திருவள்ளுவர் ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி replacing local image with commons image
சி பராமரிப்பு using AWB
வரிசை 7:
மதம் சாராத [[திருவள்ளுவர்|வள்ளுவப்பிரானை]], தமிழின் மிகச்சிறந்த வரலாற்று ஆளுமையாக முன்வைப்பதில் தமிழறிஞர்கள் ஒருமித்த முடிவெடுத்தனர். இதன் பயனாக அவரை முன்னிறுத்தி "திருவள்ளுவர் திருநாள்" என்னும் பண்டிகையை தமிழர் யாவரும் கொண்டாடவேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது. 1935 சனவரி 17ஆம் தேதி, இதற்கான கால்கோள் இட்டவர்கள், காழி சிவகண்ணுசாமிப்பிள்ளையும், பத்மஸ்ரீ திரு.வ.சுப்பையாவும்.<ref name="vsrc">{{cite web | url=http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-57-48/item/435-2014-07-23-19-11-29 | title=வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள் தமிழினத்தை ஒன்றுபடுத்தும் நாள் | publisher=Vedic Science Research Centre | date=15 மே 2014 | accessdate=2 சனவரி 2018 | author=தியாகராஜன், சாமி}}</ref> அவர்களின் முயற்சியில் "திருவள்ளுவர் திருநாட் கழகம்" எனும் கழகமொன்று அமைக்கப்பட்டு, தமிழகம், அயல் மாநிலங்கள், அயல் நாடுகளில் அதைக் கொண்டாடுவதென்றும் முடிவெடுக்கப்பட்டது. திருவள்ளுவர் பிறந்த தினமான வைகாசி அனுடத்தை மையமாக வைத்து, 1935 மே 17,18 ஆகிய தேதிகளில், [[சென்னை பச்சையப்பன் கல்லூரி]]யில், [[மறைமலையடிகள்]], [[தெ. பொ. மீனாட்சிசுந்தரம்|தெ.பொ.மீ]], [[திரு. வி. கலியாணசுந்தரனார்|திரு.வி.க]] முதலான ஏராளமான தமிழறிஞர் முன்னிலையில் திருவள்ளுவர் திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.<ref name="hindu">{{cite web | url=http://www.tamilhindu.com/2012/02/thai-tamil-year-false-history-an-update/ | title=திரிபே வரலாறாக? – தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து.. | publisher=தமிழ்ஹிந்து | date=23 பிப்ரவரி 2012 | accessdate=2 சனவரி 2018 | author=பால கௌதமன்}}</ref>
 
திருவள்ளுவர் திருநாள் மெல்ல மெல்ல வழக்கொழிந்து போகத் துவங்கிய நிலையில், ஈழத்தமிழ் அறிஞர் [[கா. பொ. இரத்தினம்]] 1954இல் எடுத்த முயற்சிகளின் பயனாக, தமிழகத்திலும் இலங்கை, மியன்மார் உள்ளிட்ட அயல் நாடுகளிலும், திருவள்ளுவர் திருநாள் மீண்டும் கொண்டாடப்பட ஆரம்பித்தது. வைகாசி அனுடமான 22 மே 1959இலும் இது இடம்பெற்றதை அறியமுடிகின்றது.<ref>{{cite book | url=http://www.noolaham.net/project/51/5082/5082.pdf | title=கொழும்புத் தமிழ்ச்சங்கம் பதினேழாவது ஆண்டறிக்கை | publisher=கொழும்புத் தமிழ்ச்சங்கம் | year=1959 | location=கொழும்பு | pages=2}}</ref>
 
=== தையில் திருவள்ளுவர் திருநாள் ===
தைப்பொங்கலை நீண்ட நாளாகவே 'தமிழர் திருநாள்' என்று போற்றும் வழக்கம், தமிழர் மத்தியில் உண்டு. தமிழர் திருநாள் தைப்பொங்கல் என்பதால், அன்றே திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்படவேண்டும் என்ற கருத்தை முதன்முதலில் சொன்னவர் தமிழறிஞர் [[கி. ஆ. பெ. விசுவநாதம்]]. இதை முன்மொழிந்து 1954இல், அவர் திருச்சி வானொலி நிலையத்துக்கும் கா.பொ.இரத்தினத்துக்கும் எழுதிய கடிதத்துக்கு, கா.பொ.இரத்தினம் கடும் கண்டனம் தெரிவித்தார்.<ref name="vsrc"/> <ref name="hindu"/> வைகாசி அனுடம் ஆண்டுக்காண்டு மாறுபடலாம் என்பதால் 1966இல், சூன் இரண்டாம் தேதியை, ஆண்டு தோறும் திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாடுவதற்கான அரச விடுமுறை அளிக்கப்பட்டது.<ref name = uvan>{{cite web | url=http://www.uvangal.com/Home/getPostView/1281 | title=தமிழ் வானியலும் புத்தாண்டும் – ஒரு அலசல் | publisher=உவங்கள் இணைய இதழ் | accessdate=27 ஏப்ரல் 2017}}</ref> எவ்வாறெனினும் இது 1971இல் தை முதலாம் தேதிக்கு மாற்றப்பட்டது.<ref name="கணே"/>
 
=== திருவள்ளுவர் ஆண்டு ===
{{double image|right|Somasundara bharathiar.jpg|100|KAP Viswnatham 2010 stamp of India.jpg|180|திருவள்ளுவர் ஆண்டை அறிமுகப்படுத்தியோரில் முதன்மையான இருவர். [[சோமசுந்தர பாரதியார்]] (இடம்), [[கி. ஆ. பெ. விசுவநாதம்]] (வலம்)}}
தமிழில் ஆண்டுகளைக் குறிக்க பல ஆண்டுத்தொடர்கள் பயன்பட்டுள்ளன. [[சக ஆண்டு]], [[விக்ரம் நாட்காட்டி|விக்கிரம ஆண்டு]], [[கலி யுகம்|கலி ஆண்டு]] என்பன அவற்றில் குறிப்பிடத்தக்கவை. கேரளத்தில் பண்டு தொட்டே [[கொல்லம் ஆண்டு|கொல்லம் நாட்காட்டி]] பயன்பட்டு வந்தது. ஆனால், இவை எதுவுமே தமிழர்க்குத் தனித்துவமானவை அல்ல. இந்நிலையிலேயே தமிழருக்கென சிறப்பான நாட்காட்டி ஒன்றை முன்மொழிய வேண்டிய தேவை ஏற்பட்டது.
 
மறைமலையடிகள் ஏற்கனவே திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு 31 என்று கணித்திருந்தார்.<ref name="illu">{{cite journal | url=https://books.google.lk/books?id=IWw6AQAAIAAJ | title=Reader's Write | journal=The Illustrated Weekly of India, | year=1968 | volume=Volume 89 | issue=Part 1 | pages=61}}</ref> [[சோமசுந்தர பாரதியார்]], கி.ஆ.பெ, கலைஞர் கருணாநிதி, வைகாசி அனுடத்தில் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடி வந்த கா.பொ.இரத்தினம் உட்பட பெரும்பாலான தமிழறிஞர்கள் சித்திரைப்புத்தாண்டு ஆரியர் திணித்தது என்ற கருத்தைக் கொண்டிருந்திருக்கிறார்கள்.<ref>{{cite web | url=http://www.kokuvilhindu.net/detail.php?MyNewsID=63 | title=தைத்திருநாள் வாழ்த்துக்கள் | publisher=கொக்குவில் இந்துக்கல்லூரி | date=14 சனவரி 2007 | accessdate=2 சனவரி 2018 | author=சபேசன்}}</ref> இந்தப்பின்னணியில் கருணாநிதியின் தி.மு.க அரசு, தைத்திருநாளிலேயே ஆரம்பமான திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, அந்நாளில் "திருவள்ளுவர் ஆண்டு" எனும் ஆண்டுத்தொடரை அறிமுகப்படுத்தியது.<ref name="கணே">{{cite web | url=http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=article&id=2665:2012-05-04-16-32-54&catid=1:2009-09-08-19-02-01&Itemid=71 | title=திருவள்ளுவர் திருநாள் அளித்த நாவலர் சோமசுந்தர பாரதியார் - நா.கணேசன் | publisher=குமரிநாடு.நெற் | date=5 மே 2012 | accessdate=2 சனவரி 2018 | author=கணேசன், நா}}</ref> 1971இல் திருவள்ளுவர் ஆண்டு தமிழ் நாட்டு அரசிதழில் வெளியாகி, 1972இல் நடைமுறைக்கும் வந்தது. 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில், அப்போதைய முதல்வர் [[எம்.ஜி.ஆர்]], அதை சகல அரச ஆவணங்களிலும் உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துவதற்கான அரசாணையைப் பிறப்பித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/திருவள்ளுவர்_ஆண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது