இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
குறிப்பிட்ட '''[[நாள்மீன்]]''' கூட்டம், அல்லது '''நட்சத்திரம்''' என்பது, [[இராசிச் சக்கரம்|இராசிச் சக்கரத்தை]] 27 சமபங்குகளாகப் பிரிக்கப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும். ஒவ்வொரு இராசி வீட்டையும் தமிழில் '''ஓரை''' என்பர். ஓர் நட்சத்திரம் என்பது [[பஞ்சாங்கம்|பஞ்சாங்கத்தி]]ன் ஓர் உறுப்பாக வரும் போது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் [[சந்திரன்]] நிற்கும் நாள்மீன்கூட்டப் பிரிவை (நட்சத்திரப் பிரிவை) இப் பெயர் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் இராசிச் சக்கரத்தில் [[ரேவதி (பஞ்சாங்கம்)|இரேவதி]] நட்சத்திரப் பிரிவில் இருந்தால் அந்த நேரத்துக்குரிய நட்சத்திரம் ரேவதி ஆகும். எனவே வானில் திங்கள் நிற்கும் நாள்மீன் கூட்டம், அப்பொழுதுக்கான நட்சத்திரம் என்பர்.
 
முழு இராசிச் சக்கரம் (360 பாகைகள்) 27 நட்சத்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதால் ஒரு நட்சத்திரப்பிரிவு 13.33 [[பாகை]] அளவுள்ளது.13.33 பாகை என்பது 13<sup>o</sup>, 20 [[பாகைத்துளி]] (நிமிடவளைவுகள்). (1 [[பாகை]]= 60 [[பாகைத்துளி]] (நிமிடவளைவுகள்)).
 
==பாதம்==
புவியின் 360° சுற்றுவட்டப்பாதை 108 பாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் 9 பாதங்கள் அடங்கியவை.ஒவ்வொரு விண்மீனும் நான்கு பாதங்கள் கொண்டவை. அவை குறிப்பிட்ட நட்சத்திரத்தின் முதலாம் பாதம், இரண்டாம் பாதம், மூன்றாம் பாதம், நான்காம் பாதம் எனக் குறிப்பிடப் படுகின்றன.ஒவ்வொரு பாதமும் 3 பாகை, 20 பாகைத்துளிகள் (நிமிடவளைவுகள்). இதன் மூலம் இராசிச் சக்கரம் (ஓரை வட்டம்) 27 X 4 = 108 பாதங்களாக வகுக்கப்படுகின்றன. இதிலிருந்து இராசிச் சக்கரத்திலுள்ள 12 இராசிகள் (ஓரைகள்) ஒவ்வொன்றும் 9 பாதங்களை அல்லது 2-1/4 நட்சத்திரங்களைக்கொண்ட 30 பாகைகளை அடக்கியுள்ளது.
 
==அட்டவணை==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_வானியலின்_27_நட்சத்திரங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது