சலாகுத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கருத்திலுள்ள பிழையை சரிசெய்தல்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 39:
== சிலுவைப்போர்கள் ==
{{main|சிலுவைப் போர்}}
இதன் பிறகு தனது படை வலிமையைப் பெருக்குவதில் ஈடுபட்ட சலாகுத்தீன் 1180-ம் ஆண்டு சிலுவைப்போராளிகளின் நகரங்களைத் தாக்கினார். இதற்குப் பதிலடியாக ரோனால்டு, [[முஸ்லிம்|முசுலிம்]] வணிகர்களுக்கும், புனித தலங்களுக்கும் தொல்லை கொடுக்கத் தொடங்கினார். இதனால் [[முஸ்லிம்|முசுலிம்]] வணிகர்களுக்கான முதன்மைப் பாட்டையில்(சாலை) ஒரு படையை சலாகுத்தீன் நிறுவினார். மேலும் 1182-ம் ஆண்டு மிகப்பெரிய படையுடன் சென்று பெய்ரூட் நகரையும் தாக்கினார். இதற்குப் பதிலடியாக ரோனால்டு, இசுலாமியர்களின் புனித தலங்களான [[மெக்கா]] மற்றும் [[மதீனா]] ஆகியவற்றைத் தாக்கினார்<ref name="KOVAŘÍK, Jiří 2005">KOVAŘÍK, Jiří. The sword and cross, knights battle and destinies. Praha: Mladá fronta, 2005. [dále jen Kovařík]. {{ISBN |80-204-1289-1}}</ref>. இதனால் கோபமுற்ற சலாகுத்தீன், ரோனால்டின் தலைநகரை 1183 மற்றும் 1184ஆகிய ஆண்டுகளில் தாக்கினார். இதன் பின்பும் ரோனால்டு 1185-ம் ஆண்டு புனித கச் (Haj) யாத்திரை சென்றவர்களின் வாகனங்களைத் தாக்கினார்<ref name="KOVAŘÍK, Jiří 2005"/>. இவ்வாறு சலாகுத்தீன் போர் நெறிமுறைகளைப் பின்பற்றி ரோனால்டின் படைகளை மட்டுமே தாக்கிய பொழுதும் கூட, ரோனால்டு அதற்குப் பதிலடியாக அப்பாவி [[முஸ்லிம்|முசுலிம்களை]] தாக்குவதயே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டார்.
 
இதன் பிறகு உள்நாட்டுக் குழப்பங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்த சலாகுத்தீன், மோசுல் நகரை ஆக்கிரமித்திருந்த மசூத் என்பவனையும் அவனுக்குத் துணையாக வந்த அசர்பைசான் கவர்னரையும் 1185 ஆம் ஆண்டு சாக்ரோல் மலைத்தொடரில் சந்தித்து, அவர்களின் படையை முறியடித்தார். பின்பு தனது பார்வையை மீண்டும் சிலுவைப்போராளிகளின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் செலுத்தியவர், அதில் பெரும்பகுதியைக் கைப்பற்றினார். தொடர்ந்து 1187-ம் ஆண்டு சூலை 4-ம் நாள் காத்தின் என்ற இடத்தில் லூசிஞ்ன் கை, கிங் கான்சேர்ட் மற்றும் மூன்றாம் ரேமன்ட் ஆகியோரின் கூட்டுப்படையை எதிர்கொண்டார். [[கடல்]] போன்ற இந்த கூட்டுப்படையை எதிர்கொண்ட சலாகுத்தீனின் படை அதை முறியடித்து வெற்றிபெற்றது. இந்த வெற்றி [[சிலுவைப்போர்]]களில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதைத் தொடர்ந்து போரில் தோல்வியுற்று பிடிபட்ட லூசிஞ்ன் கை மற்றும் ரோனால்டு ஆகியோர் சலாகுத்தீனின் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர். இவர்களில் லூசிஞ்ன் கையை மன்னித்த சலாகுத்தீன், அவரைச் சிறையில் அடைக்க உத்திரவிட்டார். ஆனால் தொடர்ந்து [[முஸ்லிம்|முசுலிம்]] மக்களுக்குத் தொல்லை கொடுத்ததாலும் [[இசுலாம்|இசுலாமியப்]] புனிதத் தலங்களைத் தாக்கியதாலும் ரோனால்டுக்கு மரண தண்டனை விதித்தார்<ref>Saladin Or What Befell Sultan Yusuf by Beha Ed-din, Baha' Al-Din Yusuf Ib Ibn Shaddad, Kessinger Publishing, 2004, p.42, p.114</ref>
"https://ta.wikipedia.org/wiki/சலாகுத்தீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது