நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎கதைசுருக்கம்: பராமரிப்பு using AWB
வரிசை 37:
 
<br>
மீண்டும் திரைக்கதை மாஸ் இருக்குமிடத்திற்க்கு செல்கிறது. மாஸ் தனது வீட்டில் கடத்தல்காரர்களிடம் இருந்து எடுத்து வந்த இயந்திர துப்பாக்கியை எடுத்துகொண்டு தான் குண்டடிபட்ட காயங்களுக்கு தானே வைத்தியம் செய்து கொள்கிறார். அவர் தனது மனைவியிடம் தான் கொண்டு வந்த இரண்டு மில்லியன் டாலர் பணத்தை எடுத்துகொண்டு அவளது அம்மாவிடம் சென்றுவிடும்படிக்கு பணிக்கிறார். முதலில் ஆட்சேபிக்கும் அவர் மனைவி பின்னர் ஒருவழியாக சம்மதித்து கிளம்ப ஆயத்தமாகிறார்.
 
அடுத்த காட்சியில் அன்டன் சிகுர் இருக்குமிடத்தில் வருகிறது. அந்த போதைபொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் ஆன்டனை தொலைந்து போன பணத்தை கண்டுபிடித்து தரும்படிக்கு கூலிக்கு ஒப்பந்தம் செய்ததால் பணம் தொலைந்த இடத்திற்கு சிலருடன் வந்து புலனாய்வு செய்கிறான். இந்த இடத்தில் எட் டாம் பெல்லுக்கு நெடுஞ்சாலையில் ஒரு மகிழ்வுந்து அனாதரவாக பற்றி எரிந்து கொண்டிருப்பதாக தகவல் வருவதையொட்டி அதை விசாரிக்கும் பொருட்டு மற்றொரு அதிகாரியுடன் அந்த இடத்திற்கு செல்கிறார். எரிந்து கொண்டிருக்கும் மகிழ்வுந்தின் அருகில் காத்திருக்கும் அதிகாரி எட் டாம் பெல்லிடம் நிலமையை விளக்குகிறார். அங்கிருந்து இருவரும் துப்பறிய ஆரம்பிக்கிறார்கள். அப்படியிருக்கும் வேளையில் அவர்கள் பாலவனத்தில் இறந்து கிடக்கும் கடத்தல்காரர்களையும் அவர்களினருகில் நிற்கதியாக விடப்பட்ட வண்டிகளும் இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். இதற்க்கிடையில் ஆன்டன் சிகுர், லெவ்லீன் மாஸ்ஸின் வீட்டை கண்டுபிடித்து அங்கு வந்து விடுகிறான். வீட்டினுள் அவன் அத்துமீறி நுழைந்து பார்க்கையில் அங்கு லெவ்லீன் மாஸ்ஸும் அவனது மனைவியும் அங்கிருந்து முன்னமேயே தப்பிசென்றுவிட்டதை உணர்கிறான். பின் அங்கிருக்கும் பெண்ணிடம் மாஸ் பற்றி விசாரிக்கிறான் அவள் சரியான தகவல் தர மறுப்பதால் அங்கிருந்து சென்று விடுகிறான். இதற்கிடையே மாஸ் அவரது மனைவியை பேருந்து மூலம் தப்பி செல்ல வைக்கிறான், பின்னர் வாகன ஓட்டிகள் தங்கும் விடுதி ஒன்றில் அவன் தங்குகிறான். இதற்கிடையே எட் டாமும் அவரது சக அதிகாரியும் மாஸின் வீட்டிற்கு சென்று அவன் அங்கில்லாததை அறிந்து ஏமாறுகிறார்கள். விடுதியில் தங்கியிருக்கும் மாஸ் அங்கிருக்கும் குளிர்சாதன காற்று வெளியேற்றியினுள் பணப்பையை ஒளித்து வைக்கிறான். வெளியில் சென்றுவிட்டு திரும்பவும் அந்த விடுதிக்கு வரும் மாஸ் ஏதோ சந்தேகம் அடைந்தவனாக உணர்ந்து அங்கிருந்து திரும்பிவிடுகிறான். துப்பாக்கி ஒன்றை வாங்கிகொண்டு மறுபடியும் அதே விடுதிக்கு காலையில் வந்து தான் தங்கியுருக்கும் அறை தவிர மேலுமொரு அறை எடுத்து தங்குகிறான். தான் புதிதாக வாடகைக்கு எடுத்திருக்கும் அறையில் இருந்து தன்னுடைய பழையஅறைக்குள் செல்வதற்க்கு வழிகிடைக்குமா என ஆராய்கிறான். இதற்கிடையில் அந்த பணப்பையினுள் அந்த பை எங்கிருக்கிறது என்பதை கண்டறிய உதவும் ஒரு துப்பறியும் கருவி பொருத்தப்பட்டுள்ளதை அவன் அறிவதில்லை. அவன் தங்கியிருக்கும் விடுதி வழியாக மகிழ்வுந்தில் கடந்து செல்லும் ஆன்டன் சிகுர் தன் கையிலிருக்கும் உணர்வாங்கியின் மூலம் அந்த பணப்பை தனக்கு எட்டும் தூரத்தில் இருப்பதை அறிந்து மாஸ் தங்கியிருக்கும் அதே விடுதிக்கு வந்து விடுகிறான். அங்கு அதே பணப்பையை தேடி அலையும் மற்றொரு கும்பலில் சிலரை கொல்கிறான். இத்தருணத்தில் மாஸ் அந்த பணத்துடன் தப்பி மற்றொரு தங்கும் விடுதிக்கு வந்து சேர்கிறான். அங்கும் மாஸை தேடி சிகுர் வந்து விடுகிறான் அங்கு இருவருக்கும் துப்பாக்கி சண்டை நடக்கிறது. அதில் இருவருக்குமே குண்டடி படுகிறது. மாஸ் அங்கிருந்து தப்பி மெஃஸிகோ - அமெரிக்கா எல்லையில் இருக்கும் சுங்கசாவடி மூலம் தப்பிசெல்ல எத்தனிக்கிறான். பணத்துடன் சுங்கசாவடி எல்லையை கடப்பதென்பது நடக்காத காரியம் ஆதலால் பணப்பையை சுங்க வேலியினருகில் ஒரு புதரில் எறிந்த்து விட்டு சில இளைஞர்களிடம் அவர்கள் அணிந்திருக்கும் உடையை சிறிது பணத்திற்க்கு விலைக்கு வாங்கி அந்த சுங்கசாவடி எல்லையை தாண்டி செல்கிறான். இதனிடையே சிகுர் தான் பட்ட குண்டு காயத்திற்க்கு வைத்தியம் செய்வதற்க்காக மருந்துக்கடை முன்பிருக்கும் மகிழ்வுந்தில் தீப்பற்ற வைத்து ஒரு வெடிவிபத்தை உண்டுபண்ணுகிறான். அந்த வெடி விபத்தினால் வரும் குழப்பங்களின் இடையே அந்த மருந்துக்கடையிலிருந்து மருந்துகளை களவாடி செல்கிறான். தனக்குதானே குண்டடிக்கு மருத்துவமும் செய்து கொள்கிறான். இக்காட்சிகளிடையே ஷெரிஃப் அதிகாரிகளின் துப்பறியும் காட்சிகளும் வருகிறது. மாஸ் சுங்கசாவடியில் தப்பி மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறான். அங்கு வரும் கார்சன் வூடி எனும் அதிகாரி தான் கடத்தல் கும்பலின் பணத்தை மீட்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார். அதிகாரி அவனிடம் விசாரணை செய்வதோடு சிகுர் பற்றி எச்சரித்தும் செல்கிறார். மேலும் தானும் சிகுரும் ஒருவருக்கொருவர் முகமறிந்த நண்பர்கள் என்றும் தெரிவிக்கிறார். மறுமுனையில் டாம் லெவ்லீனின் மனைவியை ஒரு உணவகத்தில் சந்தித்து எச்சரிக்கிறார். கார்சன் சுங்கசாவடி அருகில் மாஸ் தூக்கி எறிந்த பணப்பையை தேடி அலைகிறார் அது அவரது கண்ணிலும் படுகிறது ஆனாலும் அப்போதைக்கு அதை மீட்க அவர் முனைவதில்லை. கார்சன் தான் தங்கியுள்ள அறைக்கு திரும்புகையில் சிகுரால் பின் தொடரப்படுவதை உணர்கிறார். சிகுர், கார்சனை அவரது அறைக்கு அழைத்து செல்கிறான். அங்கு அவர்களினூடே நடக்கும் உரையாடலை அடுத்து அவன் கார்சனை கொல்கிறான். அப்போது கார்சனுக்கு மாஸ் தொலைப்பேசியில் அழைக்கிறான் ஆனால் கார்சன் இறந்துவிட்டதால். அந்த அழைப்பை சிகுர் ஏற்கிறான் அதில் மாஸுடன் பேசும் சிகுர் பணத்தை தன்னிடம் ஒப்படைக்கும் படிக்கு மிரட்டுகிறான். அப்படியில்லையெனில் மாஸின் குடும்பத்தினரை கொன்றுவிடுவதாவகும் கூறுகிறான். மாஸ் தான் வீசியெறிந்த இடத்திலிருந்து பணத்தை எடுத்துகொண்டு எல் பாஸோ என்னுமிடத்தில் இருக்கும் ஒரு வாகன ஓட்டிகள் தங்குமிடத்திற்க்கு தன் மனைவியை அவளது தாயை அழைத்துவரும்படிக்கு பணிக்கிறான். அதே நேரம் தனது கணவரை இப்படியான இக்கட்டிலிருந்து காப்பாற்றும்படிக்கு மாஸின் மனைவி கார்லா ஷெரிஃப் டாமை அணுகுகிறாள். டாமும் அவள் தனது கணவரை சந்திக்க செல்லுகையில் அவ்விடத்திற்க்கு வருவதாக கூறுகிறார். அப்படி அவர் அந்த இடத்திற்க்கு வருகையில் சில மெஃஸிக்கோ வாசிகள் ஒரு வாகனத்தில் அங்கிருந்து தப்பிசெல்வதை காண்கிறார் அங்கு என்ன நடக்கிறது என்று டாம் உணருமுன் எல்லாம் முடிந்து விடுகிறது. டாம் அந்த விடுதிக்கு போய் பார்க்கையில் அங்கு மாஸும் வேறு சிலரும் சுடப்பட்டு இறந்து கிடக்கிறனர். அன்றிரவு அந்த சம்பவம் நடந்த இடத்திற்க்கு டாம் சென்று பார்க்கையில் மாஸின் பிணம் இருந்த அறையின் கதவுகள் உடைபட்டிருப்பதை காண்கிறார். உள்ளே சிகுர் ஒளிந்திருப்பதை அறியாமல் அவரும் உள்ளே சென்று பார்க்கையில் சிகுர் அங்கிருந்து தப்பிவிடுகிறான்.
வரிசை 44:
 
அடுத்த காட்சியில் டாம் தனது மனைவியிடம் தான் இரவில் கண்ட கனவை விவரிப்பதாக வந்து அத்துடன் படமும் நிறைவடைகின்றது.
<br>
<br>
''கார்மாக் மெக்கார்த்தி என்பவரது '''நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென்''' எனும் நாவலை தழுவியே இப்படம் எடுக்கபட்டுள்ளது. இப்படத்தில் வரும் ஆன்டன் சிகுர் என்கிற கதாபாத்திரத்தின் நாணயம் சுண்டுதல், கதவுகளை உடைக்கும் வாகு, மற்றும் தொலைப்பேசியில் பேசும்பொழுது காலில் ரத்தம் படாம காலை நகர்த்தும் பாங்கு என பார்த்து பார்த்து இயக்கப்பட்டுள்ளது. ஆனால் மெக்கார்த்தி எழுதிய புதினத்தில் அனைத்துகாட்சிகளும் ஷெரிஃப் எட் டாம் பெல் விவரிப்பதாக அவரை மைய்யப்படுத்தியே இருக்கும்.''
 
''கார்மாக் மெக்கார்த்தி என்பவரது '''நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென்''' எனும் நாவலை தழுவியே இப்படம் எடுக்கபட்டுள்ளது. இப்படத்தில் வரும் ஆன்டன் சிகுர் என்கிற கதாபாத்திரத்தின் நாணயம் சுண்டுதல், கதவுகளை உடைக்கும் வாகு, மற்றும் தொலைப்பேசியில் பேசும்பொழுது காலில் ரத்தம் படாம காலை நகர்த்தும் பாங்கு என பார்த்து பார்த்து இயக்கப்பட்டுள்ளது. ஆனால் மெக்கார்த்தி எழுதிய புதினத்தில் அனைத்துகாட்சிகளும் ஷெரிஃப் எட் டாம் பெல் விவரிப்பதாக அவரை மைய்யப்படுத்தியே இருக்கும்.''
 
== மேற்கோள்கள் ==