"குதிராம் போஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி (தானியங்கிஇணைப்பு category இந்தியப் புரட்சியாளர்கள்)
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
1905-வங்கப் பிரிவினைக்கு எதிராக நாடே கொந்தளித்தது.<ref>http://tamil.webdunia.com/miscellaneous/special07/idday/0708/14/1070814012_2.htm</ref> தேசப்பற்று மிக்க குதிராமும் இயல்பாகவே அந்தப் போராட்டத்தில் குதித்தார்; பல காவல் நிலையங்களை குதிராமின் குழு குண்டுகளால் தாக்கியது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடந்தது. யார் தாக்குகிறார்கள் என்று தெரியாமல் ஆங்கிலேய அரசு மிரண்டது. 1908 ல் குதிராம் கைது செய்யப்பட்டபோதுதான், 18 வயதே நிறைந்த இளைஞனின் செயல் அது என்று அரசு உணர்ந்தது.
== குண்டு வீச்சு ==
ஆங்கிலேய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம், ஆங்கிலேய அதிகாரிகளைத் தாக்கி பாடம் கற்பிக்க குதிராம் குழு திட்டமிட்டது. அதன்படி, வங்கத்தில் முசாபர்பூரில் அதிகாரியாகப் பணிபுரிந்த கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது குண்டுவீச, குதிராம் போசும், அவரது நண்பர் பிரபுல்ல சாஹியும் முசாபர்பூரில் உள்ள ஐரோப்பிய கிளப் சென்றனர்.<ref>Ritu Chaturvedi (1 January 2007). Bihar Through the Ages. Sarup & Sons. pp. 340–. {{ISBN |978-81-7625-798-5}}. Retrieved 28 April 2012.</ref> 1908, ஏப். 30 ம் தேதி, அங்கு வந்த மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் வாகனம் மீது இருவரும் வெடிகுண்டுகளை வீசினர்.<ref>http://tamil.webdunia.com/miscellaneous/special07/idday/0708/14/1070814012_3.htm</ref> ஆனால், அதில் கிங்க்ஸ்போர்ட் வரவில்லை. அதில் வந்த அவரது மனைவியும் மகளும் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் ஆங்கிலேயரை உலுக்கியது.
== தண்டனை ==
குண்டுவீசி தப்பியவர்களைப் பிடிக்க அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டது. புரட்சியாளர்கள் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு ஆயிரம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில், சமஸ்திப்பூரில் காவலர்களிடம் பிடிபட்ட பிரபுல்ல சாஹி, தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.<ref>http://profiles.incredible-people.com/khudiram-bose/</ref> மே மாதம் முதல் தேதி குதிராமும் சிக்கினார். விடுதலை வீரர்களுக்கு கொடும் தண்டனை வழங்கி வந்ததால்தான் மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்டைக் கொல்ல குண்டு வீசியதாகவும், அதில் அவர் தப்பியதும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இறந்ததும் வருத்தம் அளிப்பதாகவும் குதிராம் கூறினார். அதன் பிறகு நடந்த தேசத்துரோக வழக்கில் குதிராமுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
99,691

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2696673" இருந்து மீள்விக்கப்பட்டது