'''விஜய் சேதுபதி''' (16 சனவரி 1978) தமிழ் திரைப்பட நடிகர். ராஜபாளையத்தில்[[வேலூர்|வேலூரில்]] பிறந்த இவர் தன் தொழில் வாழ்க்கையை கணக்காளராகத் தொடங்கினார். கணக்காளர் பணி பிடிக்காததால் நடிப்புப் பணியை தேர்ந்தெடுத்தார். 2010இல் [[தென்மேற்கு பருவக்காற்று (திரைப்படம்)|தென்மேற்கு பருவக்காற்று]] திரைப்படத்தில் முன்னணி கதை மாந்தராக நடிக்கும் வரை 5 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் சிறு வேடங்களில் நடித்தார். இவர் [[பீட்சா (திரைப்படம்)|பீட்சா]] (2012), [[நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்]] (2012) போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது சன் தொலைக்காட்சியில் நம்ம ஊரு ஹீரோ இன்னும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்
==வாழ்க்கைக் குறிப்பு ==
===தொடக்ககால வாழ்க்கை===
===தொடக்ககால வாழ்க்கை===ராஜபாளையத்தில்வேலூரில் பிறந்த இவர் தன் படிப்பை [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர் மாவட்டத்திலும்]], [[சென்னை]]யிலும் மேற்கொண்டார். பள்ளியில் தான் சராசரிக்கும் கீழான மாணவன் என்றும் விளையாட்டிலும் பாடத்திட்டம் சாரா நிகழ்வுகளிலும் தனக்கு நாட்டம் இருந்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இளநிலை வணிகவியலில் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் துபாயில் கணக்காளராக பணி புரிந்தார். அவ்வேலை பிடிக்காததால் 2003இல் இந்தியாவுக்குத் திரும்பினார். நிழல்படக்காரர் ஒருவர் இவரின் முகம் நிழல்படங்களில் அழகாக தெரியக்கூடிய ஒன்று என்று சொன்னது இவர் நடிப்புத்துறையை தேர்ந்தெடுக்க உந்துதலாக இருந்தது என்று கூறியுள்ளார்.{{cn}}