ஏறுதழுவல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Parvathisriஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 26:
'''ஏறு தழுவல்''', '''மஞ்சு விரட்டு''' அல்லது '''சல்லிக்கட்டு''' (ஜல்லிக்கட்டு) என்பது [[தமிழர்]]களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். [[மாடு|மாட்டை]] ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.
 
தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, [[மதுரை மாவட்டம்]][[அவனியாபுரம் ]][[அலங்காநல்லூர்]] மற்றும் [[பாலமேடு]] எனும் ஊர்களிலும்,[[திருச்சி ]] [[பெரிய சூரியூர்]],[[நாமக்கல் மாவட்டம்]] [[அலங்காநத்தம்]], சேலம் மாவட்டம் [[தம்மம்பட்டி ]],கூலமேடு [[புதுக்கோட்டை மாவட்டம்]] [[நார்த்தாமலை]], [[திருவண்ணாமலை மாவட்டம்]] [[ஆதமங்கலம் புதூர்]] மற்றும் [[தேனீ மலை|தேனீமலை]], [[தேனி மாவட்டம்]] போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் [[தை]] மாதத்தில் [[பொங்கல் (திருநாள்)|பொங்கல்]] திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.
 
== பெயர்க்காரணம் ==
வரிசை 111:
 
=== 2014 ===
மே 7 , 2014 இல் சல்லிக்கட்டு நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காளைகள் துன்புறுத்தப்படுவதால் சல்லிக்கட்டு நடத்தக் கூடாது என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது. சல்லிக்கட்டுக்கு முழுமையாகத் தடை விதிக்கக் கோரி விலங்குகள் நல அமைப்பு சார்பில் தொடரப்பட்ட பொது நல வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே. எஸ். ராதாகிருஷ்ணன், பினாகி சந்திர கோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ஒன்றிய அரசு, சல்லிக்கட்டுப் பேரவை மற்றும் விலங்குகள் நல வாரியம் ஆகியோர் சார்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன. சல்லிக்கட்டுப் போட்டிகளைக் கண்காணிக்கவும் காளைகள் துன்புறுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும் விலங்குகள் நல வாரியத்தின் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமிக்கலாம் என ஒன்றிய அரசு சார்பில் விவாதம் நடந்தது. ஆனால், போட்டிகளின் போது கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படாததால், காளைகள் துன்புறுத்தப்படுவதாகச் சல்லிக்கட்டிற்குத் தடைவிதிக்க வேண்டும் என விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் காளைகள் துன்புறுத்தப்படுவதாலும், அதனைத் தடுக்கத் தகுந்த நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளவில்லை என்பதாலும் சல்லிக்கட்டு நடத்தத் தடை விதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டது.<ref>[http://www.bbc.co.uk/tamil/india/2014/05/140507_jallikattu.shtml ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை]</ref><ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=63417 | title=ஜல்லிக்கட்டுக்கு தடை | publisher=[[தீக்கதிர்]] | access-date=8 மே 2014}}</ref> இதனை எதிர்த்து [[மதுரை]] மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மக்கள் கருப்புக் கொடி ஏந்தி போராடினர். இதனையடுத்து தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது . தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் யோகேசு கண்ணா மனு தாக்கல் செய்தார்.<ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=64767 | title=சல்லிக்கட்டுக்கு தடை கூடாது தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் : | publisher=[[தீக்கதிர்]] | date=20 மே 2014 | access-date=20 மே 2014}}</ref>
 
=== 2016 ===
வரிசை 119:
{{முதன்மைக் கட்டுரை|2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள்}}
 
சில விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளின் விளைவாக தமிழகத்தில் சல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது அதனை எதிர்த்து, [[ஏறுதழுவல்|சல்லிக்கட்டிற்கு]] ஆதரவாக [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலும்]], தமிழ்நாட்டுக்கு வெளியேயும் 2017 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் போராட்டங்கள் நடந்தன. தமிழகம் முழுவதும் ஆங்காங்கு மக்கள் கூடி தங்களது ஆதரவினைத் தெரிவித்தனர். இந்தப் போராட்டங்கள் '''தைப் புரட்சி''', '''மெரீனாப் புரட்சி''', '''இளைஞர்கள் புரட்சி''' சிறப்புப் பெயர்களால் ஊடகங்களாலும், சில அரசியல் கட்சித் தலைவர்களாலும் குறிப்பிடப்பட்டன. இது ஒரு எழுச்சிப் போராட்டமாக இருந்தமையால், '''தை எழுச்சி''', '''இளைஞர்கள் புரட்சி''' எனவும் அறியப்படுகிறது.
 
== ஏறுதழுவல் விளையாட்டில் ஏற்படுகின்ற காயங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏறுதழுவல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது