"அசோகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (பராமரிப்பு using AWB)
'''அசோகர்''' மௌரிய வம்சத்தைச் சேர்ந்த இந்திய அரசர். பிறப்பு கிமு 304. இவருடைய ஆட்சிக்காலம் கிமு 269 முதல் கிமு 232 வரை ஆகும்.<ref>Thapur (1973), p. 51.</ref> கலிங்கத்துப் போரை வென்றபின் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார். [[பௌத்தம்|புத்த மதத்தை]] [[ஆசியா]] முழுவதும் பரவச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான புத்த விகாரங்கள் கட்டினார். [[இந்தியா]]வை ஆண்டவர்களில் சிறந்த பேரரசராகக் கருதப்படுகிறார்.<ref>[http://www.britannica.com/biography/Ashoka Ashoka]</ref>
<ref>[http://www.cs.colostate.edu/~malaiya/ashoka.html THE EDICTS OF KING ASHOKA]</ref><ref>[http://nationalviews.com/ashoka-the-great-emperor-history-facts-maurya-empire Ashoka, the Great Emperor – Know the Real History and Facts]</ref>
<ref>[http://www.ancient.eu/Ashoka/ Ashoka]</ref><ref>[http://www.factsninfo.com/2013/04/interesting-facts-information-samrat-ashoka-great-emperors-of-india.html INTERESTING FACTS AND INFORMATION ABOUT SAMRAT ASHOKA,THE GREAT EMPERORS OF INDIA]</ref> இவர் தந்தை பிந்துசாரரின் ஆட்சியின் போது உஜ்ஜயினியின் ஆளுநராக பணியாற்றினார். அசோகர் மேற்கே தற்போதய ஆப்கானிஸ்தானில் உள்ள [[இந்து குஷ்]] மலைத் தொடரில் இருந்து கிழக்கே தற்போதய வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஆட்சி புரிந்தார். தற்கால இந்தியாவில் உள்ள [[தமிழ்நாடு]], [[கேரளா]], [[கர்நாடகா]] பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து இந்திய ஒன்றியப் பகுதிகளையும் இவர் ஆட்சி செய்துள்ளார். இவரின் மாகாண தலைநகரங்களாக [[தக்சசீலா]] மற்றும் [[உஜ்ஜைன்|உஜ்ஜைனி]] இருந்தன. <ref>[https://www.britannica.com/biography/Ashoka Ashoka]</ref>
 
== சந்திரகுப்த மெளரியர் ==
{{main|சந்திரகுப்த மௌரியர்}}
 
மவுரிய பேரரசின் முதல் மன்னர் [[சந்திரகுப்த மௌரியர்]] ஆவார். மவுரியர்கள் ஆண்ட நாடு மகத நாடு; சந்திரகுப்த மௌரியர் காலத்தில் [[ராஜகிரகம்]] [[மகத நாடு|மகத நாட்டின்]] தலைநகராக இருந்தது. பின்னர், [[பாடலிபுத்திரம்]] என்ற நகர் அமைக்கப்பட்டது. இது தற்போதைய [[பிகார்]] மாநிலத் தலைநகரம் [[பாட்னா]] என அழைக்கப்படுகிறது. மயில்கள் அதிகம் உள்ள இடத்தில் இருந்தவர் என்பதால் ''மயுரா'' எனப்பட்ட இடத்தில் வளர்ந்தவர். அதனால் '''மவுரியர்''' எனப்பட்டார் என்பர். இன்னும் சிலர் [[நந்தர்|நந்த வம்ச]] மன்னருக்கும் ''முரா'' என்ற காட்டுவாசி பெண்ணுக்கும் பிறந்தவர் என்பர். முராவின் மகன் என்பதே மவுரியா ஆகியது என்பர். காட்டில் இருந்த சந்திரகுப்தரை, [[தன நந்தன்| நந்த மன்னரால்]] அவமானப்படுத்தப்பட்ட [[சாணக்கியர்]] சந்தித்து அவரைக் கொண்டு நந்த மன்னரை வென்று சபதம் தீர்த்தார்.
 
சந்திரகுப்தர் மிக சிறப்பாக ஆட்சி செய்து மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவினார். [[தென்னிந்தியா]] வரைக்கும் தன் ஆளுகையின் கீழ் கொணர்ந்தார். இவர் தனது கடைசிக் காலத்தில் [[சமணம்| சமண]] மதத்தை தழுவி [[பெங்களூர்]] அருகே உள்ள [[சரவணபெலகுளா]]வில் [[பத்திரபாகு]] என்ற முனிவர் துணையுடன் துறவு வாழ்க்கை வாழ்ந்து உயிர் துறந்தார். இதனாலேயே அங்குள்ள மலைக்குச் சந்திரகிரி என்ற பெயர் வந்தது.
 
== பிந்துசாரர் ==
 
அசோகர், [[பிந்துசாரர்|பிந்துசாரருக்கும்]] அவரது மனைவி [[சுமத்திராங்கி]] என்பவருக்கும் பிறந்தவர், சிலர் அவர் [[செலுக்கஸ் நிக்கோடர்]] என்ற கிரேக்க மன்னரின் மகள் என்பார்கள். அசோகரின் இளம் வயதில் [[அவந்தி]] நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார் அப்போது தேவி எனப்படும் வணிகக் குலப்பெண்ணை காதலித்து மணம் புரிந்து கொண்டார். இவர்களுக்கு பிறந்தவர்களே
[[மகிந்தன்| மகேந்திரனும்]] ( மகிந்த தேரர்), [[சங்கமித்தை]]யும் ஆவர். பின்னாளில் இவர்களை இலங்கைக்கு புத்த மதத்தினை பரப்ப அனுப்பினர்.
 
===பெயர்கள்===
{{main|கலிங்கப் போர்}}
 
*''[[கலிங்க நாடு]]'' என்பது தற்போதுள்ள [[ஒடிசா]]. கலிங்க மன்னர் இன்னார் தான் எனப் பெயர் குறிப்பிடப்படவில்லை. சந்திர குப்தர் , பிந்துசாரர் போன்றவர்கள் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து வென்றுள்ளார்கள். ஆனால் சில கால இடைவெளிக்குப் பிறகு அவர்கள் தனித்து இயங்க ஆரம்பித்துள்ளார்கள், எனவே கலிங்க நாட்டை அடக்க அசோகர் விரும்பினார். கலிங்க நாட்டின் மீது படை எடுத்து அதனை நிர்மூலமாக்கினார். இதுவே உலகப் புகழ்பெற்ற [[கலிங்கப் போர்]] ஆகும். அப்போரில் 1,50,000 வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர், சுமார் 1,00,000 வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டனர். இக்கொடிய போர்க்களக்காட்சியைக் கண்டு அசோகர் மனம் மாறினார். [[பௌத்தம்| புத்த சமயத்தைத்]] தழுவி, சமாதானம் தழைக்கப் பாடுபட்டார்.
 
* இப்போருக்கு முன்னரே அசோகர் புத்த மதத்திற்கு மாறி விட்டார் என்ற கருத்தும் உண்டு. அசோகரின் காதல் மனைவி தேவி புத்த மதம் சார்ந்தவர், அவரை மணக்கும் போதே புத்த மதத்தினை தழுவி விட்டார். ஆனால் முழுதாக புத்த மதக்கொள்கையின் மீது ஈடுபாடு கொள்ளாமல் இருந்துள்ளார். போரின் கொடிய விளைவைகண்ட பிறகே முழுதும் மனம் மாறி உயிர்க்கொலை துறந்தார், பின்னர் உலகம் முழுவதும் புத்தம் பரவ வழி செய்தார்.
அசோகர் படிப்படியாகப் புத்த மதத்தை தழுவி கி.பி 263 இல் முற்றிலுமாக உப குப்தர் தலைமையில் புத்தமதத்திற்கு மாறினார். போருக்குப் பிறகு அசோகர் ஒரு சாக்கிய உபாசங்கர் (சாதாரணசீடர்) ஆனார். இரண்டறை ஆண்டுகள் கழித்து புத்த பிக்குவாக மாறினார். அதன் பிறகு வேட்டையாடுதலைக் கைவிட்டுவிட்டு [[புத்தகயா]]விற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார். புத்த சமயத்தைப் பரப்புவதற்காக பல்வேறு தேசங்களுக்குத் தூதுக்குழுக்களை அனுப்பினார். புத்த மதத்தைப் பரப்புவதற்காகவே தர்ம மகா மாத்திரர்கள் எனப்படும் அதிகாரிகளை நியமித்தார். இலங்கைக்கு அவரின் மகள் சங்கமித்திரை மற்றும் மகன் மகேந்திரனை புத்தர் ஞானம் பெற்ற அரச மரத்தின் ஒரு கிளையுடன் புத்த மதத்தைப் பரப்ப அனுப்பி வைத்தார்.
 
அசோகர் பாடாலிபுத்திரத்தில் கி.மு.240 இல் மூன்றாவது புத்த சமய மாநாட்டை நடத்தினார். மெக்காலி புத்ததிஸ்ஸா இதற்கு தலைமை வகித்தார். இந்த புத்த மாநாட்டிலேயே [[திரிபிடகம்| திரிபீடகங்கள்]] இறுதி வடிவம் பெற்றன. புத்தரால் போதிக்கப்பட்டு அசோகரால் பரப்பப்பட்டது [[ஹீனயானம்]] ஆகும். அசோகர் கி.மு.241 இல் புத்தர் பிறந்த இடமான [[கபிலவஸ்து]]விற்கும் அதன் அருகில் உள்ள [[லும்பினி]] வனத்திற்கும் பயணம் மேற்கொண்டார். புத்த சமயத்தின் புனித இடங்களாக கருதப்படும் [[சாரநாத்]], [[சிராவஸ்தி]], [[வைசாலி, பண்டைய நகரம்|வைசாலி]], [[ஜேடவனம்]], [[குசிநகர்]] ஆகிய இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டார்.
 
===கிர்னார் மலை கட்டளை===
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2702424" இருந்து மீள்விக்கப்பட்டது