கருத்தரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 107:
*[[நெஞ்செரிவு]] - [[தொண்டை]]யில் அல்லது [[மார்பு]]ப் பகுதியில் அல்லது இரு பகுதியிலும் எரிவதுபோன்ற ஒரு உணர்வு, அல்லது ஒருவித அசௌகரியம் உணரப்படும். இதனுடன் சேர்ந்து [[அமிலம்|அமிலச்]] சுரப்பும் வாயினுள் வருவதனால் ஒருவகை கசப்பு அல்லது புளிப்புத் தன்மையை உணர்வார்கள். இதனால் வேறு கெடுதலான விளைவுகள் இல்லை என்பதனால் மருந்துகள் பொதுவாகப் பயன்படுத்துவதில்லை. இருக்கும்பொழுதும், படுக்கும்பொழுதும் சரியான நிலையைப் பேணுதல், குறைந்தளவு உணவை சிறிய இடைவெளிகளில் உண்ணுதல், கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகள், கோப்பி போன்றவற்றைத் தவிர்த்தல் போன்றன இதச் சங்கடத்திலிருந்து விடுபட உதவும். இவற்றினால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தொந்தரவு இருக்குமானால் மட்டும் Antacid வகை மருந்து மருத்துவரால் வழங்கப்படும்<ref name="nice"/>.
:இது 22% மான பெண்களில் முதலாவது பருவத்திலும், 39% மான பெண்களில் இரண்டாவது பருவத்திலும், 72% மானோரில் மூன்றாவது பருவத்திலும் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகின்றது<ref>{{cite journal | url=http://www.ncbi.nlm.nih.gov/pubmed/1420011 | title=Determinants of pregnancy heartburn | author=Marrero JM1, Goggin PM, de Caestecker JS, Pearce JM, Maxwell JD. | journal=British Journal of Obstetrics and Gynaecology | year=1992 | month=Sep. | volume=99 | issue=9 | pages=731–4}}</ref>.
*[[மலச்சிக்கல்]] - கர்ப்ப காலத்தில் வரும் மலச்சிக்கலானது உணவில் [[நார்ப்பொருள் (உணவு)|நார்ப்பொருள் ]]குறைபாட்டால் மட்டுமன்றி, Progesterone இயக்குநீரின் அளவு அதிகரிப்பதனாலும் ஏற்படும். அவ்வேளையில் அதிகரித்த [[நார்ப்பொருள் (உணவு)|நார்ப்பொருள் ]]கொண்ட உணவுகளை உண்பதன்மூலம் இதனைக் கட்டுப்படுத்தலாம்.<ref name="nice"/> ஆய்வொன்றில் 39% மான கர்ப்பிணிகளில் கருப்பகாலத்தின் 14 கிழமைகளிலும், 30% மானோரில் 28 கிழமைகளிலும், 20% மானோரில் 36 கிழமைகளிலும் மலச்சிக்கல் தோன்றுவதாக அறியப்பட்டுள்ளது.<ref>{{cite journal | url=http://www.ncbi.nlm.nih.gov/pubmed/8047482 | title=Symptoms and health problems in pregnancy: their association with social factors, smoking, alcohol, caffeine and attitude to pregnancy. | author=Meyer LC, Peacock JL, Bland JM, Anderson HR. | journal=Paediatr Perinat Epidemiol. | year=1994 | month=Apr | volume=8 | issue=2 | pages=145-55}}</ref>
*[[மூலம் (நோய்)|மூலநோய்]] - 8% மான கர்ப்பிணிப் பெண்களில் கருப்பகாலத்தின் இறுதி மூன்று மாதங்களில் மூலநோய்ப் பிரச்சனை இருப்பதாக ஆய்வொன்று கூறுகின்றது.<ref>{{cite journal | url=http://www.ncbi.nlm.nih.gov/pubmed/12004215 | title=Anal fissure and thrombosed external hemorrhoids before and after delivery. | author=Abramowitz L, Sobhani I, Benifla JL, Vuagnat A, Darai E, Mignon M, et al . | journal=Diseases of the Colon and Rectum | year=2002 | month=45 | issue=650–5.}}</ref> இதனால் வேறு கெடுதலான விளைவுகள் இல்லையென்பதனால் உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றுதலே பரிந்துரைக்கப்படுகின்றது. தொந்தரவு தொடர்ந்தும் அதிகமாக இருப்பின், வழமையாக மூலநோய்க்கு வழங்கப்படும் களிம்புகள் வழங்கப்படலாம்.<ref name="nice"/>
*காலில் புடைசிரைகள் ([[:en:Varicose veins]]) - காலிலுள்ள [[சிரை]]கள் வீங்கி, நீலநிறமாகிக் காணப்படல். இது பொதுவாக கருப்பகாலத்தில் அவதானிக்கப்படுவது என்பதனால், இந்த அறிகுறியை மட்டுப்படுத்த சில வகை பாதவுறைகள் பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகின்றது<ref name="nice"/>
"https://ta.wikipedia.org/wiki/கருத்தரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது