28,912
தொகுப்புகள்
சி (பராமரிப்பு using AWB) |
|||
[[படிமம்:வகுப்பு அறையில் விவாதம்.jpg|thumb|மாணவர்கள் விவாதம் செய்தல்]]<br />[[படிமம்:US Navy 100305-N-7676W-182 Cmdr. Jim Grove, from the Office of Naval Research Navy Reserve Program 38, left, helps tudents from McKinley Technology High School make adjustments to their robot.jpg|thumb|right|''இயந்திர மனிதன்'' உருவாக்கும் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் [[FIRST Robotics Competition]], Washington, D.C.]]
{{அறிவியல்}}
'''கல்வி''' (Education) என்பது குழந்தைகளை, உடல், மற்றும் மன வளர்ச்சியில் [[அறிவு]], [[நல்லொழுக்கம்]] ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும்.<ref>UNESCO(1975)A Systems Approach to Teaching And Learning Procedures:A Guide for Educators in Developing countries,Paris</ref> கல்வியாளர்கள் கூற்றின்படி இளைய தலைமுறையினரை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக [[நிறுவனம்]]. அறிவு, [[திறமை]] போன்றவற்றையும் தந்து ஒரு புதிய சமூகத்தைச் உருவாக்கிப் பாண்பாடு, [[நடத்தை]], போன்றவற்றையும் தந்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாகவும் மாற்றம் அடையசெய்கிறது. இது சமுதாய நுட்பத் தகைமை ஏற்படுத்துவதையும் கல்வி [[கற்றல்|கற்றலையும்]], கற்பித்தலையும் குறிக்கும்<ref>Kulkarni,S.S (1986): Introduction to Educational Technology, Bombay: Oxford and IBH Publishing co
இது [[திறன்]]கள்,[[தொழில்]]கள், உயர்தொழில்கள் என்பவற்றோடு, [[மனம்]], [[நெறிமுறை]], [[அழகியல்]] என்பவை சார்ந்த வளர்ச்சியையும் சமுதாய வளர்ச்சியில் பங்கு பெறச்செய்யும் அமைப்பு ஆகும்.
== கல்வி என்ற சொல்லின் பொருள் ==
'''கல்வி''' என்ற தமிழ்ச் சொல் '''கல்''' (ஆய்வு செய்) என்ற வேர்ச் சொல்லில் இருந்து வருகின்றது.
|url=http://www.tamilvu.org/library/dicIndex.htm}}</ref> கல்வி என்ற சொல்லிற்கான [[ஆங்கிலம்|ஆங்கிலச்]] சொல் Education என்பதாகும். இந்தச் சொல் ēducātiō <ref>[https://en.wiktionary.org/wiki/educatio#Latin educatio]</ref> என்ற இலத்தின் மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். இந்த ēducātiō சொல்லானது ''வளர்த்தல்'' என்ற பொருளைக் குறிக்கிறது. மேலும் இது ''கற்பித்தல், பயிற்றுவித்தல்'' என்னும் பொருளைத் தரும் ēducō <ref>[https://en.wiktionary.org/wiki/educo#Latin educo]</ref> என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சொல்லிற்கு ஒத்த சொல் வெளிக்கொணரல், உயர்த்திவிடல், முன்னேற்றிவிடல் போன்ற பொருளைத் தரும் ēdūcō என்பதாகும். எனவே கல்வி என்பது தகுந்த சூழ்நிலையை உருவாக்கி மனிதர்களை உள்ளார்ந்த தகுதிகளை வெளியில் கொண்டு வருவது ஆகும்.
[[படிமம்:Plato's Academy mosaic from Pompeii.jpg|thumb|left|[[பிளேட்டோ]] கல்விக்கூடம், [[பொம்பெயி|பொம்பெயி, பழங்கால உரோமானிய நகரம்]]]]
[[படிமம்:Ricci Guangqi 2.jpg|thumb|upright|மட்டேயோ ரிக்கி (Matteo Ricci) (இடது), சு குவாங்கி (Xu Guangqi) (வலது). யூக்ளிட்ஸ் எலமென்ட்ஸ் (Euclid's Elements), சீன மொழிப் பதிப்பு, 1607.]]
பண்டைக் காலங்களில், மக்கள் ஒருவருக்கொருவர் பார்த்துப் பழகியும், பேச்சு வழக்கிலும், கதைகள் சொல்லியும், கேட்டும் அறிவை வளர்த்துக் கொண்டனர். இந்தப் பின்னணியில் இருந்து கல்வி முறைகள் உருவாயின. எடுத்துக் காட்டாக, கி.மு. 2055-இல், எகிப்தில் பள்ளிக்கூடங்கள் இருந்தன <ref>{{cite book | title=The Mind of Egypt: History and Meaning in the Time of the Pharaohs | author=Assmann, Jan | year=2002 | page=127}}</ref>. [[பிளேட்டோ]] கிரேக்கத்தில் உள்ள ஏதென்சு நகரத்தில் கி.மு. 387-இல் கல்விக்கூடம் ஒன்றை நிறுவினார். [[அரிஸ்டாட்டில்]] (கி.மு.384-கி.மு.322) அங்கு இருபது ஆண்டுக் காலம் பயின்றார். இந்தக் கல்விக்கூடம் தான் ஐரோப்பாவின் முதல் கல்விக் கூடம் ஆகும்.
சீனாவில், [[கன்பூசியஸ்]] (கி.மு.551– கி.மு.479) பரப்பி வந்த கருத்துக்கள் இன்றுவரை சீனா, கொரியா, ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளில் பின்பற்றப் படுகின்றன.
தென் அமெரிக்காவில், [[அஸ்டெக் நாகரிகம்|அஸ்டெக்]] இனத்தவர் (கி.பி. 1300 - கி.பி. 1521 ) '''தலகாகுஅபகுவாலிஸ்திலி''' (tlacahuapahualiztli) என்ற ("ஒருவரை அறிவுள்ளவராக ஆக்கும்") முறையைக் கையாண்டு வந்தனர்.
இன்று, பல நாடுகளில், இளைய சமுதாயத்தினருக்குக் கல்வி காட்டாயமாக ஆக்கப் பட்டுள்ளது.
=== முறைசாரா கல்வி ===
முறைசார்ந்த கல்விக்கு<ref>Indira Gandhi National open University(2005):Teachers and school BlocK 1,New Delhi</ref> முற்றிலும் மாறுபட்டது முறைசாரா கல்வி இக்கல்வியும் ஒரு வடிவமைப்பு கொண்டது. சில பயிற்சிகளையும், மதிப்புகளையும், அறிவையும் வளர்க்க உதவும் முறைகளும் இந்த கல்வி முறையில் இடம் பெறும். ஒரு குடும்பமும், குழந்தைகளுக்குக் கலாச்சாரம், மொழி ஆகியனவற்றைச் சொல்லிக் கொடுக்கின்றன. செய்வன, இது செய்யக்கூடாதது என அறிவுறுத்தல், மற்றும் பழக்கம் வழக்கம் மூலம் தங்கள் பண்பாட்டையும் சொல்லிகொடுப்பது ஆகியன முறைசாரா கல்வி ஆகும்.
முறைசார்ந்த கல்விக்கு ஒரு குறிப்பிட்ட வயது, காலமுறை உண்டு. ஆனால் எந்த விதமான கட்டுபாடுகள் இல்லாத முறையே முறைசாரா கல்வியாகும். இதில் பெரியவராகி பள்ளியில் படிக்கும் வாய்ப்பை இழந்து இருக்கும் [[ஆண்|ஆண்கள்]], [[பெண்கள்]] மற்றும் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் வாய்ப்புகளை முறைசாரா கல்வி அளிக்கின்றது.
முறைசாராக் கல்வி வாய்ப்புக்களும் பல உள்ளன. இந்த வகையில் அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு [[அருங்காட்சியகம்|அருங்காட்சியகங்கள்]], [[நூல்நிலையம்|நூல்நிலையங்கள்]] போன்றவை உதவுகின்றன. இதற்காகவே இத்தகைய நிறுவனங்கள் சமுதாயத்தின் மானியங்கள் மூலம் நடத்தப்படுகின்றன. தொழில் செய்யும்போது பெற்றுக் கொள்ளும் அனுபவக் கல்வி உட்பட, ஒருவர் தன் வாழ்க்கைக் காலத்தில் பெறும் பட்டறிவும் முறைசாராக் கல்வியுள் அடக்கம்.
=== கற்றல் அனுபவம் ===
கல்வியானது கற்றல் அனுபவத்தைத் தருகிறது. ஓர் நபரின் கற்றல் அனுபவம் அது மாணவரின் [[உடல்|உடல் வளர்ச்சி]], [[உள்ளம்|உள்ள வளர்ச்சி]], [[மனம்|மன வளர்ச்சி]],[[உணர்ச்சி|உணர்வுகளின்வளர்ச்சி]] ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சியைப் பெற உதவுகிறது.
கற்றல் அனுபவத்தில் ஒரு நபரின் பங்கேற்பு என்பது படிப்பு, [[ஆய்வு|ஆய்வுகள்]], [[விளையாட்டு]], செயல் திட்டத்தில் ஈடுபடுதல், விவாதத்தில் பங்கேற்பு, குழுவேலை போன்றவற்றில் இருக்கிறது.
=== கல்வி வழிகாட்டி ===
[[உடல்]],<ref>
=== குடும்பம் மற்றும் பெண்களின் கல்வி முன்னேற்றம். ===
== பள்ளி ==
[[பள்ளி]]<ref>Dewey,John (1963).Democracy and Education.macmillan new york
பள்ளிப்படிப்புக் கல்வி என்பது ஒரு முறையான கல்வித்திட்டம் மூலம் அறிவு, திறமைகள், உடல், உள்ளம், மனவெழுச்சி, சமூக சிந்தனை மற்றும் ஆன்மிகச் சிந்தனைகள் ஆகியவற்றை கல்வி அளிக்கும் இடம் பள்ளிக்கூடம் ஆகும். பள்ளிகள் ஒரு திட்ட வரைவின்படி சிறப்பான பாடப்பிரிவுகள் மூலம் மற்றும் அனுபங்கள், தெரிந்துகொள்ள முடியாதவைற்றை ஒரு அறையில் சொல்லி கொடுக்கும் இடம்தான் பள்ளி. "பள்ளிப்படிப்பு என்பது நீண்ட வாழ்வின் பாடங்களைக் கற்று கொடுப்பது ஆகும். இது குழந்தைப்பருவத்திலிருந்து பள்ளியின் இறுதி வரை செயல்படும்"
=== பல்கலைக்கழக கல்வி அல்லது தொழிற்கல்வி ===
இந்த நிலை மாணவர்கள் மேற்படிப்பு அல்லது தொழிற்கல்வியாக அமையலாம். இக்கல்வி அவர்களுக்கு உண்மையான மற்றும் பழமையான அறிவு, மற்றும் நம்பிக்கையை உண்டு பண்ணுதல் போன்ற ஊக்குவிக்கும் கல்வியாக அமைக்கிறது. பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டுவந்து அவர்களை சமுதாயத்தில் சிறந்த முறையில் சேவைகள் செய்திட வழிவகுக்க்கப்படுகிறது. அதாவது அவர்களின் கண்டுபிடிப்புகள், [[வேளாண்மை]], மருத்துவம், [[தொழில்நுட்பம்]] போன்ற துறைகளில் ஈடுபட வழிவகை செய்யப்படுகிறது.
==கல்வித் துறை==
[[படிமம்:北师大西门.jpg|thumb|
கல்வித் துறை (Education sector) என்பது கல்வியுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களைக் குறிக்கும்; அதாவது, இதில் அரசாங்கத்தின் கல்வித் துறை, கல்வி அதிகாரிகள், பயிற்சி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியன அடங்கும். இதன் முதல் நோக்கம் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் கல்வி அறிவைக் கொடுப்பது ஆகும். பாடத் திட்டங்களை உருவாக்குவோர், கல்விக்கூடங்களை நடத்த தலைமை ஆசிரியர்கள், துணை வேந்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் போன்றோர் பலரின் துணை கொண்டு கல்வி அறிவைச் சமுதாயத்திற்குக் கொடுக்கும் பணி நடை பெறுகின்றது.
| url =https://www.oecd.org/pisa/keyfindings/Vol4Ch4.pdf
| title =School Governance, Assessments and Accountability
| publisher =OECD
| access-date =25 June 2017
| quote = }}</ref> பாடத் திட்டங்களில், பாலுறவைப் பற்றி சரியான புரிதல் மாணவர்களுக்கு வர தேவையான கருத்துக்களைச் சேர்க்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் துணை நிறுவனங்கள் பல பரிந்துரை செய்துள்ளன.
==முன்னேற்றத்திற்கான இலக்குகள்==
[[படிமம்:Education index UN HDR 2007 2008.PNG|thumb|உலக வரைப் படம்: கல்வி குறியீட்டெண் (2007/2008 மனிதவள மேம்பாட்டு அறிக்கை)]]
முன்னேற்றத்திற்கான இலக்குகள் (Development goals) என்பது கல்வி என்னென்ன இலக்குகளை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றது என்பதைப் பற்றியதாகும். கல்வி சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்; பொருளாதார மேம்பாட்டினை உறுதி செய்ய வேண்டும்; ஒவ்வொரு பிரிவினருக்கும் தங்கள் இலக்குகளை தாங்கள் விரும்பிய படி நாடிச் செல்ல வாய்ப்புக்கள் உருவாக்க வேண்டும்.
சரியான கல்வித் திட்டங்களைச் செயல் படுத்தி மேற்பார்வை இட்டு வந்தால், சமுதாயத்தின் பல கூறுகளிலும் அதன் பயன் சென்று அடையும் என UNESCO நிறுவனம் ( UNESCO International Institute for Educational Planning) கூறியுள்ளது.
* தேசீய தலைமை, உடைமை முறை ஆகியன சிறப்பாக அமைதல் வேண்டும்.
* செய்யும் ஒவ்வொன்றும் அப்போதுள்ள சூழ்நிலைக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
==கல்விக் கோட்பாடுகள்==
[[படிமம்:FinnGerberBoydZaharias2005.png|right|thumb|வகுப்பு மாணவர் எண்ணிக்கை ஆய்வு: தொடக்கப் பள்ளிகளில் வகுப்பில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்த போது, அதில் படித்த மாணவர்கள் மீண்டும் வந்து உயர்நிலைக் கல்வி பெற்றனர். இந்த மாணவர்கள் குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் ஆவார்.
கல்விக் கோட்பாடுகள் (Educational theory) என்பது பல கருத்துக்களைக் கொண்டது. அதில் ஒரு சில கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
===அறிவு நுட்பமும் கல்வியும்===
ஒரு மாணவர் அறிவு நுட்பத்திற்கு (intelligence) ஏற்றார்ப் போல, கல்வி முறையில் அவர் கற்கும் அளவு வேறுபடுகின்றது. அறிவு நுட்பம் மிக்கவர்கள் கல்வியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் மேல் படிப்பு படிக்கச் செல்கின்றனர்.
=== கல்வி கற்கும் வழிமுறைகள் ===
* செயல்வழிக் கல்வி (kinesthetic learning)
இத்துடன், இசைவழிக் (musical) கல்வி, மாந்தர்வழிக் (interpersonal) கல்வி, சொல்வழிக் (verbal) கல்வி, ஏரணவழிக் (logical) கல்வி மற்றும் தனக்குள் நிகழும் (intrapersonal) கல்வி ஆகியனவும் பயன்பாட்டில் உள்ளன. ரீட்டா டன் (Rita Dunn), கென்னத் டன் (Kenneth Dunn) என்ற இரு ஆய்வாளர்கள், ஒரு மாணவன் கல்வி கற்பதற்குத் தூண்டுகோலாக உள்ளவை யாவை என்ற கேள்விக்கு கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிட்டுள்ளனர்:
* சுற்றுப்புறச் சூழ்நிலை
* உளவியல் சார்ந்த சிக்கல்கள்
அதே கால கட்டத்தில், ஜோசப் ரென்சுல்லி (Joseph Renzulli) என்பாரும் ஒரு புதிய வகையான கல்வி கற்கும் முறையை முன்மொழிந்தார்.
ஓவார்டு கார்ட்னர் (Howard Gardner) என்பவர் பன்முக அறிவு நுட்பக் கோட்பாடு (Multiple Intelligences theory) என்னும் கருத்தை முன்மொழிந்து, அறிவு நுட்பம் என்பது பல கூறுகளைக் கொண்டது என வாதிட்டார். இவர் கூற்றுப்படி, அறிவு நுட்ப நிலை என்பது எட்டு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஒவ்வொரு கல்வி கற்கும் வழிமுறையிலும் ஒருவருக்குக் கற்கும் வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு சிலர் கூற, மற்றும் சிலர் கற்பவர், தம் நிலையைப் பொறுத்து, தமக்கென ஒத்து வரும் வழிமுறையில்தான் சரியாகக் கற்க முடியும் என்று கூறுகின்றனர்.
===மனம், மூளை, கல்வி===
மேலும், '''கல்விசார் நரம்பு அறிவியலில்''', ஒருவர் படிக்கும் போதும்,<ref name = Goswami2006 />, கணிதத்தைப் பற்றிய சிந்தனைகள் தோன்றும் போதும்,<ref name = AnsariNRN08>{{cite journal | last1 = Ansari | first1 = D | authorlink1 = | year = 2008 | title = Effects of development and enculturation on number representation in the brain | journal = Nature Reviews Neuroscience| volume = 9 | issue = 4 | pages = 278–91 | doi = 10.1038/nrn2334 | pmid = 18334999}}</ref> ஒன்றைக் கூர்ந்து கவனிக்கும் போதும் மூளையில் என்னென்ன நடக்கின்றன என்று ஆய்வு நடத்தப் படுகின்றது. இத்துடன், வாசிப்புக் குறைபாடு (Dyslexia),<ref name=McCandlissNoble>{{cite journal | last1 = McCandliss | first1 = BD | authorlink1 = | last2 = Noble | first2 = KG | year = 2003 | title = The development of reading impairment: a cognitive neuroscience model | journal = Mental Retardation and Developmental Disability Research Review | volume = 9 | issue = 3 | pages = 196–204 | doi = 10.1002/mrdd.10080 | pmid = 12953299 | url = https://sacklerinstitute.org/cornell/people/bruce.mccandliss/publications/publications/McCandliss.Noble.2003.pdf | access-date = 24 October 2017 | archive-url = https://web.archive.org/web/20080827201638/http://www.sacklerinstitute.org/cornell/people/bruce.mccandliss/publications/publications/McCandliss.Noble.2003.pdf | archive-date = 27 August 2008 | dead-url = yes | df = dmy-all | citeseerx = 10.1.1.587.4158 }}</ref><ref name = GabrieliScience09>{{cite journal | last1 = Gabrieli | first1 = JD | year = 2009 | authorlink1 = | title = Dyslexia: a new synergy between education and cognitive neuroscience | journal = Science | volume = 325 | issue = 5938 | pages = 280–83 | doi = 10.1126/science.1171999 | pmid = 19608907| bibcode = 2009Sci...325..280G | url = http://www2.cs.uidaho.edu/~tsoule/neuro508/Gabrieli_2009_Dyslexia.pdf | citeseerx = 10.1.1.472.3997 }}</ref> கணிதம்-கற்றல் குறைபாடு
(dyscalculia),
===கல்வியின் நோக்கம்===
கற்றுக் கொடுக்கப் படுகின்ற கல்வி எதற்காக, கல்வியின் நோக்கம் என்ன என்பன பற்றிய கருத்துக்கள் பலவாக இருக்கின்றன. அறிவாற்றல், மன விடுதலை, பண்பாட்டு அடையாளம், வேலை வாய்ப்பு, வாழ்க்கையைச் சரியாக அமைத்துக் கொள்வது போன்றவை கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என ஒரு சாரார் கருதுகின்றனர். மற்றும் சிலர், கல்வியின் நோக்கம் ஒருவரை சமுதாயத்தில் நல்ல குடிமகனாக ஆக்க வேண்டும்; அவர் சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், பண்பாட்டு மேம்பாட்டுக்கும் பாடு பட உதவ வேண்டும் என்றும் கருதுகின்றனர்.
==கல்வியும் பொருளாதாரமும்==
[[படிமம்:Students, Hakha, Chin State, Myanmar.jpg|thumb|right|பள்ளி செல்லும் சிறார்கள், ஆக்கா, சின் மாநிலம், மியன்மார்]]
கல்வியினால் ஒரு நாட்டின் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படுகின்றது. அது போலவே, பொருளாதார நிலையும் கல்வியின் தரத்தைக் கட்டுப் படுத்துகின்றது. அனைவருக்கும் தரமான கல்வி கொடுத்தால், அது நல்ல பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் என்று கூறப் படுகின்றது.
மின்சர் (Jacob Mincer) என்ற ஆய்வாளர், ஒருவரின் சம்பாதிக்கும் திறமை அவர் பெற்ற கல்வி, அவருக்குள்ள அறிவாற்றல், செயல் திறன் ஆகியனவற்றைப் பொறுத்து அமைகிறது என்று வாதிட்டுள்ளார்.
அமெரிக்கக் கல்விமுறையில் அடிப்படையிலேயே ஒரு முரண்பாடு உள்ளது என பவுலசு (Samuel Bowles), சிண்டிசு (Herbert Gintis) ஆகிய பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அதாவது, அனைவருக்கும் சமமான கல்வி என்று ஒரு புறம் கூறிவிட்டு, மற்றொரு புறம் சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்கும் முதலாளித்துவம் நடைமுறை படுத்தப் படுகின்றது என அவர்கள் கூறுகின்றனர்.
==கல்வியின் எதிர் காலம்==
உலகம் மிக வேகமாக மாறிக் கொண்டு வருகின்றது. அதனால், நம் பழைய அறிவு புதிய காலத்திற்குப் பயனற்றதாகப் போய் விடுகின்றது. பல நாடுகள் பழைய கல்வி முறைகளை மாற்றி, புதுக் கல்விக் கொள்கைகளை வகுத்துக் கொள்கின்றன. பின்லாந்து போன்ற நாடுகளில் வழக்கமான பாடத் திட்டங்களை விட்டு விலகி, நடைமுறையில் காணும் நிகழ்வுகளை வைத்து குழந்தைகளுக்கு அறிவு புகட்டப் படுகின்றது. எடுத்துக் காட்டாக, தட்பவெப்ப நிலை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி சிறுவர்கள் கற்கின்றனர்.
மேலும், கல்வி என்பது இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அது பெரியவர்களுக்கும் கூடத்தான் என்ற கருத்து வலுப் பெற்று வருகின்றது.
= குறிப்புகளும் மேற்கோள்களும் =
|
தொகுப்புகள்