சங்க காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி →‎சமயம்: பராமரிப்பு using AWB
வரிசை 32:
பெரும் இலக்கண நூலான [[தொல்காப்பியம்]], பத்து நூல்களின் திரட்டான [[பத்துப்பாட்டு]], எட்டு நூல்களை உள்ளடக்கிய [[எட்டுத் தொகை]] , [[சிலப்பதிகாரம்]], [[மணிமேகலை]] மற்றும் [[சீவக சிந்தாமணி]] போன்ற பதினெட்டு சிறு படைப்புகளையும் பண்டைய தமிழ் இலக்கியங்கள் உள்ளடக்கியுள்ளது. பண்டைய தமிழர்கள் நெருக்கமாக இயற்கை வழிபாட்டின் வேர்களை பின்பற்றிய செயல் [[வட இந்தியா]]வில் பின்பற்றப்பட்ட அதன் சமகால வேத இந்து மதத்திற்கு எதிரான புறமதத்தினன் போல இருந்தது. பண்டைய சங்க இலக்கியங்களில் [[சிவன்]] முழுமுதற் கடவுளாக கருதப்பட்டான். அதேவேளையில் [[முருகன்]] வழிபாடும் மக்களால் கொண்டாடப்பட்டது. தமிழ்ப்புலவர்கள் இரு கடவுளரையும் சங்கம் ஏறி பாடி முழங்கியுள்ளனர். தமிழ்கூறு நல்லுலகம் தங்கள் வாழ்வியலை அகவாழ்வு, புறவாழ்வு என்றும் வகை படுத்தி இருந்தனர். அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பை இயற்கை அமைப்பிற்கு ஏற்றவாறு [[குறிஞ்சி]], [[முல்லை]], [[மருதம்]], [[நெய்தல்]], [[பாலை]] என ஐவகையாகப் பிரித்து அப்பகுதிகளின் சூழலை ஒட்டிய கடவுள்களையும் வழிபட்டனர். மலை சார்ந்த குறிஞ்சி நில மக்கள் செவ்வேள் எனப்படும் முருகனையும், காடு சார்ந்த முல்லைநில மக்கள் திருமாலையும், வயல் சார்ந்த மருதநில மக்கள் வேந்தனையும், கடல் சார்ந்த நெய்தல்நில மக்கள் கடலோன் என்ற தெய்வத்தையும் வழிபட்டனர். பழம்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியம் கொற்றவை என்ற தாய் கடவுளைக் குறிப்பிட்டுள்ளது. இதைத் தவிர மாயோன், வாலி போன்ற தெய்வங்களும் பண்டைகாலத்தில் இருந்துள்ளன. இடைக்காலத்தில் தமிழ் இலக்கியங்களில் இந்துமதத்தின் ஆதிக்கம் தலைதூக்கியது. இதனால் சிவனை பின்பற்றுவோர் சைவர்கள் என்றும் விஷ்ணுவைப் பின்பற்றுவோர் வைனவர்கள் என்றும் இரு பிரிவுகள் தோன்றின.
 
முருகக் கடவுளை மிகவும் பிரபலமான தெய்வமாக வழிபட்டனர். ஆரம்ப காலத்தில் சிவபெருமானின் மகனாக நம்பப்பட்ட கார்த்திகேயனே முருகன் என்று அடையாளம் காணப்பட்டது. முதலில் உள்ளூரில் வேறுபட்ட தெய்வமாக கருதப்பட்ட முருக வழிபாடு பின்னர் வலிமை பெற்றிருக்கலாம். தமிழ் கலாச்சாரத்தை ஆய்வு செய்தவர்களில் முக்கிய ஆய்வாளாரான [[கமில் வி சுவலபில்]] அவர்களும், பகுப்பாய்வு செய்வதற்குரிய மிகவும் சிக்கலான கடவுள்களில் ஒருவராக சுப்பிரமணிய – முருகனும் உள்ளார் என்கிறார். ஆதிகாலத்தில் இருந்த [[கொற்றவை]] வழிபாடு பின்னாளில் அதாவது இடைக்காலம் தொட்டு இன்றுவரை [[அம்மன்]] வழிபாடு அல்லது [[மாரியம்மன்]] வழிபாடாக மாற்றம் பெற்றுள்ளது. [[சிலப்பதிகாரம்| சிலப்பதிகாரத்து]] நாயகியாகிய கன்ணகியை தெய்வமாக்கிய பத்தினி வழிபாடும் தமிழர்களிடம் குறிப்பாக [[இலங்கை]]யில் பொதுவாக காணப்பட்டது. இவர்களைத் தவிர [[திருமால்]], [[சிவன்]], [[கணபதி]], பிற இந்து தெய்வங்கள் யாவருக்கும் கோயில் கட்டி வழிபடும் வழக்கமும் பின்பற்றப்பட்டது.
 
[[கலிபோர்னியா பல்கலைக்கழகம்| கலிபோர்னியா பல்கலைக்கழகத் ]] தமிழ் ஆய்வுகள் தலைவர் ஜார்ஜ் எல் ஆர்ட் மதுரைச் தமிழ்ச்சங்கமே சிறப்பான இலக்கியச் சங்கம் என்கிறார்.
 
== இவற்றையும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/சங்க_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது