சேக்கிழார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[படிமம்:Periyapuranam Author Sekkizhar.jpg|thumb|250px|சேக்கிழார் நாயனார்]]
 
'''சேக்கிழார்''' என்பவர் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர் [[இரண்டாம் குலோத்துங்க சோழன்|இரண்டாம் குலோத்துங்க சோழனின்]] அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர். சோழன் [[சீவகசிந்தாமணி]] எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த [[சிவபெருமான்|சிவபெருமானின்]] [[சிவ அடியார்கள்|அடியார்களான]] அறுபத்து மூன்று [[நாயன்மார்|நாயன்மார்களின்]] வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார்.
 
பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே உலகெல்லாம் என்று அடியெடுத்து கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் ''உத்தம சோழப் பல்லவன், தொண்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார்'' போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் [[சேக்கிழார் புராணம்]] எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் [[சேக்கிழார் பிள்ளைத்தமிழ்]] எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளன.
வரிசை 25:
 
=== திருத்தொண்டர் புராணம் இயற்றுதல் ===
புராணம் இயற்ற தில்லை எனப்படும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சென்றார். அங்கு சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப் பெருமானை வணங்கினார். பின்பு ஆயிரம் கால் மண்டபத்தில் அடியார்கள் முன்னிலையில் இறைவன் "உலகெலாம்" என அடியெடுத்துக் கொடுக்க புராணம் பாடத் தொடங்கினார். சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று புராணம் தொடங்கி, அடுத்த வருடம் சித்தரை மாதம் அதே திருவாதிரை நட்சத்திரத்தில் புராணத்தினை முடித்தார். ஓராண்டு காலம் புராணம் இயற்றப்பட்டது. இந்நூலில் திருத்தொண்டத் தொகையில் சுந்தர மூர்த்தியார் பாடியவாறே அடியார்களின் வரலாற்றை அதன் வரிசையிலேயே பாடினார். அத்துடன் சுந்தரமூர்த்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார், இசைஞானியாரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார்.
 
பெரிய புராணத்தில் இரண்டு காண்டங்களும், பதிமூன்று சருக்கங்களும், நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) பாடல்களும் உள்ளன. அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாக பெரியபுராணம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.
வரிசை 35:
சேக்கிழார் வரலாறு குறித்தும், அவருடைய காலம் குறித்தும் பல்வேறு அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளார்கள். [[மா. இராசமாணிக்கனார்]] அவரது [[பெரியபுராண ஆய்வு]] நூலில் பல்வேறு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.<ref name=varalaaru7>https://web.archive.org/web/20160910051348/http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1186</ref>
 
அதன்படி சேக்கிழாரின் இயற்பெயர் இராமதேவன் என இருக்கலாம் என்று கூறுகிறார்.<ref name=varalaaru7/> மேலும் சேக்கிழார் வரலாற்றில் கூறப்படும் அரசன் சீவக சிந்தாமணியை படித்ததும், அதற்கு சேக்கிழார் மறுப்பு தெரிவித்து பெரியபுராணம் இயற்றியது குறித்தான கருத்துரு தவறானது என்றும், சேக்கிழார் சீவக சிந்தாமணியைப் படித்து, அதிலிருக்கும் கருத்துகளை பெரியபுராணத்தில் எடுத்தாண்டுள்ளார் என்றும் கூறுகிறார். <ref name=varalaaru7/>
 
சேக்கிழார் பெரிய புராணம் எனும் திருத்தொண்டர் புராணத்தினை இரண்டாம் இராசராசன் காலத்தில் பங்குனி உத்திரத் திருவிழாவில் திருவொற்றியூர்க் கோயிலில் இயற்றியுள்ளார்.<ref name=varalaaru7/> இக்காலம் கிபி. 1174 ஆக இருக்கலாம் என்பது அவரது ஆய்வு.<ref name=varalaaru7/>
வரிசை 43:
# பெரிய புராணம்
# திருத்தொண்டர் புராணச் சாரம்
# திருப்பதிகக்கோவை என்னும் மூன்று நூல்களும் சேக்கிழாரால் பாடப்பட்ட நூல்கள். <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=74}}</ref>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/சேக்கிழார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது