ஆண்டாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
ஒரு குழந்தையாக ஆண்டாள் [[துளசி]]ச் செடியின் கீழ் கிடந்தபோது [[மதுரை]]க்கு அண்மையிலுள்ள [[ஸ்ரீவில்லிபுத்தூர்]] என்னும் ஊரில் வசித்துவந்த [[பெரியாழ்வார்|விஷ்ணுசித்தர்]] (பெரியாழ்வார்) என்னும் [[அந்தணர்]] ஒருவரால் கண்டெடுக்கப்பட்டாள். இவ்வந்தணர் [[திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்|திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு]] [[மலர்|மலர்கள்]] கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் [[குடும்பம்]] எதுவும் இல்லாதிருந்த நிலையிலும் குழந்தை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக் கருதி வளர்த்து வரலானார். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக்[[குழந்தை]]க்கு இட்ட பெயர் கோதை.
 
இளம் வயதிலேயே [[சமயம்]], [[தமிழ்]] என்பன தொடர்பில் தனக்குத் தெரிந்த அனைத்தையுமே விஷ்ணுசித்தர் கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இதனால் கோதை இளம் வயதிலேயே [[கண்ணன்]] மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும் தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். [[கோயில்|கோயிலில்]] இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார். இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் "இறைவனையே ஆண்டவள்" என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.
 
கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, [[ஸ்ரீரங்கம்|திருவரங்கம்]] (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து [[திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்|திருவரங்கம் கோயிலுக்கு]] அழைத்துவருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கோயில் கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள் என்பது ஆண்டாள் வரலாறு.
"https://ta.wikipedia.org/wiki/ஆண்டாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது