேரரசுடன் கூட்டுச் சேர்ந்தது. 1938–39 வரையான சோவியத்-சப்பானியப் போர்களின் மூலம் சப்பான் தூரக் கிழக்கில், சோவியத் ஒன்றியத்தின் முக்கிய எதிரியாக இருந்தது.
ஆகத்து 1939ல், பிரித்தானியா மற்றும் பிரான்சுடன் நாசிச எதிர்ப்புக் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் தோல்வியடைந்ததாலும், மேற்கத்திய சக்திகளின் நாசி ஜெர்மனியுடனான அமைதிக் கொள்கை காரணமாகவும், சோவியத் அரசாங்கம் ஜெர்மனியுடன் அமைதியான தொடர்புகளைக் கட்டியெழுப்ப முடிவு செய்தது. இதன்படி, இரு நாடுகளுக்கிடையிலும் போர் ஏற்படாதிருத்தல் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் தமது செல்வாக்குக்குட்பட்ட பிரதேசங்களை பிரித்துக்கொள்ளல் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் விதமாக [[மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம்]] கைச்சாத்திடப்பட்டது. [[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரின்]] தொடக்கத்தில், ஹிட்லர் போலந்து, பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளை கைப்பற்றிய வேளை, சோவியத் ஒன்றியம் தனது இராணுவத்தை கட்டியெழுப்புவதிலும், குளிர்காலப் போர் மற்றும் போலந்தின் சோவியத் படையெடுப்பு ஆகியவற்றின்போது இழந்த ரசியப் பேரரசின் முன்னைய பகுதிகளைப் பெற்றுக்கொள்வதிலும் வெற்றி கண்டது.
 
சூன் 22, 1941ல், நாசி ஜெர்மனி ஆக்கிரமிக்கா ஒப்பந்தத்தை உடைத்து, மனித வரலாற்றிலேயே மிகப் பெரியதும், மிகவும் பலமிக்கதுமான படையுடன் சோவியத் ஒன்றியத்தை ஆக்கிரமித்தது.<ref>{{cite web| title = World War II| publisher = Encyclopædia Britannica | accessdate =9 March 2008 | url = http://www.britannica.com/EBchecked/topic/648813/World-War-II}}</ref> இது இரண்டாம் உலகப்போரின் [[கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|முக்கிய களமாக]] மாறியது. ஜெர்மனிய ராணுவம் ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், மொஸ்கோ போரின் போது அவர்களது தாக்குதல் தடைப்பட்டது. தொடர்ந்து, 1942-431942–43 குளிர்காலத்தில் நடைபெற்ற [[சுடாலின்கிரட் சண்டை|ஸ்டாலின்கிராட் போரிலும்]],<ref>{{cite web | url = http://www.britannica.com/EBchecked/topic/648813/World-War-II | publisher =Encyclopædia Britannica|accessdate=12 March 2008|title=The Allies' first decisive successes: Stalingrad and the German retreat, summer 1942 – February 1943}}</ref> 1943 கோடைகாலத்தில் நடைபெற்ற குர்ஸ்க் போரிலும் பாரிய தோல்வியைச் சந்தித்தனர். [[லெனின்கிராட் முற்றுகை]]யும் ஜெர்மனியரின் இன்னொரு தோல்வியாகும். இதன்போது, அந்நகரம் 1941-44வரை1941–44வரை ஜெர்மனிய, ஃபின்னியப் படைகளால், முற்றுகையிடப்பட்டது. பட்டினியால் வாடியபோதும், ஒரு மில்லியன் பேர் இறந்தபோதும், இந்நகரம் சரணடையவில்லை.<ref>[http://www.cambridge.org/gb/knowledge/isbn/item1173696/?site_locale=en_GB The Legacy of the Siege of Leningrad, 1941–1995]. Cambridge University Press.</ref> ஸ்டாலினின் நிர்வாகத்தின் கீழும், ஜோர்ஜி சுகோவ் மற்றும் கொன்ஸ்டான்டின் ரொகோஸ்சோவ்ஸ்கி போன்ற இராணுவத் தலைவர்களின் கீழும், சோவியத் படைகள், ஜெர்மனியரை 1944-45வரை கிழக்கைரோப்பா வழியாக விரட்டி, மே 1945ல் பெர்லினைக் கைப்பற்றின. ஆகஸ்ட் 1945ல் சோவியத் ராணுவம், சீனாவின் மன்சூக்குவோ மற்றும் [[வட கொரியா]]விலிருந்து சப்பானியரை வெளியேற்றி, சப்பானுக்கெதிரான நேச நாடுகளின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்தது.
 
இரண்டாம் உலகப்போரின் 1941-451941–45 காலப்பகுதி ரசியாவில் ''பெரும் நாட்டுப்பற்றுப் போர்'' எனக் குறிப்பிடப்படுகிறது. மனித வரலாற்றில் மிகவும் கொடூரமான இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்ற இப்போரில், 10.6&nbsp;மில்லியன் ராணுவத்தினரும், 15.9&nbsp;மில்லியன் மக்களும் கொல்லப்பட்டனர்.<ref>{{Cite book|author=Erlikman, V.|title=Poteri narodonaseleniia v XX veke : spravochnik|year=2004|id=Note: Estimates for Soviet World War II casualties vary between sources|isbn=5-93165-107-1|publisher=Russkai︠a︡ panorama|location=Moskva}}</ref> இது இரண்டாம் உலகப்போரின் மொத்த இழப்பில் மூன்றில் ஒரு பகுதியாகும். சோவியத் மக்களின் மொத்த மக்கள் இழப்பு இதனிலும் அதிகமாகும்.<ref>Geoffrey A. Hosking (2006). "''[http://books.google.com/books?id=CDMVMqDvp4QC&pg=PA242 Rulers and victims: the Russians in the Soviet Union]''". Harvard University Press. p. 242. ISBN 0-674-02178-9</ref> சோவியத் பொருளாதாரமும், உட்கட்டமைப்பும் பாரிய அழிவுக்குள்ளானது.<ref>{{cite web|title=Reconstruction and Cold War|publisher=Library of Congress|url=http://countrystudies.us/russia/12.htm|accessdate=27 December 2007}}</ref> ஆயினும் சோவியத் ஒன்றியம் மாபெரும் வல்லரசாக எழுச்சி பெற்றது.
 
போருக்குப் பின், [[செஞ்சேனை]], [[ஜெர்மன் சனநாயகக் குடியரசு|கிழக்கு ஜெர்மனி]] உட்பட கிழக்கு ஐரோப்பாவையே ஆக்கிரமித்துக் கொண்டது. தங்கியிருக்கும் சோசலிச அரசாங்கங்கள் கிழக்குப்பகுதிக் கண்காணிப்பு நாடுகளில் ஏற்படுத்தப்பட்டன. உலகின் இரண்டாவது அணுவாயுத நாடாக உருவான சோவியத் ஒன்றியம், [[வார்சோ உடன்படிக்கை]]யை உருவாக்கிக் கொண்டது. இதன் மூலம் ஐக்கிய அமெரிக்கா மற்றும் [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|நேட்டோ]] ஆகியவற்றுடன் [[பனிப்போர்]] என அறியப்பட்ட, உலக ஆதிக்கத்துக்கான போட்டியுள் இறங்கியது. உலகெங்குமுள்ள புரட்சிகர இயக்கங்களுக்கு, சோவியத் ஒன்றியம் தனது ஆதரவை வழங்கியது. இவற்றுள் புதிதாக உருவான [[சீன மக்கள் குடியரசு]], [[வட கொரியா|கொரிய சனநாயக மக்கள் குடியரசு]] மற்றும் [[கியூபா|கியூபக் குடியரசு]] போன்றனவும் அடங்கும். குறிப்பிடத்தக்களவு சோவியத் வளங்கள், ஏனைய சோசலிச நாடுகளுக்கு, உதவியாக ஒதுக்கப்பட்டது.<ref>[http://rs6.loc.gov/cgi-bin/query/r?frd/cstdy:@field%28DOCID+su0391%29 Foreign trade] from ''A Country Study: Soviet Union (Former)''. [[Library of Congress Country Studies]] project.</ref>
1964ல் குருசேவின் ஓய்வைத் தொடர்ந்து, மீண்டும் கூட்டுத் தலைமை ஆட்சி நடைபெற்றது. இறுதியில் [[லியோனிட் பிரெஷ்னெவ்]] தலைவராக ஆனார். 1970கள் மற்றும் முன் 1980கள், தடங்கல் யுகம் என அழைக்கப்படுகிறது. இக்காலப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்ததோடு, சமூகக் கொள்கைகள் தடங்கலுற்றன. சோவியத் பொருளாதாரத்தைப் பகுதியளவில் [[பரவலாக்கம்|பன்முகப்படுத்தல்]] மற்றும் பெருங் கைத்தொழில் மற்றும் ஆயுத உற்பத்தியை, சிறுகைத்தொழில் மற்றும் நுகர்வோர் பண்டங்களாக மாற்றுதல் என்பவற்றை நோக்காகக் கொண்ட, 1965ன் கோசிஜின் சீர்திருத்தம் பழைமைவாத கொம்யூனிசத் தலைமையால் தடுக்கப்பட்டது.
 
1979ல், [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானில்]] கொம்யூனிஸ்டுகள் தலைமையிலான புரட்சியின் பின், புதிய தலைமையின் வேண்டுகோளுக்கிணங்க [[ஆப்கான் சோவியத் போர்|சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானினுள் நுழைந்தன]]. இதனால் ஆப்கானிஸ்தானின் வளங்கள் சுரண்டப்பட்டதோடு, எந்தவிதமான கருதத்தக்க அரசியல் திருத்தங்களும் ஏற்படவில்லை. இறுதியாக, சர்வதேச எதிர்ப்பு, (அமெரிக்க ஆதரவுடனான), கொம்யூனிச எதிர்ப்பு கெரில்லாப் போர் மற்றும் சோவியத் மக்களின் ஆதரவின்மை என்பன காரணமாக 1989ல் சோவியத் ராணுவம் ஆப்கானிஸ்தானிலிருந்து பின்வாங்கியது.
 
1985இலிருந்து, சோவியத் முறைமையில் தாராளவாத சீர்திருத்தங்களை ஏற்படுத்த விரும்பிய , இறுதி சோவியத் தலைவரான [[மிக்கைல் கோர்பச்சோவ்]], ''கிளாஸ்னொஸ்ட்'' (திறந்தநிலை) மற்றும் ''[[பெரஸ்ட்ரோயிகா]]'' (மீள்கட்டமைப்பு) ஆகிய கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத் தடங்கல் நிலையை முடிவுக்குக் கொண்டுவரவும், அரசாங்கத்தை சனநாயக மயப்படுத்தவும் அவர் முயற்சித்தார். எவ்வாறாயினும், இக்கொள்கைகள் காரணமாக வலுவான தேசியவாத மற்றும் பிரிவினைவாத இயக்கங்கள் தோன்றின. 1991க்கு முன், சோவியத் பொருளாதாரம் உலகளவில் இரண்டாவது நிலையில் காணப்பட்டது.<ref>{{cite web|url=http://www.umsl.edu/services/govdocs/wofact90/world12.txt|publisher=[[நடுவண் ஒற்று முகமை]]|accessdate=9 March 2008|title=1990 CIA World Factbook}}</ref> எனினும், அதன் இறுதிக் காலத்தில், பலசரக்குக் கடைகளில் பொருள் பற்றாக்குறையாலும், பாரிய பாதீட்டுப் பற்றாக்குறையாலும், பாரிய பணச்சுற்றோட்டம் காரணமாக பணவீக்கத்தாலும் அல்லலுற்றது.<ref>{{cite web|url=http://www.photius.com/countries/russia/economy/russia_economy_unforeseen_results_o~1315.html|title=Russia Unforeseen Results of Reform|publisher=The Library of Congress Country Studies; CIA World Factbook|accessdate=10 March 2008}}</ref>
[[படிமம்:Moscow, City May 2010 03.JPG|thumb|கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மொஸ்கோ சர்வதேச வர்த்தக மையம்]]
 
ரசிய வரலாற்றிலேயே முதலாவதாக, சூன் 1991ல் நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில், [[போரிஸ் யெல்ட்சின்]] சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சோவியத் ஒன்றியத்தின் சிதறலின் போதும், அதன் பின்னரும் தனியார்மயமாக்கல் மற்றும் சந்தை மற்றும் வர்த்தகத் தாராளமயமாக்கல் ஆகியவை உட்பட பாரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.<ref name=OECD/> இவற்றுள் ஐக்கிய அமெரிக்காவாலும், [[சர்வதேச நாணய நிதியம்|சர்வதேச நாணய நிதியத்தினாலும்]] பரிந்துரைக்கப்பட்ட, அதிர்ச்சி வைத்தியம் எனப்பட்ட விரைவான பொருளாதார மாற்றமும் அடங்கும்.<ref>{{Cite news|url=http://query.nytimes.com/gst/fullpage.html?res=9F0CEED91F39F932A15751C1A965958260|title= U.S. is abandoning 'shock therapy' for the Russians|author=Sciolino, E.|work=The New York Times|accessdate=20 January 2008|date=21 December 1993}}</ref> இம் மாற்றங்கள் காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால், 1990-951990–95 காலப்பகுதியில், [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]யிலும், கைத்தொழில் விளைபொருட்களிலும் 50% வீழ்ச்சி ஏற்பட்டது.<ref name=OECD/><ref>{{cite web|title=Russia: Economic Conditions in Mid-1996|publisher=Library of Congress|url=http://lcweb2.loc.gov/cgi-bin/query/r?frd/cstdy:@field(DOCID+ru0119)|accessdate=4 March 2011}}</ref>
 
தனியார்மயமாக்கலால், வணிக நிறுவனங்களின் கட்டுப்பாடு, அரசாங்க முகவர்களிடமிருந்து, அரச முறைமையில் தொடர்புகளைப் பேணிய தனியாரிடம் சென்றடைந்தது. பல புதிய செல்வந்த வணிகர்கள் பில்லியன் கணக்கான பணத்தையும் சொத்துக்களையும் நாட்டுக்கு வெளியில் எடுத்துச் சென்றமையால் பாரிய மூலதன வெளியேற்றம் ஏற்பட்டது.<ref>{{cite web|title=Russia: Clawing Its Way Back to Life (int'l edition)|work=BusinessWeek |url=http://www.businessweek.com/1999/99_48/b3657252.htm|accessdate=27 December 2007}}</ref> நாட்டினதும் பொருளாதாரத்தினதும் வீழ்ச்சியால், சமூக சேவைகள் சீர்குலைந்தன. பிறப்பு வீதம் குறைவடைந்து, இறப்பு வீதம் அதிகரித்தது.{{Citation needed|date=April 2012}} பிந்திய சோவியத் யுகத்தில் 1.5%மாக இருந்த வறுமை மட்டம், 1993ன் நடுப்பகுதியில் 39-49%மாக ஆகியது. இதனால் மில்லியன் கணக்கானோர் வறுமையில் மூழ்கினர்.<ref name=worldbank>{{Cite book|author=Branko Milanovic|title=Income, Inequality, and Poverty During the Transformation from Planned to Market Economy|publisher=The World Bank|year=1998|pages=186–189}}</ref> 1990களில் கடுமையான ஊழல் மற்றும் ஒழுங்கீனம், குற்றவியல் குழுக்களின் எழுச்சி மற்றும் வன்முறைகள் என்பன காணப்பட்டன.<ref>{{Cite journal|author=Jason Bush|title=What's Behind Russia's Crime Wave?|journal=BusinessWeek Journal|date=19 October 2006|url=http://www.businessweek.com/globalbiz/content/oct2006/gb20061019_110749_page_2.htm}}</ref>
உருசிய அரசியலமைப்பின் படி அந் நாடு சனாதிபதியை நாட்டுத் தலைவராகவும், [[பிரதம அமைச்சர்|பிரதம அமைச்சரை]] அரசுத் தலைவராகவும் கொண்ட ஒரு [[கூட்டாட்சி]], [[அரை-சனாதிபதி முறை]]க் குடியரசு ஆகும். உருசியக் கூட்டமைப்பு அடிப்படையில் பல கட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி ஆகும். இதில் கூட்டாட்சி அரசு மூன்று பிரிவுகளைக் கொண்டது:
 
* சட்டவாக்கம்,
* நிறைவேற்றல்,
* நீதி.
 
ஆறு ஆண்டுகள் பதவிக் காலத்தைக் கொண்ட சனாதிபதியை மக்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்கின்றனர். ஒருவர் இரண்டாவது முறையும் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்படலாம் எனினும், தொடர்ச்சியாக மூன்று முறை சனாதிபதியாக இருக்க முடியாது. அரசின் அமைச்சுக்களில் பிரதமர், அவரது துணை அமைச்சர்கள், அமைச்சர்கள், தெரிவு செய்யப்பட்ட பிறர் என்போர் அடங்குவர். பிரதமரின் ஆலோசனைக்கு இணங்க சனாதிபதி அமைச்சர்களுக்குப் பதவி வழங்குகிறார். பிரதமர் பதவிக்கு "டூமா"வின் சம்மதம் தேவை. உருசியாவில் உள்ள கட்சிகளுள், [[ஐக்கிய உருசியக் கட்சி]], [[உருசியக் கூட்டமைப்புப் பொதுவுடைமைக் கட்சி|பொதுவுடைமைக் கட்சி]], [[உருசியத் தாராண்மைவாத மக்களாட்சிக் கட்சி]], [[நீதிமுறை உருசியா]] ஆகியன அடங்கும்.
159

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2694993" இருந்து மீள்விக்கப்பட்டது