"சோதிடம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (பராமரிப்பு using AWB)
{{Ast box}}
'''சோதிடம்''' என்பது [[கோள்|கோள்களின்]] நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஆகும். உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் இதனை நம்புகின்றார்கள். சோதிடத்துக்கு எந்தவிதமான [[அறிவியல்]] அடிப்படையும் இல்லை.
 
கோள்களும், வான் வெளியில் அவற்றின் நகர்வுகளும் உலகில் வாழும் எல்லா [[உயிரினங்கள்]] மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே சோதிட நூலின் அடிப்படையாகும்.
====இந்திய சோதிடம்====
 
ஜோசியம் என்ற சொல்லானது சமஸ்கிருத சொல்லான ஜீயோடிஸ் ( jyótis ) என்பதிலிருந்து பிறந்ததாகும். இந்திய சோதிடம் பொதுவாக இந்து சோதிடம் என்றும், வேத சோதிடம் என்றும் அறியப்பெறுகிறது. குழந்தை பிறக்கும் நேரத்தினை கொண்டு அந்நேரத்தில் நவகிரகங்களின் நிலையை கணக்கிட்டு எழுதுவது ஜாதகம் எனப்படுகிறது. நவகிரகங்களின் நிலையைக் கொண்டு குழந்தையின் ராசியும், நட்சத்திரமும், இலக்கணமும் குறிக்கப்பெறுகின்றன.
 
ஜோசியம் என்ற சொல்லானது சமஸ்கிருத சொல்லான ஜீயோடிஸ் ( jyótis ) என்பதிலிருந்து பிறந்ததாகும். இந்திய சோதிடம் பொதுவாக இந்து சோதிடம் என்றும், வேத சோதிடம் என்றும் அறியப்பெறுகிறது. குழந்தை பிறக்கும் நேரத்தினை கொண்டு அந்நேரத்தில் நவகிரகங்களின் நிலையை கணக்கிட்டு எழுதுவது ஜாதகம் எனப்படுகிறது. நவகிரகங்களின் நிலையைக் கொண்டு குழந்தையின் ராசியும், நட்சத்திரமும், இலக்கணமும் குறிக்கப்பெறுகின்றன.
 
இந்துக் காலக் கணிப்புமுறையால் உருவான பஞ்சாங்கம் என்ற கால அட்டவணைக் கொண்டு ஜாதகத்தின் பலன்கள் கணிக்கப்பெறுகின்றன. பஞ்சாங்கம் வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என ஐந்து உறுப்புகளைக் கொண்டதாகும்.
எந்த ஒரு அறிவியலும் அது எந்தளவு விளக்கி வரவுரைக்குமென்பதைப் பொறுத்துதான் அதன் தரம் கணிக்கப்பட வேண்டும். ஒரு விடயம் பரிசோதனைக்கு உட்பட்டு நிறுவப்பட வேண்டும். சோதிடம் அறிவியல் அணுகுமுறைப்படி நிறுவப்பட முடியாது. காரணம் அதற்கு அறிவியல் அடிப்படை கிடையாது. எனவே சோதிடத்தை நம்புவது ஒரு வகை [[மூடநம்பிக்கை|மூடநம்பிக்கைதான்]] என்பது ஒரு சாராரது கருத்து.
 
சூரியக் குடும்பத்திலுள்ள கோள்களைக் குறிப்படும் சோதிடத்தில் யுரேனஸ், நெப்டியூன் பற்றி குறிப்பிடாதது. பூமியின் துணைக்கோளான சந்திரனைக் கோளாகக் குறிப்பிடுதல் போன்றவை வானியலுக்கு எதிரானதாகவும், ராகு, கேது போன்றவை கோள்களாகச் சோதிடத்தில் குறிப்பிடப்பட்டாலும், இவை சூரியக் குடும்பத்தில் இல்லாத கற்பனைக் கோள்களாகும். <ref>[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=8449&Itemid=139 சோதிடம் என்பதும் அறிவியலா? பேரா.சோ.மோகனா ]</ref>
 
== உசாத்துணைகள் ==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2702359" இருந்து மீள்விக்கப்பட்டது