ஜெர்மனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு {{ஜி-20}}
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 138:
1935இல் நேசப்படைகள் கையகப்படுத்தியிருந்த சார் பகுதியை செருமனி மீட்டது; 1936இல் வெர்சாய் உடன்பாட்டின்படி தடை செய்யப்பட்டிருந்த ரைன்லாந்திற்குள் துருப்புக்களை அனுப்பியது.<ref>Fulbrook 1991, pp. 188–189.</ref> 1938இல் [[ஆசுதிரியா]] கையகப்படுத்தப்பட்டது; செப்டம்பர் 1939இல் [[செக்கோசிலோவாக்கியா]]வைக் கைப்பற்றியது. பின்னர் [[போலந்து படையெடுப்பு]] நடத்துமுகமாக [[மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம்]] ஏற்படுத்திக் கொண்டது. செப்டம்பர் 1, 1939இல் [[போலந்து படையெடுப்பு]] நடைபெற்றது; சோவியத் [[செஞ்சேனை]]யுடன் போலந்தைக் கைப்பறியது. இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியமும்]] [[பிரான்சு]]ம் செருமனி மீது போர் தொடுத்து [[இரண்டாம் உலகப் போர்]] தொடங்கியது.<ref name="Fulbrook 190">Fulbrook 1991, pp. 190–195.</ref> சூலை 22, 1940இல் பிரான்சின் பெரும்பகுதியை செருமனி கைப்பற்றியபின்னர் பிரான்சு செருமனியுடன் சமரசம் செய்து கொண்டது. பிரித்தானியர்கள் 1940இல் [[பிரிட்டன் சண்டை]] என்றறியப்பட்ட செருமனியின் தாக்குதல்களை முறியடித்தனர். சூன் 22, 1941இல் செருமனி மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தை மீறி [[பர்பரோசா நடவடிக்கை|சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தனர்]]. அச்சமயத்தில் செருமனியும் மற்ற [[அச்சு நாடுகள்|அச்சு நாடுகளும்]] ஐரோப்பாவின் பெரும்பகுதியையும் [[வடக்கு ஆப்பிரிக்கா]]வையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. 1943 துவக்கத்தில் [[சுடாலின்கிராட் சண்டை]]யை அடுத்து சோவியத் ஒன்றியத்திலிருந்து மீளத் துவங்கினர்.<ref name="Fulbrook 190"/>
 
செப்டம்பர் 1943இல் செருமனியின் கூட்டாளி இத்தாலி சரண்டைந்தது; இதனால் [[இத்தாலியப் போர்த்தொடர்|இத்தாலியிலிருந்த நேசப்படையினருடன்]] போரிட கூடுதல் துருப்புக்கள் வேண்டியிருந்தது. பிரான்சில் [[நார்மாண்டி படையிறக்கம்|டி-டே]] படையிறக்கம் போரின் [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)|மேற்கு முனையை]] திறந்தது; [[பல்ஜ் சண்டை|செருமனியின் எதிர்த் தாக்குதல்களுக்கிடையே]] நேசப்படைகள் 1945இல் செருமனிக்குள் நுழைந்தன. [[பெர்லின் சண்டை]]யையும் இட்லரின் மரணத்தையும் அடுத்து செருமானியப் படை மே 8, 1945இல் சரணடைந்தது.<ref>{{cite book |last=Steinberg |first=Heinz Günter |title=Die Bevölkerungsentwicklung in Deutschland im Zweiten Weltkrieg: mit einem Überblick über die Entwicklung von 1945 bis 1990 |year=1991 |publisher=Kulturstiftung der dt. Vertriebenen |isbn=978-3-88557-089-9 |language=German}}</ref> மனித வரலாற்றின் குருதிமிக்க போராக விளங்கிய இந்த உலகப்போரில் ஐரோப்பாவில் மட்டும் 40 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்;<ref>{{cite news | url = http://news.bbc.co.uk/2/hi/europe/4530565.stm | title = Leaders mourn Soviet wartime dead | work = BBC News | date=9 May 2005 |accessdate=18 March 2011 }}</ref> செருமன் படையில் மட்டும் 3.25 மில்லியன் முதல் 5.3 மில்லியன் வீரர்கள் இறந்து பட்டனர்.<ref name="Rüdiger Overmans 2000">Rüdiger Overmans. ''Deutsche militärische Verluste im Zweiten Weltkrieg''. Oldenbourg 2000. {{ISBN |3-486-56531-1}}</ref> 1 முதல் 3 மில்லியன் செருமானிய குடிமக்கள் மடிந்தனர்.<ref>Das Deutsche Reich und der Zweite Weltkrieg, Bd. 9/1, {{ISBN |3-421-06236-6}}. Page 460 (This study was prepared by the [[German Armed Forces Military History Research Office]], an agency of the German government)</ref><ref>Bonn : Kulturstiftung der Deutschen Vertriebenen, ''Vertreibung und Vertreibungsverbrechen, 1945–1948 : Bericht des Bundesarchivs vom 28. Mai 1974 : Archivalien und ausgewählte Erlebnisberichte'' / [Redaktion, Silke Spieler]. Bonn :1989 {{ISBN |3-88557-067-X}}. (This is a study of German expulsion casualties due to "war crimes" prepared by the German government Archives)</ref>
 
சிறுபான்மையர், அரசியல், சமய எதிர்ப்பாளர்களை இலக்காக கொண்டு இயற்றப்பட்ட நாட்சி ஆட்சி கொள்கைகள் பின்னதாக [[பெரும் இன அழிப்பு]] என அறியப்பட்டன. இந்த இனவழிப்பில் 6 மில்லியன் [[யூதர்]]கள், 220,000இலிருந்து 1,500,000 வரையான ரோமானி மக்கள், 275,000 [[டி 4 செயல்|மனநலம்/உடல்நலம் இல்லாதவர்கள்]], ஆயிரக்கணக்கான [[யெகோவாவின் சாட்சிகள்]], ஆயிரக்கணக்கான [[தற்பால்சேர்க்கை]]யினர், நூறாயிரக்கணக்கான [[பெரும் இன அழிப்பு#இடதுசாரிகள்|அரசியல் அல்லது சமய மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள்]] உள்ளிட்ட 10 மில்லியன் குடிமக்கள் அழிக்கப்பட்டனர்.<ref>{{cite book |last=Niewyk |first=Donald L. |title=The Columbia Guide to the Holocaust |year=2000 |publisher=Columbia University Press |pages=45–52 |author2=Nicosia, Francis R. |isbn =978-0-231-11200-0}}</ref> தவிர ஆறு மில்லியன் [[உக்ரைனியர்]] மற்றும் [[போலந்து|போலந்துக்காரர்களும்]] 2.8 மில்லியனாக மதிப்பிடப்படும் சோவியத் போர்க்கைதிகளும் நாட்சி ஆட்சியில் உயிரிழந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஜெர்மனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது