வைணவ சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 4:
இந்த சமயத்தின் முக்கிய நூல்கள் வேதம், உபனிஷத்து, பகவத் கீதை, பஞ்சரந்தர ஆகமம், மகாபாரதம்,இராமாயணம், பாகவத, விஷ்ணு, கருட , நாரதிய, பத்ம , வராஹ புராணங்கள் ஆகும்.
 
குப்தர் போன்ற அரசர்களின் காலத்தில் செல்வாக்கு பெற்று தெற்காசியா முழுவதும் வைணவம் பரவியிருந்தது.<ref>[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17598:2011-11-30-03-20-32&catid=1399:2011&Itemid=648 வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்]</ref>
 
== வைணவ தத்துவம் ==
வரிசை 29:
== வைணவத்தில் கடவுள் ==
 
இறைவனுக் கெல்லாம் இறைவன் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் நாராயணன் என்ற மந்திர நாமமுடைய [[விஷ்ணு| மகாவிஷ்ணு]], [[இராமர்]], [[கிருஷ்ணர்]] உள்பட அவருடைய பல அவதாரங்களும்.. யாவற்றையும் மீறிய பரம்பொருளாயிருந்தாலும் அவரே தன்னை சிலைகளில் கட்டுப்படுத்திக் கொண்டு அர்ச்சாவதாரமாக கோயில்களில் காட்சியளிக்கிறார். இவைகளை வணங்குவதே அவரை அடைய எளிதான வழி. மாந்தரனைவருக்கும் தாயும் தந்தையுமாக இருக்கும் அவரை சுலபமாக அடையலாம் என்பதை கிருஷ்ணராக அவதரித்தபோது தன்னுடைய லீலைகளால் காண்பித்தார். [[நாலாயிர திவ்யப் பிரபந்தம்|நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில்]] இச்சுவையை நிறைய ருசிக்கலாம். ஆண்டவனின் இச்சுலபத்தன்மை தான் வைணவத்தின் சிகரமான மதச்சாதனை.
 
== வைணவ ஆச்சாரியர்கள் ==
வரிசை 41:
நாதமுனிகளுக்குப்பிறகு ஆச்சாரிய பதவியில் வந்தவர்களில் சரித்திரப் பிரசித்தி பெற்றவர்கள் மூவர். [[இராமானுஜர்]], [[பிள்ளை லோகாச்சாரியர்]], [[வேதாந்த தேசிகர்]].
[[இராமானுசர்| இராமானுசரும்]], வேதாந்த தேசிகரும், மணவாளமாமுனிகளும் தமிழை இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று வழிகளிலும் ஆந்திரம், கர்நாடகம், ஒரிசா வரை ஆன்மீகத்தை பரப்பியுள்ளனர். அரங்கத்துறையும் இறைவனின் அருளும், அனுமதியும் பெற்று ஆகம வழிபாட்டிலும், கோயில் திருவிழாக்களிலும் ஆழ்வார்களின் தமிழ் தேனை நடைமுறைக்கு கொண்டுவந்தனர். [[நாதமுனிகள்]] காலத்திற்கு முன் ஆழ்வார்களின் அருமையான செந்திறத்த தமிழோசை குடந்தை, தஞ்சை ஆகிய சில பெரிய ஆலயங்களில் மிகக்குறைவாக ஒரு சில பதிகங்களை மட்டுமே ஓதி வந்தனர். பின்பு நாதமுனிகளால் அருந்தவயோக முறையில் நாலாயிரம் பாசுரங்களும் கிடைக்கப்பெற்று பாரத தேசத்தின் பெரும்பகுதிகளில் பரப்பட்டது.
 
தமிழ் பாசுரங்ளை [[சமஸ்கிருதம்]], [[தெலுங்கு]], [[கன்னடம்]], [[ஒரியா]] மொழிகளில் எழுதி வைத்து, அந்த தேசத்து வைணவப்பெருமக்களால் இசைக்கப்பட்டு வந்தது. வேதம், ஆகம வழிபாட்டில் சமஸ்கிருதத்தை ஓதும்போது பிழை இல்லாமல் இயம்புவது கடும்பயிற்சி இல்லாமல் இயலாது. ஒலிப்புப் பிழை ஏற்படின் தவறான பொருளாக அமையும். இவ்வாறு ஏற்படும் பிழைப்பொருளைக்கூட பைந்தமிழ் பாசுரங்களை இசைத்து பாடுவதால் அப்பிழையைக்கூட கடவுள் பொறுப்பதாக கூறியதால், தமிழின் மேன்மையை அறிந்த இராமானுசர் அனைத்து வைணவ ஆலயங்கள், இல்லங்களிலும் பூஜை முறைகளில் பசுந்தமிழ் பாசுரங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தார். திருவிழாக்களின் போதும், கோயில்களின் அனைத்து வழிபாடுகளிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து திருத்தி அமைத்தார். இல்லறச் சடங்குகளிலும் ஆழ்வார்களின் பாசுரங்களை வேதத்துக்கு இணையாக வைணவர்கள் ஓதிவரும் வழக்கம் இன்றளவும் உள்ளது.
வரிசை 47:
== ஆழ்வார்கள் ==
 
[[வடமொழி]]யிலும் தென்மொழியிலும் [[வைணவ இலக்கியங்கள்|வைணவ இலக்கியங்களை]] வளர்த்தவர்கள் பரம்பரையில் [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய [[ஆழ்வார்கள்]] 12 பேர்.
 
அவர்களில் பெண் என்பதால் [[ஆண்டாள்|ஆண்டாளையும்]], நம்மாழ்வாரைப் பாடினார் என்பதால் [[மதுரகவியாழ்வார்|மதுரகவியாழ்வாரையும்]] விடுத்து ஆழ்வார்கள் 10 பேர் எனக் காட்டுவாரும் உண்டு.{{cn}}
"https://ta.wikipedia.org/wiki/வைணவ_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது