உலோகவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 16:
[[File:GoldThebes750.jpg|thumb|கி.மு 750-700 இல் தங்கத்தாலான நெற்றிப் பட்டை]]
 
மனித வரலாற்றில் மிகவும் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட உலோகம் '''தங்கம்''' ஆகும். இது சூழ்நிலைகளால் பாதிக்கப்படாததும், வேறு வேதிப் பொருட்களுடன் வினைபுரியாத தன்மையையும் கொண்டிருப்பதால் இயற்கையில் தனித்த தனிம நிலையிலேயே கிடைக்கின்றது. [[பழைய கற்காலம்|பழைய கற்காலத்தில்]] கிமு 40000 ஆண்டுகளுக்கு முன் எசுப்பானியாவின் கற்குகைகளில் இயற்கை தங்கம் சிறிய அளவில் கிடைத்ததாக அறியப்படுகிறது<ref>{{cite web | url = http://www.gold-eagle.com/gold_digest/history_gold.html | title = History of Gold | publisher = Gold Digest | accessdate = 2007-02-04 }}</ref>. வெள்ளி, தாமிரம், வெள்ளீயம் மற்றும் இரும்பு போன்ற தனிமங்கள் ஆரம்பகால கலாச்சாரங்களில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது <ref name=ephotos>{{cite journal|author= E. Photos, E.|title=The Question of Meteoritic versus Smelted Nickel-Rich Iron: Archaeological Evidence and Experimental Results|journal=World Archaeology|volume=20|issue=3|pages=403|jstor=124562|doi=10.1080/00438243.1989.9980081|url=http://img2.tapuz.co.il/forums/1_132972987.pdf|year=2010}}</ref>. கிமு 3000 இல் விண்கல்லில் இருந்து பெறப்பட்ட இரும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட எகிப்திய ஆயுதங்கள், "வானத்திலிருந்து வந்த கத்திகள்" எனக் கொண்டாடப்பட்டன <ref name=keller>W. Keller (1963) ''The Bible as History''. p. 156. {{ISBN |0-340-00312-X}}</ref>.[[ஈயம்]], [[வெள்ளீயம்]], [[தாமிரம்]] போன்ற சில குறிப்பிட்ட உலோகங்கள் உயர் வெப்பநிலையில் தாதுக்களை [[ஊது உலை]]யில் சுடுபடுத்தி உருக்கிப் பிரித்தல் முறையிலேயே தயாரிக்கப்படுகின்றன.
 
கிமு 5 , 6 ஆம் நூற்றாண்டு காலத்தில் முதன்முதலாக பிரித்தெடுத்தல் முறையில் உலோகம் தயாரிக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைக்கின்றன <ref>[https://www.crcpress.com/New-Developments-in-Mining-Engineering-2015-Theoretical-and-Practical-Solutions/Bondarenko-Kovalevska-Pivnyak/9781138028838 H.I. Haiko, V.S. Biletskyi. First metals discovery and development the sacral component phenomenon. // Theoretical and Practical Solutions of Mineral Resources Mining // A Balkema Book, London, 2015, р. 227-233.].</ref>. செர்பியாவிலுள்ள மைதான்பெக், யர்மொவாக், புளொக்னிக் போன்ற தொல்லியல் தளங்களில் இச்சான்றுகள் கிடைத்தன.
வரிசை 25:
தனித்த உலோகங்கள் கிமு 3500 ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்டதாக அறியப்படுகிறது. செப்பு மற்ரும் வெள்ளீயத்தைக் கலந்து வெண்கலம் கலப்புலோகம் உருவாக்கப்பட்டது மிகப்பெரிய நாகரிக மாற்றத்திற்கு வித்திட்டது. இக்காலம் வெண்கலக் காலம் எனப்படுகிறது.
இரும்புத் தாதுவிலிருந்து இரும்பைப் பிரித்தெடுத்தல் செப்பு அல்லது வெள்ளீயத்தின் தாதுவிலிருந்து செப்பு அல்லது தகரத்தைப் பிரித்தெடுப்பதைக் காட்டிலும் கடினமானதாகும். இரும்பு பிர்த்தெடுத்தல் செயல்முறை கிமு 1200 இல் இரும்பு காலத்தில் இத்தியர் நாகரிகத்தினர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இரும்பு பிரித்தெடுத்தல் மற்றும் இரும்பு வேலை செயல்முறைகள் இரகசியமாக காக்கப்பட்டு பெலிசுதரின் இன மக்களுடைய வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாக இருந்தது என நம்பப்படுகிறது <ref name=keller/><ref>B. W. Anderson (1975) ''The Living World of the Old Testament'', p. 154, {{ISBN |0-582-48598-3}}</ref>.
 
இரும்புசார் உலோகவியல் வளர்ந்த வரலாற்றை பல்வேறு கடந்தகால கலாச்சார நாகரீகங்களில் காணமுடிகிறது. பண்டைய இடைக்கால பேரரசுகள் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்திற்கு அருகிலிருந்த பேரரசுகள், பண்டைய ஈரான், பண்டைய எகிப்து, பண்டைய நூபியா, மற்றும் அனடோலியா (துருக்கி), பண்டைய நாக், கார்த்தேச்சு, கிரேக்கர்கள் மற்றும் பண்டைய ஐரோப்பா ரோமர், மத்திய ஐரோப்பா, பண்டைய மற்றும் இடைக்கால சீனா, பண்டைய மற்றும் இடைக்கால இந்தியா, பழங்கால மற்றும் இடைக்கால ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாகரிகங்களில் இரும்பின் பயன்பாடு இருந்ததாக அறியப்படுகிறது. ஊது உலையின் பயன்பாடு, வார்ப்பு இரும்பு பயன்படுத்தப்பட்டது, நீரியல் சாய்வுச் சம்மட்டி, [[துருத்தி]]யின் பயன்பாடு இருந்ததற்கான ஆதாரங்கள் சீனாவில் கிடைத்துள்ளன <ref>R. F. Tylecote (1992) A History of Metallurgy {{ISBN |0-901462-88-8}}</ref><ref name="temple-r">Robert K.G. Temple (2007). ''The Genius of China: 3,000 Years of Science, Discovery, and Invention'' (3rd edition). London: [[André Deutsch]]. pp. 44–56. {{ISBN |978-0-233-00202-6}}.</ref>.
 
உலோக தாதுக்களை சுரங்கங்களில் இருந்து வெட்டியெடுத்தல், உலோகங்களைப் பிரித்தெடுத்தல் மற்றும் உலோகம் பிரித்தெடுத்தல் செயல்முறை வளர்ச்சி மற்றும் சிக்கலான செயல்முறைகள் முதலியவற்றை கியார்ச்சு அகரிகாலா மூலம் எழுதப்பட்ட 16 ஆம் நூற்றாண்ட்டைச் சேர்ந்த தெ ரெ மெட்டாலிகா என்ற புத்தகம் விவரிக்கிறது. அகரிகாலா "உலோகவியலின் தந்தை" எனக் கருதப்படுகிறார் <ref>{{cite book|author=[[Karl Alfred von Zittel]] |year=1901|title=History of Geology and Palaeontology|page= 15|url=http://www.geology.19thcenturyscience.org/books/1901-Zittel-HistGeol/htm/doc.html|doi=10.5962/bhl.title.33301}}</ref>.
வரிசை 70:
=== வெப்பச் சிகிச்சைகள் ===
 
உலோகங்களின் வலிமையை, நீள்தன்மையை, கெட்டித்தன்மையை, கடினத்தன்மையை மற்றும் எதிர்ப்புப் பண்புகளை வெப்ப சிகிச்சையின் மூலம் மாற்ற முடியும்.பதனாக்கல், வீழ்படிவாக்கல், கெட்டியாக்கல், தணித்தல், உரனூட்டல் முதலியன பொதுவான வெப்பச் சிகிச்சை முறைகளாகும் <ref>Arthur Reardon (2011), ''Metallurgy for the Non-Metallurgist'' (2nd edition), ASM International, {{ISBN |978-1-61503-821-3}}</ref>. சூடுபடுத்துவதன் மூலம் உலோகத்தை மென்மையாக்கி பின்னர் படிப்படியாக குளிரவைத்தல் பதனாற்றுதல் முறை வெப்ப சிகிச்சையாகும். இம்முறையில் கூராக்குதல், வளைத்தல், போன்ற வடிவமாற்றங்களை ஏற்படுத்த முடியும். உலோகத்தை மிக விரைவாக வெப்பமூட்டிய பின்னர் குளிரவைப்பது தணித்தல் என்னும் வெப்ப சிகிச்சை முறையாகும். உயர் கார்பன் எஃகு தணித்தல் முறையில் கடினப்படுத்தப்படுகிறது. வெப்பநிலை மாற்றம் மூலம் உலோகத்தை உடையாமல் கெட்டியாக்கும் செயல்முறை உரனூட்டல் எனப்படுகிறது.
 
பெரும்பாலும், இயந்திர மற்றும் வெப்ப சிகிச்சைகள் இரண்டையும் இணைத்து நல்ல பண்புகள் மிக்க பொருட்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. வெப்ப-இயந்திர சிகிச்சை எனப்படும் பெயரால் இம்முறை அழைக்கப்படுகிறது. மிகை கலப்புலோகங்களும் தைட்டானியக் கலப்புலோகங்களும் இம்முறையில் உருவாக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/உலோகவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது