ஆட்ரியனின் சுவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
 
வரிசை 6:
கி.பி 122 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்தச் சுவரின் கட்டுமானப் பணிகள் ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் நீடித்தது. கிழக்குப் பக்கமாக ஆரம்பித்த கட்டுமானப்பணி மேற்கு நோக்கி நகர ஆரம்பித்தது. ஹேட்ரியன் சுவர் சுமார் 120 கி.மீ நீளமாக இருப்பதுடன் அகலமானது அருகில் கட்டுமானத்திற்கு பொருட்கள் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து மாறுபட்டு உள்ளது.
 
இந்தச் சுவர் கட்டப்பட்டதற்கான மெய்யான வரலாற்று ஆவணங்கள் ஏதும் இல்லாத போதும் பல்வேறு காரணங்கள் வரலாற்று ஆசிரியர்களால் முன் வைக்கப்படுகின்றன. ஜரோ எனும் இடத்தில் எடுக்கப்பட்ட கல்வெட்டின் படி கி.பி 119 இல் ஆட்ரியனின் பிரித்தானியப் பயணத்திற்கு முன்னரே இந்தச் சுவரை நிர்மாணிக்கத் தீர்மானித்ததாகத் தெரிகின்றது. இதன்படி இராச்சியத்தை ஒருங்கிணைக்கக் கடவுள் கட்டளைப்படி இந்தச் சுவர் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது<ref name="Anthony Everitt">Anthony Everitt (2009) Hadrian and the Triumph of Rome, Random House, Inc, 448 pages, {{ISBN |0-8129-7814-5}}</ref>. கி.பி 122 இல் ஆட்ரியன் பிரித்தானியாவிற்குப் பயணித்த போது இந்தச் சுவரின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதும் அவர் நிகழ்ச்சி நிரலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
சுவரில் பாதுகாப்புப் பணிக்காக ரோமப் பேரரசின் படையணியான லீஜனயர் அல்லாத படைவீரர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். சுமார் 9000 வீரர்கள் இந்தச் சுவரில் பணியாற்றியுள்ளதுடன் இவர்களில் காலாட்படை, குதிரைப்படைகளும் உள்ளடங்கும்.
"https://ta.wikipedia.org/wiki/ஆட்ரியனின்_சுவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது