"தி போஸ்ட் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
ரகசிய ஆவணங்கள் தொடர்பான செய்தியுடன் ''தி நியூயார்க் டைம்ஸ்'' வெளியான அதே நாளில், ''தி வாஷிங்டன் போஸ்ட்'' இதழில், அமெரிக்க அதிபர் நிக்ஸனின், முதல் மகள் ட்ரிஸியா நிக்ஸனின் திருமணச் செய்தி வெளியாகிறது. வியட்நாம் போர் தொடர்பான மிகப் பெரிய செய்தியை விட்டுவிட்டு, அதிபர் மகளின் திருமணம் என்ற சாதாரணச் செய்தியை வெளியிட்டதால், அந்தத் தாளை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, தனது ஆசிரியர் குழுவினருடன் நாம் என்ன வேலை செய்கிறோம்? இனி என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை நடத்துகிறார் பென் பிராட்லீ.
 
''தி நியூயார்க் டைம்ஸ்'' பத்திரிகைக்கு ரகசிய ஆவணங்களை வழங்கிய அதே நபரிடமிருந்து ''தி வாஷிங்டன் போஸ்ட்'' பத்திரிகையும் ஆவணங்களை வாங்கிறது. இதனால் பத்திரிகைகள் நீதிமன்ற வழக்கைச் சந்திக்கிறன. இறுதியில், ‘ஜனநாயகம் காக்கப்பட, பத்திரிகைச் சுதந்திரம் காக்கப்பட வேண்டும்’ என்று கூறி, உச்ச நீதிமன்றம் பத்திரிகைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு ‘வெள்ளை மாளிகைக்குள் ‘தி போஸ்ட்’ பத்திரிகையின் நிருபர்கள் யாரும் வரக் கூடாது’ என்று அதிபர் நிக்ஸன் உத்தரவிடுகிறார்.
 
நிக்ஸன் அவ்வாறு உத்தரவிடும் அதே நேரம், அரசு அலுவலகங்கள் உள்ள ‘வாட்டர்கேட்’ எனும் கட்டிடத்தில், கதவு ஒன்று உடைக்கப்பட்டிருப்பதைக் காட்டுவதோடு படம் முடிகிறது.
 
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|30em}}
 
[[பகுப்பு:2017 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டு பாக்ஸ் திரைப்படங்கள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2705572" இருந்து மீள்விக்கப்பட்டது