பொபிலி அரசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 60:
 
==சென்னை மாகாண முதல்வர்==
1937 வரை முதல்வராக நீடித்த ரங்கா ராவின் ஆட்சிக் காலத்தில், நீதிக்கட்சி உட்கட்சிப் பூசல்களால் நலிந்து மக்களின் ஆதரவையும் இழந்து அக்காலத்தில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் [[இந்திய தேசிய காங்கிரசு|இந்திய தேசிய காங்கிரசிடம்]] தோல்வியடைந்தது. 1930 களில் உலகைப் பீடித்த [[பெரும் பொருளியல் வீழ்ச்சி|பெரும் பொருளியல் வீழ்ச்சியினால்]] சென்னை மாகாண மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர். பொபிலி அரசர் தனது ஆதரவாளர்களான ஜமீன்தார்களை திருப்தி படுத்த எடுத்த பல முடிவுகள் சாதாரண பொதுமக்களுக்குப் பெரும் கஷ்டங்களை ஏற்படுத்தின. சிறு விவசாயிகள் கடன் நெருக்கடியிலிருந்து விடுதலை பெற கடன் தள்ளுபடி சட்டம் கொண்டு வர ஆங்கில அரசு முயன்றபோது ரங்கா ராவ் அதனைத் தடுத்துவிட்டார். அதே போல் நிலவரியைக் குறைக்கக் கோரி காங்கிரசு விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்திய போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கினார். உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டில் தலையிட்டு அவற்றின் சுதந்திரத்தைப் பறித்தார். பொருளாதார நெருக்கடியின் காரணமாக மற்ற மாகாண அரசுகள் அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில், தன் ஆதரவாளர்களைத் திருப்திப் படுத்த அமைச்சரவையை விரிவு படுத்த முயன்றார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தோர் அண்டைய மத்திய மாகாணத்தின் அமைச்சர்களைக் காட்டிலும் இரு மடங்கு சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தனர். நீதிக்கட்சியின் மீது மக்கள் கடும் கோபம் கொண்டனர். [[சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1934|1934 இல் நடை பெற்ற தேர்தலில்]] அக்கட்சியை தோற்கடித்தனர். ஆனால் வெற்றி பெற்ற காங்கிரசு இரட்டை ஆட்சிமுறையின் கீழ் பதவியேற்க மறுத்து விட்டதால் ரங்கா ராவே மீண்டும் சிறுபான்மை அரசமைத்தார். நீதிக்கட்சியின் தொடர் தோல்விகளால் அக்கட்சியின் பல தலைவர்களும், தொண்டர்களும் கட்சியிலிருந்து விலகிக் காங்கிரசில் இணைந்தனர். ஊழலும், நிர்வாகக் கோளாறுகளும் மலிந்த ரங்கா ராவின் ஆட்சியை நீதிக் கட்சியின் நிரந்தர ஆதரவாளர்களான ஐரோப்பியர் கூட வெறுக்க ஆரம்பித்தனர். ரங்கா ராவின் மீது பொது மக்களுக்கிருந்த கோபத்தைப் பற்றிச் செய்தி வெளியிட்ட “ஜமீன் ரயாட்” இதழ், “கிராமங்களில் கிழவிகள் கூடப் பொபிலி அரசு எப்பொழுது ஒழியும்” என்று ஏங்குவதாகக் கூறியது. இவ்வாறு அனைத்து தரப்பினரின் எதிர்ப்பையின் சம்பாதித்த நீதிக் கட்சி, 1937 இல் மாநில சுயாட்சி முறையின் கீழ் சென்னை மாகாணத்திற்கு நடத்தப்பட்ட [[சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1937|முதல் சட்டமன்றத் தேர்தலில்]] படுதோல்வி அடைந்தது. 215 தொகுதிகளில் 21 தொகுதிகளில் மட்டுமே வென்றது. காங்கிரசு பெரும்பானமை பெற்று [[சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி|ராஜகோபாலாச்சாரி]] சென்னையின் முதல்வரானார். தோல்வியினால் நீதிக்கட்சி நிலை குலைந்து போனது. ரங்கா ராவ் ஐரோப்பிய நாடுகளுக்கு நெடும் பயணமாகச் சென்று விட்டார்.<ref name="Krishnaswamy">{{cite book | title=The role of Madras Legislature in the freedom struggle, 1861-1947| edition=| author=S. Krishnaswamy| year=1989| pages=215–219| publisher=People's Pub. House (New Delhi) | isbn=}}</ref><ref name="Saroja">{{cite book | title=March to freedom in Madras Presidency, 1916-1947| edition=| author=Saroja Sundararajan| year=1989| pages=347–350| publisher=Madras : Lalitha Publications| isbn=}}</ref><ref name="rajaraman2">{{cite book | title=The Justice Party: a historical perspective, 1916-37| last=Rajaraman| first=P. | coauthors=| year=1988| pages=212–220| publisher=Poompozhil Publishers|url=http://books.google.com/books?id=GGMmAAAAMAAJ}}</ref><ref name="Manikumar2">{{Cite book| last =Manikumar| first =K. A.| title = A colonial economy in the Great Depression, Madras (1929-1937)| publisher = Orient Blackswan| year = 2003| location = | pages = 184–198| url =http://books.google.com/books?id=8eWkmxJRnoAC&pg=PA185 |id= {{ISBN |8125024565}}, {{ISBN |9788125024569}}}}</ref><ref>{{cite book | title=Anna: The life and times of C. N. Annadurai | edition=|last=Kannan|first=R.| year=2010|isbn=9780670083282| publisher=[[Penguin Books]]| url=}}</ref><ref>{{cite book | title=திமுக உருவானது ஏன்? | edition=|last=மலர்மன்னன்|first=| year=2009|ref=harv|isbn=9788184932652| publisher=கிழக்கு பதிப்பகம| language=}}</ref>
 
ரங்கா ராவின் பதவிக்காலத்தில் [[சென்னை]] நகரத்தில் மீண்டும் மேயர் பதவி ஏற்படுத்தப்பட்டது. 1688 முதல் 1801 வரை பழக்கத்திலிருந்த மேயர் ஆட்சி முறையை ஜனவரி 17, 1933 இல் நகர முனிசிபல் சட்டத்தின் மூலம் ரங்காராவ் மீண்டும் கொண்டு வந்தார். நீதிக்கட்சியின் ஸ்ரீராமுலு நாயுடு சென்னையின் மேயரானார். அவருக்குப் பின் மற்றொரு நீதிக்கட்சித் தலைவரான முத்தைய்யா செட்டியார் மேயராகப் பணியாற்றினார்.<ref name="showingtheway">{{cite news|title=Showing the way|work=[[தி இந்து]]|url=http://www.thehindujobs.com/thehindu/mp/2002/07/10/stories/2002071000070300.htm|first=S.|last=Muthiah|authorlink=S. Muthiah|date=July 10, 2007}}</ref> ரங்காராவின் நிர்வாகம் ஜமீன்தார் ஆதரவு அரசாகவே பரவலாகக் கருதப்பட்டாலும், அவரது ஆட்சிகாலத்தில் சிறு விவசாயிகளுக்கு ஆதரவாகச் சில நிகழ்வுகளும் நடந்தன. ரஙகா ராவின் அரசு பண்ணைத்தோட்டங்கள் நிலச் சட்டம், 1908 ஐ திருத்தியதன் மூலம் சிறு விவசாயிகளின் சில உரிமைகளைப் பாதுகாத்தது; இடைத்தரகர்களான ”இனாம்தார்”களின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்க முயற்சியும் செய்தது. ரங்கா ராவின் ஆட்சி காலத்தில் (1936) தான் சென்னை மாகாணத்தின் கஞ்சம் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட [[ஒரிசா]] மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.<ref name="peoplesking" />
"https://ta.wikipedia.org/wiki/பொபிலி_அரசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது