அனைத்து இறைக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 14:
இப்பதமானது ஆங்கிலத்தில் முதன் முதலில் ஐரிய எழுத்தாளர் ஜான் டோலேன்டினால் பயன்படுத்தப்பட்டது. இவரின் 1705இல் வெளியான ''Socinianism Truly Stated, by a pantheist'' என்னும் புத்தகத்தில் இவர் மீது இராப்சனினான தாக்கம் தென்படுகின்றது.<ref>R.E. Sullivan, "John Toland and the Deist controversy: A Study in Adaptations", Harvard University Press, 1982, p. 193</ref> இவர் 1720இல் இலத்தீனில் எழுதிய ''Pantheisticon: or The Form of Celebrating the Socratic-Society'' என்னும் புத்தகத்தில் இவர் ''எல்லாம் ஒன்றே, ஒன்றாலேயே எல்லாம் அமைந்துள்ளது .... இதுவே கடவுள், முடிவில்லா நிலை மற்றும் பிறப்பு இறப்பு அற்ற நிலையினை உடையது'' என்கின்றார்.<ref>{{cite web|last=Harrison|first=Paul|title=Toland: The father of modern pantheism|url=http://www.pantheism.net/paul/history/toland.htm|work=Pantheist History|publisher=World Pantheist Movement|accessdate=5 செப்டம்பர் 2012}}</ref><ref>Toland, John, Pantheisticon, 1720; reprint of the 1751 edition, New York and London: Garland, 1976, p 54</ref>
 
1710இல் [[கோட்பிரீட் லைப்னிட்ஸ்]]க்கு இவர் எழுதிய கடிதத்தில் இவர் தனது கோட்பாட்டினை ''தனியாளாக இல்லாமல் முழு அண்டத்தையும் கடவுளாகக்கருதும் கோட்பாடே அனைத்து இறைக் கொள்கை'' என விளக்கியுள்ளார்.<ref>Honderich, Ted, ''The Oxford Companion to Philosophy'', Oxford University Press, 1995, p.641: "First used by John Toland in 1705, the term 'pantheist' designates one who holds both that everything there is constitutes a unity and that this unity is divine."</ref><ref>Thompson, Ann, ''Bodies of Thought: Science, Religion, and the Soul in the Early Enlightenment'', Oxford University Press, 2008, p 133, {{ISBN |9780199236190}}</ref><ref name="ReferenceA">Paul Harrison, ''Elements of Pantheism'', 1999.</ref>
 
இக்கோட்பாடு 17 ஆம் நூற்றாண்டுக்கு முன் இல்லை என்றாலும், முற்காலத்தில் இருந்த பல கிறித்தவர்கள் இதனை ஒத்த தத்துவங்களை கொண்டிருந்ததாகக் கருதப்படுகிறது. ஆயினும் இது இந்து மதக்கோட்பாடான [[அத்வைதம்|அத்வைதத்தை]] பெரிதும் ஒத்து இருப்பதால் 19ஆம் நூற்றாண்டினைச்சேர்ந்த செருமானியரும் சமஸ்கிருத ஆய்வாளருமான தியடோர் கோல்ஸ்டக்கர் (Theodore Goldstücker) மேற்கு உலகத்தவர் இக்கோட்பாட்டினை இந்துக்களிடமிருந்தே கடன் வாங்கியதாகக் கருதுகின்றார்.<ref>Literary Remains of the Late Professor Theodore Goldstucker, W. H. Allen, 1879. p32.</ref>
 
[[கத்தோலிக்க திருச்சபை]] துவக்கம் முதலே இதனை ஒரு பதித்த கொள்கையாகவே கண்டது.<ref>Collinge, William, ''Historical Dictionary of Catholicism'', Scarecrow Press, 2012, p 188, {{ISBN |9780810879799}}.</ref> [[கியோர்டானோ புரூணோ]] என்னும் இத்தாலிய துறவி இக்கொள்கையை உடையவர் என குற்றம் சாட்டப்பட்டு 1600இல் கொல்லப்பட்டார்.<ref>McIntyre, James Lewis, ''Giordano Bruno'', Macmillan, 1903, p 316.</ref> பார்ச் ஸ்பினோசாவின் ''Ethics'' என்னும் நூல் 1675இல் வெளியான நூல் இக்கொள்கை பெரிதும் பரவ உதவியது.<ref>Genevieve Lloyd, Routledge Philosophy GuideBook to Spinoza and The Ethics (Routledge Philosophy Guidebooks), Routledge; 1 edition (2 அக்டோபர் 1996), {{ISBN |978-0-415-10782-2}}, Page: 24</ref>
 
20ஆம் நூற்றாண்டின் முடிவில் இக்கொள்கையினை உடையவர்கள் தங்களைத் தனி சமயமாகக் கருதத் துவங்கினர்.<ref>Margot Adler, Drawing Down the Moon, Beacon Press, 1986.</ref>
"https://ta.wikipedia.org/wiki/அனைத்து_இறைக்_கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது