குற்றியலுகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 42:
 
==ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்==
ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் என்பது [[குற்றியலுகரம்|குற்றியலுகர]] வகைகளுள் ஒன்று. எஃகு, கஃசு, அஃது போன்ற சொற்களில் [[வல்லினம் (எழுத்து)|வல்லின]] மெய்களை ஊர்ந்து வந்த உகரம் [[ஆய்த எழுத்து|ஆய்த எழுத்தைத்]] தொடர்ந்து ஈற்றில் குறைந்து ஒலிப்பதால் குற்றியலுகரமாயிற்று. இவ்வாறு ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வருவது ஆய்தத் தொடர்க் குற்றியலுகரமாகும்.
 
==உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்==
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் என்பது [[குற்றியலுகரம்|குற்றியலுகர]] வகைகளுள் ஒன்று. அழகு, அரசு, பண்பாடு, உனது, உருபு, பாலாறு போன்ற சொற்களில் [[வல்லினம் (எழுத்து)|வல்லின]] மெய்களை ஊர்ந்து வந்த உகரம்(கு, சு, டு, து, பு, று) [[உயிரெழுத்து|உயிரெழுத்தைத்]] தொடர்ந்து (ழ்+அ=ழ, ர்+அ=ர, ப்+ஆ=பா, ன்+அ=ன, ர்+உ=ரு. ல்+ஆ=லா) ஈற்றில் குறைந்து ஒலிப்பதினால் குற்றியலுகரமாயிற்று. இவ்வாறு உயிரெழுத்தைத் தொடர்ந்து வருவது உயிர்த்தொடர்க் குற்றியலுகரமாகும்.
 
==வன்றொடர்க் குற்றியலுகரம்==
வன்றொடர்க் குற்றியலுகரம் என்பது [[குற்றியலுகரம்|குற்றியலுகர]] வகைகளுள் ஒன்று. நாக்கு, கச்சு, பாட்டு, பத்து, உப்பு, பற்று போன்ற சொற்களில் [[வல்லினம் (எழுத்து)|வல்லின]] மெய்களை ஊர்ந்து வந்த உகரம்(கு, சு, டு, து, பு, று) வல்லின மெய்யெழுத்துக்களைத் தொடர்ந்து (க், ச், ட், த், ப், ற்) ஈற்றில் குறைந்து ஒலிப்பதினால் குற்றியலுகரமாயிற்று. இவ்வாறு வல்லின மெய்யெழுத்துக்களைத் தொடர்ந்து வருவது வன்றொடர்க் குற்றியலுகரமாகும்.
எ.கா கொக்கு +கால்= கொக்கு க் கால்
 
==மென்றொடர்க் குற்றியலுகரம்==
மென்றொடர்க் குற்றியலுகரம் என்பது [[குற்றியலுகரம்|குற்றியலுகர]] வகைகளுள் ஒன்று. தெங்கு, மஞ்சு, வண்டு, பந்து, கம்பு, கன்று போன்ற சொற்களில் [[வல்லினம் (எழுத்து)|வல்லின]] மெய்களை ஊர்ந்து வந்த உகரம்(கு,சு,டு,து,பு,று) [[மெல்லினம் (எழுத்து)|மெல்லின]] [[மெய்யெழுத்து]]க்களைத் தொடர்ந்து (ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்) ஈற்றில் குறைந்து ஒலிப்பதினால் குற்றியலுகரமாயிற்று. இவ்வாறு மெல்லின மெய்யெழுத்துக்களைத் தொடர்ந்து வருவதே மென்றொடர்க் குற்றியலுகரமாகும்.
 
==இடைத்தொடர்க் குற்றியலுகரம்==
இடைத்தொடர்க் குற்றியலுகரம் என்பது [[குற்றியலுகரம்|குற்றியலுகர]] வகைகளுள் ஒன்று. செய்து, சார்பு, சால்பு, மூழ்கு போன்ற சொற்களில் [[வல்லினம் (எழுத்து)|வல்லின]] மெய்களை ஊர்ந்து வந்த உகரம் (கு, சு, டு, து, பு, று) இடையின [[மெய்யெழுத்து]]க்களைத் தொடர்ந்து (ய், ர், ல், வ், ழ், ள்) ஈற்றில் அமைந்து குறைந்து ஒலிப்பதினால் குற்றியலுகரமாயிற்று. இவ்வாறு இடையின மெய்யெழுத்துக்களைத் தொடர்ந்து வருவது இடைத்தொடர்க் குற்றியலுகரமாகும்.
 
==மொழிமுதல் குற்றியலுகரம்==
வரிசை 78:
* [http://vaiyan.blogspot.in/2018/04/comparison.html குற்றியலுகரம் - தொல்காப்பியம், நன்னூல் கருத்துக்கள்]
* [http://vaiyan.blogspot.in/2018/04/10-tolkappiyam-tamil-linguistics-10.html தொல்காப்பியம் காட்டும் குற்றியலுகரம்]
 
[[பகுப்பு:சார்பெழுத்துகள்]]
[[பகுப்பு:குற்றியலுகர வகைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/குற்றியலுகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது