அறுபது ஆண்டுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 2:
'''அறுபது ஆண்டுகள்''' ('''ஆண்டு வட்டம்''' அல்லது '''சம்வத்சரம்''') பெரும்பாலான [[இந்து நாட்காட்டி|இந்திய நாட்காட்டி]]களில் காலக்கணிப்பில் பயன்படும் ஒரு சுற்றுவட்டம் ஆகும். இவை அறுபதுக்கும் பஞ்சாங்கங்களில் தனித்தனிப் பெயர் குறிப்பிடப்படுவதுடன், அறுபதாண்டுகளுக்கு ஒருமுறை இப்பட்டியல் மீள்வதாகச் சொல்லப்படுகின்றது. சமகாலத்தில் தமிழ் நாட்காட்டியிலும் கன்னடர் - தெலுங்கர் பயன்படுத்தும் உகாதி நாட்காட்டியிலும் இது பரவலாகப் பயன்படுகின்றது.
 
[[இந்துக் காலக் கணிப்பு முறை|இந்துக் காலக் கணிப்பு முறையில்]], இரவு-பகல், வாரநாட்கள், மாதங்கள் போல ஆண்டுகளும் சுழற்சி முறையில் அமைந்துள்ளன. இந்த ஆண்டு வட்டம் ஒவ்வொன்றும் 60 ஆண்டுகளைக் கொண்டது. இதிலுள்ள ஒவ்வொரு ஆண்டுக்கும் தனித்தனிப் பெயர்கள் உண்டு. ''பிரபவ'' ஆண்டில் தொடங்கி ''அட்சய'' ஆண்டில் ஒரு சுற்று நிறைவடைந்ததும் மீண்டும் இன்னொரு ''பிரபவ'' ஆண்டில் அடுத்த வட்டம் ஆரம்பமாகும்.
 
== வரலாறு ==
இந்தியாவின் மிகப்பழைய வானியல் நூலான வேதாங்க சோதிடத்தில் (பொ.மு 700இற்குப் பின்)<ref>{{cite web | url=https://books.google.lk/books?id=PFTGKi8fjvoC&pg=FA25Press&redir_esc=y#v=onepage&q&f=false | title=Subbarayappa, B.V. (1989), Indian astronomy: a historical perspective. In: Biswas, Mallik, Vishveshwara (eds.), "Cosmic Perspectives", Cambridge University, ISBN 978-0-521-34354-1 | accessdate=17 ஏப்ரல் 2017}}</ref> விஜய முதல் நந்தன வரையான அறுபது ஆண்டுகளின் பட்டியலைக் காணமுடிகின்றது. எனினும், [[வராகமிகிரர்|வராகமிகிரரின்]] பிருகத் சங்கிதையில் (பொ.பி 505 - 587) பிரபவ முதல் அட்சய வரை என்று அப்பட்டியல் மாற்றமுற்றிருக்கிறது. பிருகத் சங்கிதையில் குறிக்கப்பட்ட ஒழுங்கிலேயே இன்றுள்ள அறுபதாண்டுப் பட்டியல் கடைப்பிடிக்கப்படுகின்றது.<ref>{{cite web | url=http://satva.blogspot.com/2011/12/effects-of-samvatsaras.html | title=THE EFFECTS OF SAMVATSARAS | date=19 டிசம்பர் 2009 | accessdate=17 ஏப்ரல் 2017 | author=Jorge Angelino}}</ref>
 
வடமொழி நூல்களில் அறுபது ஆண்டுகளும் அறுபது சம்வத்சரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. [[இராசிச் சக்கரம்|இராசிச்சக்கரத்தோடு]] சூரியன் இயங்கும் ஒரு காலவட்டம் ஆண்டு என்று கணிப்பது போல், [[வியாழன்]] கோள் இயங்கும் ஒரு காலவட்டம் [[சோதிடம்|சோதிட]] ரீதியில் அறுபது சம்வத்சரங்கள் (அறுபது ஆண்டுகள்) என்று அழைக்கப்படுகிறது. வடநாட்டு நூல்கள் தொடர்ந்து சம்வத்சரங்களை வியாழனின் இயக்கத்துடனே தொடர்புபடுத்த, தென்னகத்தில் அவை சூரிய ஆண்டுகளின் சுற்றுவட்டப் பெயர்களாக மாறியிருக்கின்றன.<ref name = time/> ஆயினும், காலக்கணிப்பு ரீதியில் சம்வத்சரமானது ஒரு சூரிய ஆண்டிலும் சிறியது என்பதே உண்மை ஆகும்.<ref name="time">{{cite book | url=https://books.google.lk/books?id=wwEVAAAAIAAJ | title=Time Measurement and Calendar Construction | publisher=Brill Archive | pages=84}}</ref> <ref name="jyoti">{{cite book | url=https://books.google.lk/books?id=hdI7AQAAMAAJ | title=The Obscure Text of the Jyotisha Vedânga Explained | publisher=Indian Press | year=1907}}</ref>
 
== தமிழகமும் அறுபது ஆண்டுகளும் ==
தமிழ் நாட்டில் அறுபதாண்டுப் பட்டியல் எப்போது வழக்கில் வந்தது என்பதற்கான தெளிவான சான்றுகள் இல்லை.<ref>{{cite book | url=https://books.google.lk/books?id=lBhuAAAAMAAJ | title=History of Tamilakam. Darkness at horizon | publisher=Shri Bhagavan Vedavyasa Itihasa Samshodhana Mandira (Bombay, India) | author=T. V. Kuppuswamy (Prof.), ‎Shripad Dattatraya Kulkarni | year=1995 | pages=50}}</ref> எனினும் அவற்றின் ஒழுங்கு வராகமிகிரருக்குப் பின்பேயே அது தமிழகத்துக்கு அறிமுகமானதைச் சொல்கின்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை, பொ.பி 14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளிலேயே அறுபதாண்டுப் பெயர் பட்டியலை முதன்முதலாகக் காணமுடிகின்றது.<ref>[http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=178 மடவளாகம் பச்சோடநாதர் கோயில் கல்வெட்டு]</ref> <ref>[http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1104 திருக்கடையூர் கோபுரக் கல்வெட்டு]</ref>
தமிழில் அறுபது சம்வத்சரங்களைப் பட்டியலிடும் மிகப்பழைய நூலான "அறுபது வருட வெண்பா" [[இடைக்காட்டுச் சித்தர்|இடைக்காடரால்]] பாடப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவர் காலம் பொ.பி 15ஆம் நூற்றாண்டு.<ref>{{cite web | url=http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/2011-sp-1511560835/15913-2011-08-02-09-40-20 | title=சித்தர் பாடல் பதிப்புகள் | publisher=கீற்று.காம் | date=2 ஆகஸ்டு 2011 | accessdate=16 ஏப்ரல் 2017}}</ref> [[விவேக சிந்தாமணி]]யிலும் அறுபதாண்டுப் பெயர்கள் மறைகுறியாகக் குறிக்கப்படும் பாடலொன்று வருகின்றது.<ref>விவேக சிந்தாமணி, மூலமும் உரையும், ஸ்ரீ தனலட்சுமி புத்தக நிலையம், 159, போர்ச்சுகீஸ் சர்ச் தெரு, சென்னை 1</ref>
 
வரிசை 22:
| style="width:100px" | '''பெயர் (தமிழில்)'''
| style="width:100px" | '''பெயர் (ஆங்கிலத்தில்)'''
| style="width:100px" | '''[[கிரெகொரியின் நாட்காட்டி |கிரகோரி ஆண்டு]]'''
| style="width:75px" |
| style="width:20px" | '''எண்.'''
வரிசை 405:
* [[இந்துக் காலக் கணிப்பு முறை]]
* [[ஆண்டு]]
* [[ஆண்டு_வட்டம்_அட்டவணை|ஆண்டு வட்டம் அட்டவணை]] (1687-2047)
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அறுபது_ஆண்டுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது