கருத்தியல் வளிமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 1:
'''கருத்தியல் வளிமம்''' (அ) '''இலட்சிய வாயு''' (அ) '''இலட்சிய வளிமம்''' (Ideal gas) என்பது சுயாதீனமாக அசையக்கூடிய மற்றும் இடைத்தாக்கமுறாத துணிக்கைக் கூறுகளைக் கொண்ட கருத்தளவிலான வாயு ஆகும். [[கருத்தியல் வளிம விதி]]க்கமைந்து நடத்தைகளைக் காட்டுவதாலும் ஒரு சமன்பாட்டு வடிவில் விளக்கக் கூடியதாயிருப்பதாலும் புள்ளிவிபர முறையில் பகுப்பாய்வு செய்வதற்காகவும் இலட்சிய வாயுக் கொள்கை பயனுள்ளதாக உள்ளது. சீரான வெப்ப அமுக்க நிபந்தனைகளில் பெரும்பாலான வாயுக்கள் இலட்சிய வாயுக்களாகத் தொழிற்படுகின்றன. எந்தெந்த வளிமங்கள் [[பாயில் விதி]]க்கு (Boyle's law) எல்லா அழுத்தத்திலும் வெப்பநிலையிலும் கீழ்ப்படிகின்றனவோ அந்த வளிமங்கள் கருத்தியல் வளிமங்கள் எனப்படுகின்றன. வளிமத்தின் அழுத்தத்தினை (P), X அச்சிலும், அழுத்தத்தினைப் பருமனளவால் பெருக்கிக் கிடைக்கும் பெருக்குத் தொகை PV யினை, Y அச்சிலும் குறித்தால் கிடைக்கும் கோடு எக்சு அச்சிற்கு இணையாக இருக்க வேண்டும். பொதுவாக உயர் அழுத்தத்தில் இப்படி இருப்பதில்லை. இந்த நிலை-பெருக்குத்தொகை மாறுபட்டு இருப்பது- [[மெய் வளிமம்|வளிமங்களுக்குப்]] பொருந்தும். PV மதிப்பு அழுத்தத்துடன் மாறாத வளிமங்கள் கருத்தியல் வளிமங்கள் எனப்படுகின்றன.
 
[[நைதரசன்]], [[ஒட்சிசன்]], [[ஐதரசன்]] , [[அருமன் வாயு]]க்கள் மற்றும் [[காபனீரொட்சைட்டு]] முதலான பாரமான வாயுக்களும் குறித்த தாங்கு நிபந்தனைகளில் இலட்சிய வாயுக்களாகக் கருதப்படக் கூடியன.<ref name=boles>Thermodynamics: An Engineering Approach (Fourth Edition), {{ISBN |0072383321}} / 0-07-238332-1, Cengel, Yunus A.;Boles, Michael A., p.89</ref> பெரும்பாலும் வாயுக்கள் உயர்ந்த வெப்பநிலையிலும், தாழ்ந்த அமுக்கத்திலும் இலட்சிய வாயுக்களாகத் தொழிற்படுகின்றன. காரணம், அவற்றின் மூலக்கூற்றிடைக் கவர்ச்சி விசை துணிக்கைகளின் இயக்க விசையிலும் கணிசமான அளவு குறைவடைவதனாலும் மூலக்கூறுகளின் பருமன் வெறுமையான இடைவெளியுடன் ஒப்பிடுகையில் புறக்கணிக்கத்தக்கதாயிருப்பதாலும் ஆகும்.<ref name=boles/>
 
இலட்சிய வாயுக் கொள்கை தாழ்ந்த வெப்பநிலையிலும் உயர் அமுக்கத்திலும் நிலவுவதில்லை. காரணம், இந்நிலைமைகளில் மூலக்கூற்றிடைக் கவர்ச்சி விசை மற்றும் மூலக்கூறுகளின் பருமன் என்பன உயர்வடைவதாகும். [[நீராவி]] மற்றும் குளிரூட்டி வாயுக்கள் முதலான பாரமான வாயுக்களிலும் இந்நடத்தைக் காணப்படாது.<ref name=boles/> சில குறித்த தாழ்ந்த வெப்பநிலையிலும் உயர் அமுக்கத்திலும் [[மெய் வளிமம்|மெய் வளிமங்கள்]] [[நிலை மாற்றம்|நிலை மாற்றத்திற்கு]] உள்ளாகின்றன. நிலை மாற்றத்தினை இலட்சிய வாயுக் கொள்கை விவரிக்காது அல்லது அனுமதிக்காது.
"https://ta.wikipedia.org/wiki/கருத்தியல்_வளிமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது