சமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
வரிசை 20:
# கோவலனுடைய மாமனும், கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும், செல்வத்தில் மேம்பட்ட வணிகன், கோவலனும்,கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு உலகத்தை வெறுத்துத் தனது பெருஞ் செல்வமெல்லாவற்றையும் தானம் செய்துவிட்டு, [[ஆசீவகம்|ஆசீவகத்தையும்]] பின்பற்றி துறவுபூண்டதாகத் தெரியவருகிறது.
 
இதன்மூலம், சமணத்தின் உட்பிரிவுகளான [[ஆசீவகம்]] மற்றும் [[சார்வகம்|சாவகம்]] ஆகிய நெறிகள், பண்டைய தமிழகத்தில் இருந்ததாக அறியப்படுகிறது. சமணத்தில் உள்ள [[ஜைனம்|ஜைன நெறி]] மட்டுமே காப்பியங்கள் மூலம் தன்னை மக்களிடம் ஓரளவிற்கு நிலைநிறுத்திக் கொண்டதனால், சமணத்தில் உள்ள ஜைன நெறியைத் தவிற மற்ற நெறிகள், தங்கள் செல்வாக்கை மக்களிடம் நாளடைவில் இழந்துவிட்டன. இதனாலும், பிற்காலத்தில் [[ஆசீவகம்]] [[ஜைனம்|ஜைனத்தின்]] உட்பிரிவு எனும் தவறான ஒரு கண்ணோட்டம் உருவானதாலும் தற்காலத்தில் [[சமணம்]] எனும் சொல்லிற்கு [[ஜைனம்]] என்ற தவறான பொருள் உருவாகிவிட்டது.
 
இந்தக் குழப்பத்தினால், இன்றுவரை, தமிழ் இலக்கியங்களின் ஆய்வுகள் மற்றும் தொல்லியல் ஆய்வுகளில், [[சமணர்]] மற்றும் [[ஜைனர்]] ஆகிய சொற்கள், ஒரேப் பொருள் கொண்ட சொற்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது