"உருசியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

7 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''உருசியா''' (''Russia'') அல்லது '''இரசியா''' என்பது வடக்கு [[யூரேசியா]]வில் அமைந்துள்ள உலகிலேயே நிலப்பரப்பில் யாவற்றினும் மிகப்பெரிய நாடாகும்.<ref name=britannica>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/513251/Russia|title=Russia|publisher=Encyclopædia Britannica|accessdate=31 January 2008}}</ref> இந்நாட்டின் முறைப்படியான பெயர் '''உருசியக் கூட்டமைப்பு''' என்பதாகும். தமிழில் இரசியா, இரச்சியா என்றும், ருஷ்யா என்னும் பெயர்களாலும் குறிக்கப்படுவது உண்டு.
 
உருசிய மொழியில் இது Росси́йская Федера́ция (''Rossiyskaya Federatsiya'' அல்லது ''ரசீஸ்க்கய ஃபெதராத்சியா'') அல்லது சுருக்கமாக '''உருசியா''' (உருசிய மொழியில்: Росси́я, ஆங்கில ஒலிபெயர்ப்பு: ''Rossiya'' அல்லது ''Rossija'') என அழைக்கப்படுகிறது. [[ஆசியா]], [[ஐரோப்பா]] ஆகிய கண்டங்களின் பெரு நிலப்பரப்பில் மிகவிரியும் ஒரு பெரும் நாடாக விளங்கும் இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 17,075,200 சதுரக் கிலோமீட்டர். [[பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்|பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியலைப் பார்த்தால்]], உருசியாவின் பரப்பளவு அடுத்த பெரிய நாடான [[கனடா]]வின் நிலப்பரப்பைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகமாகும். உருசியா, மக்கள்தொகை அடிப்படையில் உலகில் எட்டாவது இடம் வகிக்கிறது. ஏறத்தாழ 143-145 மில்லியன் மக்கள் (2002ன் கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 145,513,037) இந்நாட்டில் வாழ்கிறார்கள். ஏறக்குறைய வட [[ஆசியா]] முழுவதையும் மற்றும் 40% [[ஐரோப்பா]] பகுதிகளையும் உள்ளடக்கியது. 11 விதமான கால வேறுபாடுகளை (''Time zone'') யும், பரந்த வேறுபட்ட நிலப்பரப்பையும் கொண்டது. உருசியா உலகிலேயே அதிகமான அளவு [[காடு|காட்டு]] ஒதுக்கங்களைக் (8,087,900 ச. கிமீ) கொண்டுள்ளதுடன், இங்குள்ள ஏரிகள் உலக நன்னீர் நிலைகளின் பரப்பளவில் நான்கில் ஒரு பாகமாகவும் உள்ளன.<ref name="loc">{{cite web|last=Library of Congress|title=Topography and drainage|url=http://countrystudies.us/russia/23.htm|accessdate=26 December 2007}}</ref> உலகின் மிகக் கூடிய கனிம வளங்களும் ஆற்றல் வளங்களும் உருசியாவிலேயே உள்ளதுடன்<ref>{{cite web|url=http://www.unesco.ru/en/?module=pages&action=view&id=1|title=Commission of the Russian Federation for UNESCO: Panorama of Russia|publisher=Unesco.ru|accessdate=29 October 2010}}</ref> உலகின் மிகப் பெரிய எண்ணெய், இயற்கை வாயு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நாடாகவும் விளங்குகிறது.<ref name="IEA-Oil">[http://omrpublic.iea.org/omrarchive/18jan12sup.pdf International Energy Agency – Oil Market Report 18 January 2012]. Retrieved 20 February 2012.</ref><ref name="cia-gas">[https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2180rank.html Country Comparison :: Natural gas – production]. CIA World Factbook. Retrieved 17 February 2012.</ref> உருசியா, பின்வரும் நாடுகளுடன் தன் நில எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது (வடமேற்கிலிருந்து தென்கிழக்கு முகமாக): [[நார்வே]], [[பின்லாந்து]], [[எஸ்டோனியா]], [[லத்வியா]], [[லித்துவானியா]], [[போலந்து]], [[பெலாரஸ்]], [[உக்ரைன்]], [[ஜார்ஜியா]], [[அசர்பைஜான்]], [[கசகஸ்தான்]], [[சீன மக்கள் குடியரசு|சீனா]], [[மங்கோலியா]] மற்றும் [[வட கொரியா]].
 
உருசியாவின் வரலாறு, கி.பி 3ம் முதல் 8ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க ஒரு குழுவினராக உருவாகிய கிழக்கு சிலேவ் என்னும் பூர்வகுடிமக்களுடன் தொடங்குகிறது.<ref name=autogenerated1>{{cite web|url=http://www.britannica.com/EBchecked/topic/513251/Russia/38597/The-Indo-European-group?anchor=ref422350|title=Russia|publisher=Encyclopædia Britannica|accessdate=31 January 2008}}</ref> அதன் பிறகு இப் பகுதியில், வைக்கிங் என்னும் மறக் குடியினர் 9வது நூற்றாண்டில் "ருஸ்" என்னும் நடுக் கால நாட்டை உருவாக்கி ஆண்டு வந்தனர். 988 ஆம் ஆண்டில், இந்த அரசு பைசன்டியப் பேரரசிடம் இருந்து பெற்ற பழமைக் கோட்பாட்டுக் கிறித்தவத்தைத் தழுவிக்கொண்டது.<ref name=Curtis/> இது, பைசன்டியப் பண்பாடும், சிலாவியப் பண்பாடும் இணைந்து, அடுத்த ஆயிரவாண்டு காலத்தில் இடம்பெற்ற [[உருசியப் பண்பாடு|உருசியப் பண்பாட்டு]] வளர்ச்சியின் தொடக்கமாக அமைந்தது.<ref name=Curtis>{{cite web|last=Excerpted from Glenn E. Curtis (ed.)|title=Russia: A Country Study: Kievan Rus' and Mongol Periods|publisher=Washington, DC: Federal Research Division of the Library of Congress|year=1998|url=http://www.shsu.edu/~his_ncp/Kievan.html|accessdate=20 July 2007}}</ref> சில காலங்களின் பின் "ருஸ்" நாடு பல சிறிய நாடுகளாகச் சிதைவுற்றது. இவற்றுட் பலவற்றைக் கைப்பற்றிக்கொண்ட மங்கோலியர் அவற்றைத் தமது சிற்றரசுகளாக ஆக்கிக்கொண்டனர்.<ref>''The Mongol empire: its rise and legacy'', By [[Michael Prawdin]], Gérard Chaliand, (2005) page 512-550</ref> பின்னர், [[மாசுக்கோ பெரும் டச்சி]] (''Grand Duchy of Moscow'') படிப்படியாக அருகில் இருந்த "ருஸ்" சிற்றரசுகளையும் ஒன்றிணைத்து விடுதலை பெற்றுக்கொண்டு "கீவிய ருஸ்" பகுதியின் பண்பாட்டு, அரசியல் மரபுகளின் முன்னணிச் சக்தியாக உருவானது. பிற நாடுகளைக் கைப்பற்றுவது மூலமும், பிற நிலப் பகுதிகளை இணைத்துக் கொள்வதன் மூலமும் பெருமளவு விரிவடைந்த இது 18 ஆம் நூற்றாண்டில் உருசியப் பேரரசாக உருவானது. வரலாற்றில் மூன்றாவது பெரிய பேரரசான இது, ஐரோப்பாவின் [[போலந்து]] முதல் வட அமெரிக்காவில் உள்ள [[அலாசுக்கா]] வரை பரந்து இருந்தது.<ref>{{cite journal|author=Rein Taagepera|authorlink=Rein Taagepera|title=Expansion and Contraction Patterns of Large Polities: Context for Russia|journal=[[International Studies Quarterly]]|volume=41|issue=3|pages=475–504|year= 1997|doi=10.1111/0020-8833.00053}}</ref><ref>Peter Turchin, Thomas D. Hall and Jonathan M. Adams, "[http://jwsr.ucr.edu/archive/vol12/number2/pdf/jwsr-v12n2-tah.pdf East-West Orientation of Historical Empires]", ''Journal of World-Systems Research'' Vol. 12 (no. 2), pp. 219–229 (2006).</ref>
159

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2694994" இருந்து மீள்விக்கப்பட்டது