குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎கலாச்சாரம்: உள்ளிணைப்புக்கள்
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 1:
[[File:Mother and newborn child in Orissa.jpg|300px|thumb|புதிதாகப் பிறந்த குழந்தையுடன் தாய்]]
'''குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலம்''' என்பது, குழந்தையானது தாயின் கருப்பையிலிருந்து வெளியேறும் [[குழந்தை பிறப்பு]] என்னும் நிகழ்வு நிகழ்ந்த அந்தக் கணத்திலிருந்து, 6 கிழமைகள் வரையிலான காலத்தைக் குறிப்பதாகும்<ref>{{cite web | url=http://www.patient.co.uk/doctor/postnatal-care-puerperium | title=Postnatal Care (Puerperium) | publisher=Patient.co.uk | accessdate=மே 22, 2014}}</ref><ref name="WHO1">{{cite web | url=http://www.who.int/pmnch/media/publications/aonsectionIII_4.pdf | title=Postnatal Care | publisher=World Health Organization | accessdate=மே 25, 2014 | author=Charlotte Warren, Pat Daly, Lalla Toure, Pyande Mongi | pages=Chapter 4}}</ref>. [[உலக சுகாதார நிறுவனம்|உலக சுகாதார நிறுவனத்தின்]] அக்டோபர் 2013 இற்கான அறிக்கையில், குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலமே தாய்க்கும், சேய்க்கும் மிகவும் நெருக்கடியான காலமாகவும், இக் காலத்திலேயே தாய், மற்றும் குழந்தையின் இறப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது<ref name="WHO">{{cite web | url=http://apps.who.int/iris/bitstream/10665/97603/1/9789241506649_eng.pdf?ua=1 | title=WHO recommendations on Postnatal care of the mother and newborn | publisher=World Health Organization | accessdate=மே 25, 2014 | author={{ISBN |978 92 4 150664 9}}}}</ref><ref name="WHO1"/>. ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 125,000 பெண்களும், 870,000 புதிதாகப் பிறந்த குழந்தைகளும், குழந்தை பிறந்து முதலாவது கிழமைக்குள் இறப்பதாகவும், குழந்தை பிறப்பின் பின்னரான முதலாவது நாளிலேயே இவ்வகையான இறப்பு அதிகம் நிகழ்வதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகின்றது<ref name="WHO1"/>. உலகம் முழுவதுமாக ஒவ்வொரு வருடமும் 4 மில்லியன் குழந்தைகள் பிறந்து ஒரு மாத காலத்திற்குள், இவற்றில் அநேகமானவை ஒரு கிழமைக்குள் இறப்பதாகவும், தாயின் நலக் குறைபாடும், ஊட்டச்சத்துக் குறைபாடும், தாய்க்கு கருத்தரிப்பின்போதும், குழந்தை பிறப்பின் போதும், அதற்குப் பின்னரான காலத்திலும் சரியான பராமரிப்பு வழங்கப்படாமையே இதற்கான காரணம் எனக் கூறப்படுகின்றது<ref name="WHO2">{{cite web | url=http://whqlibdoc.who.int/publications/2006/924159084X_eng.pdf?ua=1 | title=Integrated Management of Pregnancy and Childbirth, Pregnancy, Childbirth, Postpartum and Newborn Care: A guide for essential practice | publisher=World Health Organization | work=WHO, UNICEF, UNFPA, The World Bank Group | date=World Health Organization Geneva 2006 | accessdate=மே 25, 2014, For updates, visit www.who.int/making_pregnancy_safer | author={{ISBN |92 4 159084 X}} | pages=2nd Edition}}</ref>.<br />
==பராமரிப்பு==
குழந்தைக்கு தாயின் உடலினுள் இருக்கும்போது [[ஆக்சிசன்]], [[ஊட்டச்சத்து]] போன்ற அத்தியாவசியமான தேவைகள் [[தொப்புள்கொடி]]யினூடாக நேரடியாகக் கிடைக்கும். தாயின் [[கருப்பை]]யிலிருந்து வெளியேறும் அந்தக் கணத்திலிருந்து, அந்தத் தேவைகள் வெளிச் சூழலிலிருந்தே பெறப்பட வேண்டும் என்பதனால், குழந்தையானது அந்த புதிய சூழலுக்கு இசைவாக்கம் அடைய வேண்டும். இக்காலத்திலேயே தாயின் [[உடல்|உடலானது]] கருத்தரிப்புக்கு முன்னர் இருந்த நிலைக்கு மீளும் காலமாகும். [[இயக்குநீர்]]களில் மாற்றம் ஏற்படுவதுடன், கருப்பையானது சுருங்கி தனது பழைய நிலையை அடையும் காலமாகும். இக் காலத்தில் குழந்தைக்குத் தேவையான அனைத்துத் தேவைகளும் வழங்கப்படுவதுடன், தாய்மாருக்கு பிரசவப் பராமரிப்பு வழங்கப்பட வேண்டும்.<br />
குழந்தை பிறப்பானது [[மருத்துவமனை]]யொன்றில் நிகழ்வதாகவும், [[யோனி]]யினூடான குழந்தை பிறப்பாகவும் இருப்பின், சராசரியாக 1-2 நாட்களில் தாயும் சேயும் வீடு செல்வார்கள் எனினும், பொதுவாக குழந்தையும் தாயும் மிகவும் நலத்துடன் இருப்பதுடன் [[வீடு (கட்டிடம்)|வீடு]] செல்ல விரும்பின், சில மணித்தியாலங்களிலேயே கூட வீடு செல்ல அனுமதிக்கப்படுவர். குழந்தை பிறப்பானது [[அறுவைச் சிகிச்சை]] மூலமான [[அறுவைவழி குழந்தை பிறப்பு|அறுவைவழி குழந்தை பிறப்பாயின்]] ([[:en:Caesarean section]]), தாயும், சேயும் உடல் நலத்துடன் இருப்பின் பொதுவாக 3-4 நாட்களில் வீடு செல்ல அனுமதிக்கப்படுவர். இந்த நாட்களில், தாய், சேய்க்கான பராமரிப்புடன், குழந்தையின் நலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதுடன், தாயின் உடலில் ஏற்படும் [[குருதிப்பெருக்கு]], [[மனித இரையகக் குடற்பாதை]]யிலான மாற்றங்கள், [[சிறுநீர்ப்பை]]யின் தொழிற்பாடு போன்றனவும் கண்காணிக்கப்படும். <ref>"With Women, Midwives Experiences: from Shiftwork to Continuity of Care'', David Vernon, Australian College of Midwives, Canberra, 2007 {{ISBN |978-0-9751674-5-8}}, p17f</ref>. <br />
குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலத்தில் தாயின் உடல்நலம் நன்றாக இருப்பதும், குழந்தையைக் கவனித்துக் கொள்ளக் கூடியவாறு தாயின் உடல், உள நலம் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்துடன் [[தாய்ப்பாலூட்டல்]], இனப்பெருக்க [[உடல் உறுப்புக்கள்|உறுப்பு]]க்களின் நலப் பராமரிப்பு, [[இனப்பெருக்கம்|இனப்பெருக்க]] செயற்பாடுகள், [[கருத்தடை]] குறித்த சரியான தகவல்கள் வழங்கப்பட வேண்டும்.