மாரியா கொலம்பகே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1984 பிறப்புகள்
சி பராமரிப்பு, added orphan tag
வரிசை 1:
{{Orphan|date=ஏப்ரல் 2019}}
 
{{Infobox pageant titleholder
| name=மாரியா கொலம்பகே
வரி 9 ⟶ 11:
}}
 
'''ரொமந்தி மாரியா கொலம்பகே''' (Romanthi Maria Colombage, மே 19, 1984) ஓர் இலங்கை அழகுராணியும், விளம்பர துறையைச் சேர்ந்தவரும், [[இலங்கையின் உலக அழகி]]ப் பட்டம் பெற்றவரும் அவார்.<ref>When beauty was crowned. http://www.island.lk/2007/09/30/leisure1.html</ref> ஆடை வடிவமைப்பு வல்லுநரான கொலம்பகே [[சீன மக்கள் குடியரசு|சீனாவில்]] 2007 இல் நடைபெற்ற உலக அழகிப்போட்டியில், இலங்கையின் சார்பில் போட்டியிட்டு இலங்கை உலக அழகிப்பட்டம் வென்றார். கொலம்பகே இலங்கையின் மிகப் புகழ்பெற்ற விள்ம்பர அழகி ஆவார். ஐரோப்பா, ஆசியா ஆகிய நாடுகளில் ஆடை அலங்கார நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளார்.
 
== பின்னணி ==
கொலம்பகே இலங்கையின் கொழும்பில் பிறந்தவர். இவருக்கு ராப்தி என்ற ஒரு சகோதரி உள்ளார்.<ref>Daily mirror March 5th 2007</ref> கொழும்புவின் ஹோலி ஃபேமிலி கான்வெண்டில் படிப்பைத் தொடங்கிய இவர் தனது 18 ஆம் வயதில் ஆடை வடிவமைப்பில் பட்டயக் கல்வியை முடித்தார். தனது இருபத்தொன்றாம் வயதில் சந்தைப்படுத்துதலில் பட்டயக் கல்வி பெற்றார். பின்னர் இங்கிலாந்தின் கார்டிஃப்-இல் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகம் மற்றும் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.<ref>Miss Sri Lanka for Miss World 2007 Romanthi Maria Colombage in China for Miss World. Article from: Hi!! The Society Magazine Series 6 Volume 1 2008. Retrieved March 28, 2009</ref>
 
தனது பதினேழாம் வயதில் ஒரு நடன அமைப்பாளாரின் வேண்டுகோளுக்கிணங்கி, கொழும்பில் ஓர் ஆடை அலங்கார நிகழ்வில் கலந்துகொண்டார். அதன் பின்னரே ஐரோப்பிய ஆசிய நாடுகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளத் தொடங்கினார். 2003 இல் இலங்கையின் குறிப்பிடத்தக்க ஆடை அடையாளப் பெயர்களுள் ஒன்றான “பெல்லூசி” என்ற நிறுவனம் வடிவமைக்கப்பட்ட படைப்புகளில் முக்கிய பங்காற்றினார். இது [[வால்ட் டிஸ்னி நிறுவனம்]] மற்றும் ஹால்மார்க் வடிவமைப்புகளுக்குப் பெயர்பெற்ற, ரோஷன் பெரேரா என்பவருடைய நிறுவனமாகும். ஆடை வர்த்தகத்தைப் பல்வகைப்படுத்துவதில் கொலம்பகே ஒரு கருவியாக இருந்து செயல்பட்டார்.<ref>http://www.priu.gov.lk/news_update/features/20020107model_working_environment.htm</ref>
 
== பணி ==
கொலம்பகே இந்தியா மற்றும் இலங்கையில் பல்வேறு புகைப்படமெடுக்கும் நிகழ்வுகளில் கலந்துகொண்டார். இவருடைய பதினெட்டாம் வயதில் துபாய், பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளில் மாடலிங்காக கலந்துகொண்டு திரும்பினார்.பின்னர் ஜெர்மனி, லண்டன், பாரிஸ் ஆகிய இடங்களில் அலங்கார நடை பயின்று மேடைகளில் தோன்றினார். மேலும் சிங்கப்பூர், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளுக்கும் சென்றார். விரைவிலேயே தன்னுடைய பெயரை நிலைநாட்டி தாயகமான இலங்கையின் சார்பில் அழகிப்போட்டியில் கலந்துகொண்டார். 2007 இல் உலக அழகிப்போட்டியில் இலங்கையின் சார்பில் கலந்துகொண்டு [[இலங்கையின் உலக அழகி]]ப் பட்டம் சூட்டப்பெற்றார்.<ref>[http://www.island.lk/2007/09/30/leisure1.html inner.gif<!-- Bot generated title -->]</ref>
 
2008 இல் இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களூருரைச் சேர்ந்த பிரசாத் பிட்டப்பா தனது நிறுவனத்திற்கான மாடலிங்கிற்காக நடிக்க இவரை அனுகினார். 2008 இல் அவருடைய ''அபஹரன்'' நகைக்கடைக்கான பெங்களூரின் புதியமுகமாக கொலம்பகே தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>[http://www.abharan.in ABHARAN JEWELLERS - Bangalore's Leading Jewellers<!-- Bot generated title -->]</ref> அதன் பின்னர் இவர் இந்தியாவிலேயே ஆறு மாதங்கள் தங்கியிருந்து மாடலிங் செய்தார். 2008, 2009 களில் கொலம்பகே இலங்கையின் கொழும்பு நகைக்கடைகளின் விளம்பர அழகியாகத் தோன்றினார். 2010 புத்தி பத்தீக் என்ற நீச்சலுடை நிறுவனத்தின் பத் டங்களில் இடம்பிடித்தார்.<ref>[http://alefiyaakbarally.blogspot.com/2010/07/beach-batik-buddhi-batiks.html Alefiya Akbarally<!-- Bot generated title -->]</ref> ''நேஷன் ட்ரஸ்ட் பேங்க், சிங்கர், ஆசியன் அலையன்ஸ் காப்பீடு'' ஆகிய நிறுவன விளம்பரஙகளில் தோன்ற கொலம்பகே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
== வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/மாரியா_கொலம்பகே" இலிருந்து மீள்விக்கப்பட்டது