இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category மெக்சிக்கோவின் வரலாறு
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 1:
[[படிமம்:Tikal mayan ruins 2009.jpg|thumb|இடையமெரிக்காவில் கொலம்பசுக்கு முந்திய காலப்பகுதியைச் சேர்ந்த மாயன் நாகரிகத் தொல்லியல் களமான [[திக்கல்]]. இது இடையமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய தொல்லியல் களங்களுள் ஒன்று.|250 px]]
[[படிமம்:ES SanAndres 06 2011 Estructura 1 La Acropolis 2161.jpg|thumb|எல் சல்வடோர் நாட்டில் உள்ள, முன்-இசுப்பானியக் காலத்தைச் சேர்ந்த தொல்லியல் களமான சான் ஆன்டிரெசு.|250 px]]
'''இடையமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி''' அல்லது '''இடை அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதி''' அல்லது '''மெசோ-அமெரிக்கா''' (''Mesoamerica'' அல்லது ''Meso-America'') என்பது [[அமெரிக்கா|அமெரிக்க]]க் கண்டத்தில் உள்ள ஒரு பண்பாட்டுப் பகுதி ஆகும். இது நடு [[மெக்சிக்கோ]]வில் இருந்து [[பெலீசு]], [[குவாதமாலா]], [[எல் சல்வடோர்]], [[ஒண்டூராசு]], [[நிக்கராகுவா]], [[கொசுத்தாரிக்கா]] ஆகிய நாடுகள் வரை பரந்துள்ளது. 16 ஆம் , 17 ஆம் நூற்றாண்டுகளில் எசுப்பானியக் குடியேற்றம் ஏற்படுவதற்கு முன்னர் இப் பகுதியில் பல [[கொலம்பசுக்கு முற்பட்ட காலம்|கொலம்பசுக்கு முற்பட்ட சமுதாயங்கள்]] செழிப்புற வாழ்ந்துள்ளன.<ref>"Meso-America." ''[[Oxford English Dictionary|Oxford English Reference Dictionary]]'', 2nd ed. (rev.) 2002. ({{ISBN |0-19-860652-4}}) Oxford, UK: Oxford University Press; p. 906.</ref><ref>[http://highered.mcgraw-hill.com/sites/007299634x/student_view0/glossary.html Glossary<!-- Bot generated title -->]</ref><ref>(2000): Atlas del México Prehispánico. Revista Arqueología mexicana. Número especial 5. Julio de 2000. Raíces/ Instituto Nacional de Antropología e Historia. México.</ref>
 
வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இப்பகுதியில், பல வேளாண்மை ஊர்களும், பெரிய, சடங்குசார்ந்த அரசியல்-சமயத் தலைநகரங்களும் இருந்தன. இந்தப்பகுதி, அமெரிக்காக் கண்டத்தின் மிகச் சிக்கலானதும், உயர் முன்னேற்றம் அடைந்ததுமான பல பண்பாடுகளைக் கொண்டிருந்தது. இவற்றுள், [[ஒல்மெக் நாகரிகம்|ஒல்மெக்]], [[சப்போட்டெக் நாகரிகம்|சப்போட்டெக்]], [[தியோத்திகுவாக்கன்]], [[மாயா நாகரிகம்|மாயன்]], [[மிக்சுட்டெக் நாகரிகம்|மிக்சுட்டெக்]], [[டோட்டோனாக் நாகரிகம்|டோட்டோனாக்]], [[அசுட்டெக் நாகரிகம்|அசுட்டெக்]] போன்றவை அடங்கும்.<ref>[http://www.allempires.com/article/index.php?q=Meso-American_Civilizations Forgotten Civilizations of Meso-America]</ref>
"https://ta.wikipedia.org/wiki/இடையமெரிக்கப்_பண்பாட்டுப்_பகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது