வரலாற்றுக்கு முந்திய காலக் கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
 
[[Image:Venus of Tan-Tan.jpg|thumb|75px|left|தான்-தானின் வீனஸ்]]
இன்றுவரை அறியப்பட்டவற்றுள் மிகப் பழைய கலை வேலைப்பாடு எனக் கருதத் தக்கது, [[தான்-தானின் வீனஸ்]] எனப்படும் கி.மு 500,000 முதல் 300,000 வரையான, நடு [[ஆக்கியூலியக் காலம்|ஆக்கியூலியக்]] காலப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிறிய உருவச் சிலை ஆகும். [[மொரோக்கோவில்]] கண்டுபிடிக்கப்பட்ட இது, 6 [[சமீ]] நீளம் கொண்ட மனித உருவத்தை ஒத்திருக்கும் ஒரு சிலை ஆகும். இது இயற்கையான நிலவியல் செயற்பாடுகளால் உருவாகியிருக்கக் கூடும் எனினும், மனிதனால் உருவாக்கப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தியதற்கான சுவடுகளும், [[நிறம்]] தீட்டப்பட்டதற்கான சில சான்றுகளும் இதிலே உள்ளன. இச் சிலையின் மேற்பரப்பில் காணப்பட்ட எண்ணெய்த் தன்மை கொண்ட பொருள் [[இரும்பு]], [[மங்கனீசு]] ஆகியவை கொண்ட சேர்வைகளின் கலவை எனக் கண்டறியப்பட்டது. இது, இவ்வுருவம் எவ்வாறு தோன்றியது எனினும், யாரோ இதற்கு நிறம் தீட்டிப் பயன்படுத்தி உள்ளார்கள் என்பதைக் காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. இப்பொருளை மனிதர்களின் கலை உணர்வு வெளிப்பாட்டின் சான்றாகக் கொள்வதையிட்டுக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஏறத்தாழ இதே போன்ற, கிமு 250,000 காலப்பகுதியைச் சேர்ந்த, [[பெரக்காத் ராம்]] என்னும் இன்னொரு உருவம் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் முன்போன்ற சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.
 
[[பகுப்பு:கலை வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/வரலாற்றுக்கு_முந்திய_காலக்_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது