மனித நேயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''மனித நேயம்''' (மனித நேயம் = மனிதம் + நேயம்) தொடர்புடைய பலம் வாய்ந்த குணங்களாக அன்பு, கருணை, இரக்கம் மற்றும் சமூக நுண்ணறிவு இருக்கின்றன. சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதை மனித நேயம் எனக் கூறலாம். இதில் உயிரிரக்கப் பண்பு என்பது மனித நேயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல், இயலாதவர்களின் துன்பத்தைப் போக்குதல், இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் என்றும் கூறலாம். 1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும், ‘‘சகோதர... சகோதரிகளே...’’ என்று விவேகானந்தர் உரையாற்றி உலக மக்களிடையே மனித நேயத்தை எடுத்துரைத்தார்.<ref>http://nakkheeran.in/Users/frmArticles.aspx?A=15256</ref>
 
 
==தமிழ் மொழியில் மனித நேயம்==
"அன்பின் வழியது உயர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு" - [[திருவள்ளுவர்]]
 
[[கணியன் பூங்குன்றனார்]] "யாதும் ஊரே யாவரும் கேளீர்" என்று கூறுகிறார்.
வரி 12 ⟶ 11:
==வரலாற்று பின்னணி==
===கன்ஃபூசியஸ் கோட்பாடு===
[[கன்ஃபூசியஸ்]] மனித நேயத்தை (ரென்) "பிற அல்ல சக மனிதனிடத்தில் அன்பு செலுத்துவது" என்றார். மேலும் "நீ நிற்க வேண்டுமென்றால் பிறரை நிற்க வை" என்றார். <ref>Peterson & Seligman 2004, p. 40.</ref> மனித நேயம் (ரென்) என்பது அன்பு மற்றும் தன்னலமற்று இருப்பதன் முக்கியத்துவத்தை கூறுகின்றது. <ref>Chan 1955, p. 312.</ref>
 
===கிரேக்க கோட்பாடு===
வரி 22 ⟶ 21:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கலந்துகொண்ட ஒரு போரில் ஒரு பெண்மனி கொல்லப்பட்டுக் கிடந்தாள். எனவே நபி (ஸல்) அவர்கள் (போரில்) பெண்களையும் சிறுவர்களையும் கொல்வதை விட்டும் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ர­லி) நூல்: புகாரி (3015) <ref name ="குரான2">http://www.tamililquran.com/bukharidisp.php?start=3015</ref>
 
இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், 'ஓர் எறும்பு உங்களைக் கடித்துவிட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே" என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தார் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். <ref name ="குரான2"/>
 
==மனித நேயத்தின் பலம்==
"https://ta.wikipedia.org/wiki/மனித_நேயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது