"பாரதிய ஜனதா கட்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
[[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்துடன்]] நட்புறவு பாராட்டிய காங்கிரஸ் அரசை பா.ஜ.க அடிக்கடி விமர்சித்து வந்துள்ளது. பா.ஜ.க வின் ஆட்சிக்காலத்தில் [[அமெரிக்கா]]வுடனான உறவை இந்தியா பலப்படுத்திக்கொண்டது.<ref name="Chaulia: Alternative to Nehru">{{cite journal|last=Chaulia|first=Sreeram|title=BJP, India’s Foreign Policy and the "Realist Alternative" to the Nehruvian Tradition|journal=International Politics|date=June 2002|volume=39|pages=215–234|accessdate=8 February 2014|doi=10.1057/palgrave.ip.8897388}}</ref> இந்திய-அமெரிக்க உறவுகள், 2000 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான [[பில் கிளின்டன்|பில் கிளின்டனின்]] இந்திய வருகையின்போது மேலும் முன்னேற்றமடைந்தன. அமெரிக்காவில் செப்டம்பர் 11, 2001 இல் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும் [[அல் காயிதா]] மற்றும் [[தலிபான்]] போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கெதிரான நடவடிக்கைகளிலும் அமெரிக்காவிற்கு இந்தியா தனது ஒத்துழைப்பை நல்கியது. இதற்குப் பிரதியாக அமெரிக்கா, இந்தியாவிற்கு முதலீடு, வர்த்தகம் மற்றும் ராணுவம் போன்ற துறைகளில் உதவியது.
 
இந்தியாவின் எதிரிகளாகக் கருதப்படும் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான உறவுகளையும், வாஜ்பாய் பிரதமராக இருந்த போது இந்தியா மேம்படுத்திக் கொண்டது.<ref name="Chaulia: Alternative to Nehru" /><ref name="Harris 2005">{{cite journal|last=Harris|first=Jerry|title=Emerging Third World powers: China, India and Brazil|journal=Race & Class|year=2005|volume=46|issue=7|doi=10.1177/0306396805050014|accessdate=8 February 2014}}</ref><ref name="Chaulia: Alternative to Nehru" /> வாஜ்பாய், 1998 இல் பாகிஸ்தான் சென்று தில்லி-லாகூர் பேருந்துப் போக்குவரத்து சேவையைத் துவக்கி வைத்தார். 1998 அணு வெடிப்புச் சோதனைக்குப் பிறகு நலிவடைந்திருந்த இந்திய-பாகிஸ்தான் உறவுகளைப் புதிப்பித்துக்கொள்ள, இரு நாடுகளும் லாகூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. ஆனாலும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது.<ref name="Chaulia: Alternative to Nehru" />
 
சில வருடங்கள் நீடித்த பதட்டத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் அதிபராக விளங்கிய [[பர்வேஸ் முஷாரஃப்|பர்வேஸ் முஷரஃபை]] அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தைகள் துவங்கப்பட்ட போதிலும் அவை எந்த ஒரு முடிவையும் எட்டவில்லை. மீண்டும் 2003 ஆம் ஆண்டு வாஜ்பாய் போர் நிறுத்தத்தை அறிவித்து அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் துவக்கினார்.
== மாநிலங்களில் பா.ஜ.க ==
 
[[படிமம்:State- and union territory-level parties.svg|right|thumb|]]
 
பா.ஜ.க, டிசம்பர் 2018 நிலவரப்படி 13 மாநிலங்களில் ([[குஜராத்]], [[மகாராட்டிரம்]], [[ஹரியானா]], இமாச்சலப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், உத்தராகண்ட், அசாம், [[கோவா (மாநிலம்)|கோவா]], [[ஜார்கண்ட்]], அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா) பெரும்பான்மை பெற்று ஆட்சியில் உள்ளது. பீகார், சிக்கிம் மற்றும் [[நாகாலாந்து]] ஆகிய மாநிலங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க வின் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியில் உள்ளன. இதற்கு முன்பு பா.ஜ.க, [[உத்திரப் பிரதேசம்]], [[ராஜஸ்தான்]], மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் [[கர்நாடகா]] ஆகிய மாநிலங்களை ஆட்சி செய்துள்ளது.
மூத்த பா.ஜ.க தலைவரான கோபிநாத் முண்டே, 2009 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் பிரசாரத்திற்காக {{Indian Rupee}} 8 கோடி செலவிடப்பட்டதாகக் கூறினார். இது, [[இந்திய தேர்தல் ஆணையம்|இந்திய தேர்தல் ஆணையத்தால்]] அனுமதிக்கப்பட்ட அளவான {{Indian Rupee}} 40 லட்சத்தைவிட பல மடங்கு அதிகமாகும். தனது இந்த அறிக்கைக்காக தன் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு வெளிப்படையாக சவால் விட்டார். பின்னர், தனது அறிக்கை தேர்தல் பிரச்சாரங்கள் மிகவும் செலவு பிடிக்கும் ஒன்று என்பதை சுட்டிக்காட்டவே தான் அவ்வாறு கூறியதாகக் கூறினார்.
== நிலம் கையகப்படுத்தும் சட்டம் ==
பா.ஜ.க ஆட்சியில் முறைப்படுத்தி புதிதாக ஏற்படுத்தப்பட்ட [[நில உச்சவரம்புச் சட்டம்|இச்சட்டத்தை]] எதிர்த்து 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ஆம் தெகிதி [[புது தில்லி]]யில் நடந்த [[ஆம் ஆத்மி கட்சி]] நடத்திய ஊர்வலத்தில் [[உழவர்|விவசாயி]] மரத்தில் தூக்கிலிட்டு இறந்தார்.<ref>[http://www.bbc.co.uk/tamil/india/2015/04/150422_farmersuicide|ஆம் ஆத்மி கட்சி ஆர்ப்பாட்ட கூட்டத்தில் விவசாயி தற்கொலை] பிபிசி 22 ஏப்ரல் 2015</ref><ref>[http://www.inneram.com/india/19156-bjp-protest-failure.html| தோல்வியில் முடிந்த பாஜக அழைப்பு விடுத்த கடையடைப்பு போராட்டம்!] இந்நேரம்.காம் (15 டிசம்பர் 2018)</ref>
 
== மேற்கோள்கள் ==
 
== வெளியிணைப்புகள் ==
*[http://bjp.org/ | பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளம்]
*[http://www.bjptn.org/ta.html | தமிழக பா.ஜ.க வின் இணையதளம்]
*[http://www.bjym.org/ | பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணியின் இணையதளம்]
*[http://mahilamorchabjp.org/ | பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணி இணையதளம்]
*[https://www.facebook.com/BJP4India | பாரதிய ஜனதா கட்சியின் முகநூல் பக்கம்]
*[https://www.youtube.com/user/BJP4India | பாரதிய ஜனதா கட்சியின் யூட்யூப் பக்கம்]
 
{{இந்திய அரசியல் கட்சிகள்}}
[[பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:1980இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்‏]]
[[Categoryபகுப்பு:இந்துத்துவம்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2702200" இருந்து மீள்விக்கப்பட்டது