அம்பேத்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்
சி பராமரிப்பு using AWB
வரிசை 35:
|url=http://www.columbia.edu/itc/mealac/pritchett/00ambedkar/txt_ambedkar_waiting.html |title=Waiting for a Visa, by Dr. B. R. Ambedkar |publisher=Columbia.edu |accessdate=17 July 2010| archiveurl= http://web.archive.org/web/20100624202609/http://www.columbia.edu/itc/mealac/pritchett/00ambedkar/txt_ambedkar_waiting.html| archivedate= 24 June 2010 <!--DASHBot-->| deadurl= no}}</ref> அமருவதற்கு இம்மாணவர்கள் ஒரு கோணிப்பையைத் தங்கள் வீட்டிலிருந்தே கொண்டு வர வேண்டும்.<ref>{{cite news | last =KURIAN | first =SANGEETH | title =Human rights education in schools| newspaper =The Hindu | url =http://www.hindu.com/yw/2007/02/23/stories/2007022304300600.htm }}</ref> வடமொழி கற்கவும் தடை இருந்தது.<ref name="அம்பேத்கர்">{{cite press_release | title=அண்ணல் டாக்டர் அம்பேத்கர் | publisher=தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகச் செய்தி இதழ் | date=மார்ச்சு& ஏப்ரல்- 2011 | accessdate=மார்ச்சு 05, 2013}}</ref> இக்கொடுமைகளைக் கண்ட அம்பேத்காரின் பிஞ்சுமனம் வெம்பியது.
 
பீமாராவ் ராம்ஜி அம்பேவாதேகர் என்பது அம்பேத்கரின் இயற்பெயராகும். அம்பேவாதேகர் என்பது இவரது சொந்த ஊரின் நினைவாக வழங்கப்படும் குடும்பப் பெயராகும். இவர்மீது அன்பும் அக்கறையும் கொண்ட பிராமண ஆசிரியரான மகாதேவ அம்பேத்கர் இவரின் குடும்பப் பெயரான அம்பேவாமேகர் என்பதை மாற்றி தன் குடும்ப பெயரான அம்பேத்கர் என்பதை இவரின் பெயரில் சேர்த்தார். இது ஒரு சாரரின் கருத்து. ஆனால் இந்த கருத்து முற்றிலும் ஏற்று கொள்ள கூடியதாக இல்லை. ஏனெனில் இந்தியாவில் எந்தவொரு பிராமணருக்கும் இத்தகைய குடும்ப பெயர் இல்லை. மேலும் இது தங்களின் சமூகத்திற்கு பெருமையை சேர்த்து கொள்ள அவர்கள் செய்து கொண்ட ஒரு போலி இடைச்செருகல் என்பதே பலரின் குற்றசாட்டு. இவர் அம்பவாடே என்னும் கிராமத்தில் பிறந்ததால் இவரை அம்பவாடேகர் என்று முதலில் அழைத்தனர். பின்னர் அதுவே அம்பேத்கர் என்றானது என்பது ஒரு சாரரின் கருத்து. <ref name = Ambavadekar>{{cite web|url=http://www.outlookindia.com/article.aspx?263871 |title=Bhim, Eklavya |publisher=outlookindia.com |accessdate=17 July 2010| archiveurl= https://web.archive.org/web/20100811223316/http://outlookindia.com/article.aspx?263871| archivedate= 11 August 2010 | deadurl= no}}</ref> 1904 ஆம் ஆண்டு அவரது குடும்பம் [[மும்பை]]க்குச் சென்றது. அங்கு எல்பின்ஸ்டன் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்து தனது கல்வியைச் தொடர்ந்தார் அம்பேத்கர். குடும்பத்தில் மிகவும் வறுமை சூழ்ந்த நிலையிலும் கல்வியை விடாமல் மெட்ரிக்குலேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இவரது குடும்பமே அம்பேத்கரின் கல்வியில் ஆர்வம் காட்டியது. மெட்ரிகுலேசன் தேர்வு முடிந்ததும் அம்பேத்கருக்கும் ஒன்பது வயதான ராமாபாய் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. கல்லூரியில் சேர்ந்து கல்வியைத் தொடர விரும்பிய அம்பேத்கருக்கு பரோடா மன்னர் உதவி புரிந்தார். சாதிக் கொடுமை கல்லூரியிலும் தொடர்ந்தது. ஆயினும் பேராசிரியர் முல்லர் என்பவர் அன்புடனும் அனுதாபத்துடனும் நூல்கள், உணவு மற்றும் உடைகள் கொடுத்து உதவினார். இவரின் உதவியால் அம்பேத்கர் நன்கு படித்து பி.ஏ இளங்கலைப் பட்டதாரியானார்.
 
படிப்பு முடிந்ததும் குடும்பச் சுமையை ஏற்பதற்காக சிறிது காலம் பரோடா மன்னரின் அரண்மனையில் படைகளுக்குத் தலைவராக 'லெப்டினன்ட்' பதவியில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் நிலவிய சாதி வேற்றுமையால் மனம் நொந்து மும்பைக்கே திரும்பினார். பின்னர் மும்பைக்கு வந்த பரோடா மன்னரை நேரில் சந்தித்து தான் வேலைக்கு வர இயலாத சூழ்நிலையை எடுத்துக் கூறினார். மிகவும் வேதனையடைந்த மன்னர், மிகச் சிறந்த கல்வியாளரான அம்பேத்கர் [[கொலம்பியா பல்கலைக்கழகம்|கொலம்பியா பல்கலைக் கழகத்தில்]] எம்.ஏ பயில ஏற்பாடு செய்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உயர்கல்வி பயின்றவர் என்ற பெருமையும் பெற்றார்.
வரிசை 53:
பிரித்தானியர்கள் அம்பேத்கரின் கோரிக்கையை ஏற்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனி தொகுதி ஒதுக்கினர். இதை எதிர்த்து காந்தி உண்ணாவிரதம் மேற்கொண்டு கைதானார். அவர் [[புனே]]விலுள்ள [[ஏர்வாடா சிறை|ஏர்வாடா மத்திய சிறையில்]] அடைக்கப்பட்டார். இந்த உண்ணாவிரதத்தால் நாட்டில் குழப்பம் ஏற்பட்டது. மதன் மோகன் மால்வியா, பால்வான்கர் பாலோ போன்ற தலைவர்கள் அம்பேத்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக பெரும் வன்முறை ஏற்படலாம் என்று கூறப்பட்டதால் அம்பேத்கர் காந்தியுடன் உடன்பாடு செய்து கொண்டார்.<ref>{{cite journal |last1=Omvedt |first1=Gail |year=2012 |title=A Part That Parted |journal=Outlook India |publisher=The Outlook Group |url=http://www.outlookindia.com/article.aspx?281929 |accessdate=12 August 2012 }}</ref> இதைத் தொடர்ந்து காந்தி தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி தொகுதி வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டார் இது '''புனே உடன்படிக்கை''' எனப்படும். இதன்படி தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி தொகுதிகள் ஒதுக்கப்படும் என்றும் அதில் அனைவரும் வாக்களிக்கலாம் என்றும் முடிவாகியது.<ref>{{Cite news|url=http://www.mkgandhi.org/articles/epic_fast.htm|title=Gandhi's Epic Fast}}</ref>
 
அம்பேத்கரின் புகழ்பெற்ற குற்றச்சாட்டு, “காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. காலத்திற்கேற்ப அவர் குணம் மாறும்; ஆதரவும் மாறும்; ஆனால் இந்து மதத்தில் ஒரு அடிமைகளாக தாழ்த்தப்பட்டவர்கள் காலம் முழுவதும் நீடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது”,
 
பூனா உண்ணாவிரதத்தில் தன்னை நெருக்குதலுக்குள்ளாக்கி உடன்பட வைத்தபோது காந்தியின் முகத்துக்கு நேரே அம்பேத்கர் இப்படிச் சொல்கிறார்: “காந்திஜி, உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம்தான். ஆனால் அதை அடிக்கடி கையிலெடுக்க வேண்டாம். ஆயுதமும் மழுங்கிவிடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த தேசத்துக்கு நீங்கள் தேவைப்படலாம்!”
வரிசை 82:
==பௌத்த சமயத்திற்கு மாறுதல்==
[[File:Twenty-two vows of Buddhism by Dr. Ambedkar at Deekshabhoomi.jpg|thumb|rihgt|350px|நாக்பூரின் [[தீக்சாபூமி]]யில் அம்பேத்கரின் 22 உறுதிமொழிகள் எழுதப்பட்ட கற்றளி]]
[[File:Diksha Bhumi.jpg|thumb|left|250px|நாக்பூரின் [[தீக்சாபூமி]]யில் அம்பேத்கர் முயற்சியால் எழுப்பட்ட, [[சாஞ்சி]] மாதிரியான [[தூபி|ஸ்தூபி]]]]
அம்பேத்கர் பழங்கால இந்தியாவைப்பற்றியும் மானிடவியலைப்பற்றியும் செய்த ஆராய்ச்சியின் மூலம் மகர் மக்கள் பௌத்த சமயத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் பௌத்த பழக்கங்களை விட மறுத்ததால் கிராமத்தை விட்டு வெளியே தீண்டத்தகாதவர்கள் போல் வாழ வற்புறுத்தப்பட்டார்கள் என்றும் கருதினார்.{{citation needed|date=march 2013}} இதனாலயே அவர்கள் தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் என்று கருதினார்.{{citation needed|date=march 2013}} இதைப்பற்றி '''யார் சூத்திரர்கள்?''' (Who were the Shudras?) என்ற புத்தகத்தை எழுதினார்.
 
பௌத்த சமயத்தை பற்றி நன்கு படித்த அம்பேத்கர் 1950 முதல் பௌத்த சமயத்தின் மீது தன் கவனத்தை முழுவதுமாக திருப்பினார். இலங்கையில் நடைபெற்ற பௌத்த துறவிகள் மற்றும் அறிஞர்களின் கருத்தரங்கில் கலந்து கொண்டார்.<ref>{{cite book |editor1-first=Sanjay |editor1-last=Paswan |editor2-first=Paramanshi |editor2-last=Jaideva |title=Encyclopaedia of Dalits in India: Leaders |series=Encyclopaedia of Dalits in India |volume=Vol.4 |year=2004 |publisher=Kalpaz Publications |location=Delhi |isbn=81-7835-033-5 |page=32 |chapter=B.R. Ambedkar: Messiah of Dalits }}</ref> புனேக்கு அருகில் புதிய பௌத்த விகாரை அர்பணித்த பின் தான் பௌத்தத்தை பற்றி புத்தகம் எழுதிக்கொண்டுள்ளதாகவும் விரைவில் அது நிறைவடையும் என்று கூறினார். அதிகாரபூர்வமாக பௌத்த சமயத்திற்கு திரும்புவது பற்றி திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.<ref name="Columbia7">{{cite web| last = Pritchett| first = Frances| url = http://www.columbia.edu/itc/mealac/pritchett/00ambedkar/timeline/1950s.html| title = In the 1950s| format = PHP| accessdate = 2 August 2006| archiveurl= http://web.archive.org/web/20060620200055/http://www.columbia.edu/itc/mealac/pritchett/00ambedkar/timeline/1950s.html| archivedate= 20 June 2006 <!--DASHBot-->| deadurl= no}}</ref> 1954ம் ஆண்டு இரு முறை [[பர்மா]]விற்கு பயணம் மேற்கொண்டார். இரண்டாவது முறை மூன்றாவது உலக பௌத்த சமய மாநாடு [[ரங்கூன்|ரங்கூனில்]] நடைபெற்றதில் கலந்து கொள்ள சென்றார்.<ref name="Docker">{{cite book |editor1-last=Ganguly |editor1-first=Debjani |editor2-last=Docker |editor2-first=John |title=Rethinking Gandhi and Nonviolent Relationality: Global Perspectives |edition= |series= Routledge studies in the modern history of Asia |volume=46 |year=2007 |publisher=Routledge |location=London |isbn=0415437407 |oclc=123912708 |page=257}}</ref> 1955ம் ஆண்டு பாரதீய பௌத்த மகாசபாவை தோற்றுவித்தார்.<ref name="Quack">{{cite book |last1=Quack |first1=Johannes |title=Disenchanting India: Organized Rationalism and Criticism of Religion in India |year=2011 |publisher=Oxford University Press |isbn=0199812608 |oclc=704120510 |page=88}}</ref> 1956ம் ஆண்டு '''புத்தரும் அவரின் தம்மமும்''' (The Buddha and His Dhamma) என்ற புத்தகத்தை எழுதினார், அவரின் மறைவுக்கு பின் அப்புத்தகம் வெளியிடப்பட்டது.<ref name="Quack"/>
 
இலங்கை பௌத்த துறவி ஹம்மல்வா சதாடிஷ்சாவை கலந்த பின் <ref>[http://www.sundayobserver.lk/2005/03/20/fea31.html Online edition of Sunday Observer – Features]. Sundayobserver.lk. Retrieved on 2012-08-12.</ref> அம்பேத்கர் அக்டோபர் 14, 1956ல் [[நாக்பூர்|நாக்பூரில்]] உள்ள [[தீக்சாபூமி]]யில் அதிகாரபூர்வமாக விழா எடுத்து பௌத்த சமயத்திற்கு மாறினார். அவருடன் அவர் ஆதரவாளர்கள் 500,000 பேரும் [[பௌத்தம்|பௌத்த சமயத்திற்கு]] மாறினார்கள்.<ref name="Columbia7"/> அதன் பின் இவர் [[காட்மண்டு]]வில் நடைபெற்ற நான்காவது உலக பௌத்த கருத்தரங்கத்திற்கு சென்றார். <ref name="Docker"/> இவரின் '''புத்தர் அல்லது கார்ல் மார்க்சு''' என்ற புத்தகம் நிறைவுபெறாமலேயே உள்ளது.<ref>[http://www.ambedkar.org/ambcd/20.Buddha%20or%20Karl%20Marx.htm Buddha or Karl Marx – Editorial Note in the source publication: Dr. Babasaheb Ambedkar: Writings and Speeches, Vol. 3]. Ambedkar.org. Retrieved on 2012-08-12.</ref>
 
==மரணம்==
வரிசை 94:
1948ல் இருந்து அம்பேத்கர் [[நீரிழிவு நோய்|நீரிழிவு நோயால்]] பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும் <ref name="Columbia7"/> 1954 சூன் முதல் அக்டோபர் வரை படுக்கையில் கழிக்கநேர்ந்தது. இவரின் உடல்நலம் அதிகரித்த கசப்பூட்டும் அரசியல் நிகழ்வுகளால் மேலும் பாதிக்கப்பட்டது. 1955ம் ஆண்டில் இவர் உடல்நலம் மேலும் மோசமடைந்தது. '''புத்தரும் அவரின் தம்மாவும்''' என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு 1956 டிசம்பர் 6ல் டில்லியிலுள்ள இவர் வீட்டில் தூக்கத்தில் உயிர் பிரிந்தது.
 
பௌத்த சமய முறையில் இவரின் உடல் தாதர் சௌபதி கடற்கரையில் டிசம்பர் 7 அன்று தகனம் செய்யப்பட்டது.<ref>{{Cite news|url=http://www.ambedkar.org/Babasaheb/lifeofbabasaheb.htm|title=Life of Babasaheb Ambedkar }}</ref> இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.<ref name="Sangharakshita 2006 162–163">{{cite book |author=Sangharakshita |title=Ambedkar and Buddhism |edition=First South Asian Edition |year=2006 |origyear=1986 |publisher=Motilal Banarsidass Publishers Pvt. Ltd |location=New Delhi |isbn=81-208-3023-7 |pages=162–163 |chapter=After Ambedkar }}</ref> டிசம்பர் 16, 1956 அன்று மதமாற்றத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.<ref name="Detlef Kantowsky 2003">{{cite book |author=Detlef Kantowsky |title= Buddhists in India today:descriptions, pictures, and documents|year= 2003 |publisher=Manohar Publishers & Distributors}}</ref> அதற்கு முன்பே அம்பேத்கர் மரணமடைந்ததால் அவர் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்திலேயே அவரின் உடலை பார்க்க வந்தவர்கள் மத மாற்றம் செய்து கொண்டனர்.<ref name="Detlef Kantowsky 2003"/>
 
மரணத்திற்கு பின் இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான [[பாரத ரத்னா]] 1990ம் ஆண்டு வழங்கப்பட்டது.
வரிசை 101:
'எனக்குத் [[தாயகம்]] உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… [[நாய்|நாய்கள்]], [[பூனை|பூனைகளைவிட]] நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், [[நீர்|குடிதண்ணீர்]] பெறவும் [[மனித உரிமைகள்|உரிமை]] இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த [[நாடு|நாட்டைத்]] தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் [[மலை|மலைபோல்]] எங்கள் மீது சுமத்தியதே ஆகும். [[யுகம்|யுகயுகமாகக்]] காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு [[மனித உரிமைகள்|மனித உரிமைகளுக்காக]] நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த [[இந்தியா|நாட்டுக்கு]] எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’
 
[[1931]]-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.
 
*
"https://ta.wikipedia.org/wiki/அம்பேத்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது