பண்டைத் தமிழகத்தின் சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
சங்க காலத்தில், [[சிவன்]], [[முருகன்]], [[திருமால்]], [[கொற்றவை]] போன்ற பிரபலமான தெய்வங்கள் இருந்தன. சங்ககால நிலம், பருவ காலம் ஆகியவை [[தமிழர் நிலத்திணைகள்| ஐந்து திணைகளாக]] அதாவது வகைகளாக பிரிக்கப்பட்டிருந்தன. இந்த ஐந்து நிலப்பகுதிகளும் ஐந்து முதன்மை தெய்வங்களுடன் தொடற்புபடுத்தப்பட்டிருந்தன.{{Sfn|Subrahmanian|1972|p=381}} மலையும் மலைச்சார்ந்த பகுதியுமான குறிஞ்சிக்கு முருகன், காடும் காட்டைச் சார்ந்த பகுதியான [[தமிழர் நிலத்திணைகள்|முல்லை]]ப் பகுதிக்கு [[திருமால்]], வறண்ட நிலப்பகுதியான [[தமிழர் நிலத்திணைகள்|பாலைக்கு]] [[கொற்றவை]], வயலும் வயல்சார்ந்த பகுதியான [[தமிழர் நிலத்திணைகள்|மருதத்துக்கு]] [[இந்திரன் (இந்து சமயம்)|இந்திரன்]], கடலும் கடல்சார்ந்த பகுதியுமான [[தமிழர் நிலத்திணைகள்|நெய்தலுக்கு]] [[வருணன்]] ஆகிய தெய்வங்களாகும். இந்தக் காலத்தில் மற்ற பிரபல தெய்வங்களாக காதல் கடவுளான [[காம தேவன்|காமனும்]] , [[சூரிய தேவன் (இந்து சமயம்)|சூரியன்]], [[சந்திர தேவன்|சந்திரன்]], மரண தேவனான [[யமன்]] ஆகியோர் இருந்தனர். தமிழ் நாட்டிலிருந்த [[பிராமணர்கள்]] வேத வாழ்வுக்கு முக்கியத்துவத்தை அளிப்பவர்களாக இருந்தனர. வேத சடங்குகளைக் கற்ற பிராமணர்கள், பொதுவாக அரசர்களின் ஆதரவில் இருந்தனர்.{{Sfn|Kanakasabhai|1904|p=231}}
 
சங்க காலக் கோவில்கள் அழியக்கூடிய பொருட்களான சுண்ணாம்புச் சாந்து, மரம், செங்கல் போன்ற பொருட்களால் கட்டப்பட்டன. அந்தக் கட்டுமானங்கள் இன்று இல்லாமல் போய்விட்டன.{{Sfn|Subrahmanian|1972|p=382}} இந்தக் காலத்துக்கு உட்பட்ட வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கட்டமைப்புகளாக இன்றுவரை எஞ்சியுள்ளவை இயற்கையான பாறைகளில் துறவிகளுக்காக வெட்டப்பட்ட கற்பபடுக்கைகள்கற்படுக்கைகள் ஆகும். ''[[சிலப்பதிகாரம்]]'' மற்றும் சங்க இலக்கியங்களான ''[[கலித்தொகை]]'', ''[[முல்லைப்பாட்டு]]'' , ''[[புறநானூறு]]'' போன்றவற்றில் பல வகைப்பட்ட கோயில்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் சில... ''புறநிலைக்கோட்டம்'' (நகரத்துக்கு வெளியே உள்ள கோயில்), ''நெடுநிலைக்கோட்டம்'' (உயர்ந்த கோயில்), ''பல்குன்றக்கோட்டம்'' (மலை உச்சியில் உள்ள கோயில்), ''இளவந்திக்கோட்டம்'' (நீராடுமிடமும், தோட்டமும் உள்ள கோயில்), ''எழுநிலைமாடம்'' (ஏழடுக்குக் கோயில்), ''கடவுட்கட்டிநகர்'' (கோயில் நகர்).{{Sfn|Gopalakrishnan|2005|p=19}}
 
இந்தக் காலத்தில் பிரபலமாக விளங்கிய திருவிழாக்களில் சில [[கார்த்திகை விளக்கீடு|கார்த்திகை தீபம்]], திருவோணம், காமன் விழா, இந்திர விழா போன்றவை ஆகும். கார்த்திகைதீபம், பெருவிழா என்றும் அழைக்கப்பட்டது, இது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. காமன் விழா வசந்த காலத்தில் கொண்டாடப்பட்டது, அப்போது ஆண்களும், பெண்களும் நல்ல ஆடைகளை அணிந்து நடனமாடினர். இந்திரவிழாவில் வேதப் பலிகள், பல்வேறு தெய்வங்களை பிராத்தித்தல், இசை நிகழ்ச்சிகள், நடனம் ஆகியவை இடம்பெற்றன .{{Sfn|Balambal|1998|p=6}}
"https://ta.wikipedia.org/wiki/பண்டைத்_தமிழகத்தின்_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது