"மான் சிங்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
 
==முகலாயப் பேரரசின் படைத்தலைவராக==
இளமையில் 10 டிசம்பர் 1589 முதல் அக்பரின் படையில் 5000 படைவீரர்களுக்கு [[மன்சப்தார்|மன்சப்தாராக]] தலைமை வகித்தவர். <ref>Sarkar, Jadunath (1984, reprint 1994). ''A History of Jaipur'', New Delhi: Orient Longman {{ISBN |81-250-0333-9}}, p.74</ref>
26 ஆகஸ்டு 1605-இல் 7,000 குதிரைப் படைவீரர்களுக்கு தலைமை வகித்து மன்சப்தார் எனும் பதவியை வகித்தார்.<ref>Sarkar, Jadunath (1984, reprint 1994). ''A History of Jaipur'', New Delhi: Orient Longman {{ISBN |81-250-0333-9}}, p.86</ref>1576-இல் [[மகாராணா பிரதாப்|மகாரானா பிரதாப் சிங்]] படைகளுக்கும், அக்பரின் முகலாயப் படைகளுக்கும் நடைபெற்ற ஹால்திகட்டிப் போரில் ராஜ மான் சிங் முகலாயப் பேரரசின் படைத்தலைவராகச் செயல்பட்டவர்.<ref>Beveridge H. (tr.) (1939, Reprint 2000). ''The Akbarnama of Abu´l Fazl'', Vol. III, Kolkata: The Asiatic Society, {{ISBN |81-7236-094-0}}, p.244</ref>
 
1580-இல் அக்பரின் ஒன்று விட்ட சகோதரரும், காபூல் ஆளுநரும் ஆன மீர்சா ஹக்கீம் தன்னை தானே முகலாயப் பேரரசராக அறிவித்துக் கொண்டார். மீர்சா ஹக்கீமை [[பிகார்]] மற்றும் [[வங்காளம்|வங்காள]] ஆளுநர்கள் ஆதரித்தனர்.
பின்னர் மீர்சா ஹக்கிமை அடக்குவதற்கு அக்பர், ராஜ மான் சிங்குடன் காபூலுக்கு படைகளுடன் புறப்பட்டார். முகலாயப் படைகள் [[சிந்து ஆறு|சிந்து ஆற்றை]] கடக்கும் நேரத்தில், மீர்சா ஹக்கீம் காபூலை விட்டு தலைமறைவானார். பின்னர் காபூலின் ஆளுநராக ராஜா மான் சிங் நியமிக்கப்பட்டார்.1588-இல் ராஜா மான் சிங் [[பிகார்|பிகாரின்]] ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
 
17 மார்ச் 1594-இல் ராஜா மான் சிங் வங்காளம், பிகார், ஒடிசா பகுதிகளின் சுபேதாராக அக்பரால் நியமிக்கப்பட்டார்.<ref>Sarkar, Jadunath (1984). ''A History of Jaipur, c. 1503-1938'', New Delhi: Orient Longman, {{ISBN |81-250-0333-9}}, p.81</ref> 1594-98, 1601–1605 மற்றும் 1605-1606 கால கட்டங்களில் மூன்று முறை சுபேதாராக இருந்தவர்.
 
==ஜஹாங்கீருடன் பிணக்கு ==
அக்பர் மரணப் படுக்கையில் இருந்த போது அவரது மூன்றாவது மகனான சலீம் என்ற [[ஜஹாங்கீர்|ஜஹாங்கீருக்கும்]] நான்காம் மகனான குஸ்ருவுக்கும் இடையே அரியணையைக் கைப்பற்றுவது குறித்தான பிணக்கில், ராஜா மான் சிங் குஸ்ருவிற்கு ஆதரவு தெரிவித்தார்.
 
1605-இல் [[அக்பர்]] இறக்கையில் சலீமை ([[ஜஹாங்கீர்]]) தனது வாரிசாக அறிவித்தார். 10 நவம்பர் 1605-இல் வங்காள சுபேதாராக இருந்த ராஜா மான்சிங்கை நீக்கி குத்புதீன் கானை 2 செப்டம்பர் 1606-இல் வங்காள சுபேதாராக [[ஜஹாங்கீர்]] நியமித்தார்.<ref>Sarkar, Jadunath (1984, reprint 1994). ''A History of Jaipur'', New Delhi: Orient Longman {{ISBN |81-250-0333-9}}, pp.86-87</ref>1611-இல் [[தக்காண சுல்தான்கள்|தக்காண சுல்தான்களின்]] முகலாயப் பேரரசுக்கு எதிரான கிளர்ச்சியை, இராஜா மான் சிங் தலைமையில் அனுப்பப்பட்ட முகலாயப் படைகள் ஒடுக்கியது.
 
==மறைவு==
 
==மேற்கோள்கள்==
* Beveridge, H. (tr.) (1939, reprint 2000). ''The Akbarnama of Abu´l Fazl'', Vol. III, Kolkata: The Asiatic Society, {{ISBN |81-7236-094-0}}.
* Sarkar, Jadunath (1984, reprint 1994). ''A History of Jaipur'', New Delhi: Orient Longman {{ISBN |81-250-0333-9}}.
* Sagar, Nanuram ''Kavita Kalptaru''.
* Raja Man Singh of Amber by Rajiva Nain Prasad. Calcutta, World Press Private Ltd., 1966.
1,28,556

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2698192" இருந்து மீள்விக்கப்பட்டது