சு. தியடோர் பாஸ்கரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 40:
[[1972]]ல் பாஸ்கரன் திரைப்பட வரலாற்றைப் பற்றிய ”சிவ தாண்டவம்” என்ற தனது முதல் கட்டுரையை கசடதபற இதழில் வெளியிட்டார். [[வங்காள மொழி]] இயக்குனர் சித்தானந்த தாஸ்குப்தாவின் ''டான்ஸ் ஆஃப் சிவா'' என்ற ஆவணப்படத்தைப் பற்றியது அந்த கட்டுரை. பின் அவரது நண்பரும் [[அமெரிக்கா|அமெரிக்க]] வரலாற்று ஆய்வாளருமான சார்லஸ் ஏ. ரயர்சன் அவரைத் தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி ஆய்வு செய்யத் தூண்டினார். பாஸ்கரன், தமிழ்நாடு வரலாற்றுக் கழகம் கொடுத்த நல்கையின் துணையுடன் இரண்டாண்டுகள் பணியிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு, 1974ல் தன் ஆய்வைத் தொடங்கினார். திரைப்படங்களைப் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள 1975ல் திரைப்பட பகுப்பாய்வு வகுப்பொன்றில் சேர்ந்தார். அங்கு அவருக்குப் பாடம் கற்பித்த பேராசிரியர் பி.கே. நாயர் அவரை [[புனே]]யிலுள்ள தேசியத் திரைப்பட ஆவணக் காப்பகத்தின் மேலாண்மைக் குழுவில் நியமித்தார். இரண்டாண்டுகள் அங்கு பல பழைய திரைப்படங்களைப் பார்த்து ஆய்வுகளை மேற்கொண்டார். 1976ல் விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பியவுடன், [[கல்கத்தா]]வுக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு கல்கத்தா திரைப்பட சங்கத்தில் உறுப்பினரானார்.<ref name="A"/><ref name="B">Muthukumaraswamy, P.314-5</ref>
 
இந்தியத் திரைப்படத் தணிக்கை முறை பற்றி அவர் எழுதிய கட்டுரையை 1977ம் ஆண்டு [[அலிகார்|அலிகாரில்]] நடைபெற்ற இந்திய வரலாற்று பேராயத்தில் வாசிக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. இக்கட்டுரையும் வேறு சிலவும் சேர்ந்து 1981ல் ''தி மெசேஜ் பியரர்ஸ்'' (The Message Bearers) என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தன. [[சென்னை மாகாணம்|சென்னை மாகாணத்தில்]] [[பிரிட்டிஷ் இந்தியா|பிரிட்டிஷ் ஆட்சிக்குப்]] பெரிதாக எதிர்ப்பு இல்லை என்று அப்போது பரவலாக நிலவிய கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் இப்புத்தகம் அமைந்திருந்தது. அதுவரை பயன்படுத்தப் பட்டிராத பல தரவுகளையும், ஆதாரங்களையும் பயன்படுத்தி [[இந்திய விடுதலை இயக்கம்|தேசிய இயக்கத்தில்]] தமிழ்த் திரைப்பட மற்றும் நாடகத் துறையினரின் பங்கினை விவரித்த இந்த நூல் தமிழ்த் திரைப்பட வரலாற்றுத் துறையில் முன்னோடித் தன்மை வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது. அவருடைய இரண்டாவது நூல், "பாம்பின் கண்" என்று பொருள்படும், ''தி ஐ ஆஃப் தி செர்பன்ட்'' (The Eye of the Serpent) 1996ல் வெளியானது. தமிழ்த் திரைப்படத் துறையைப் பற்றிய அறிமுக நூலான இதற்கு சிறந்த திரைப்படத்துறை புத்தகத்திற்கான [[தேசியத் திரைப்பட விருதுகள், இந்தியா|தங்கத் தாமரை]] விருது வழங்கப்பட்டது.<ref name="A"/><ref name="B"/>
 
இவை தவிர ஆங்கிலத்திலும் தமிழிலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பல புத்தகங்களை பாஸ்கரன் எழுதியுள்ளார். அவரது கட்டுரைகள் ஆராய்ச்சி இதழ்களிலும் வெகுமக்கள் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன. திரைப்படங்கள் பற்றி [[பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்]], [[மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம்]], [[சிக்காகோ பல்கலைக்கழகம்]] போன்ற பல்கலைக்கழகங்களில் விரிவுரை ஆற்றியுள்ளார். [[பெங்களூர்|பெங்களூரிலுள்ள]] ''நேஷனல் இன்ஸ்ட்டிடூயுட் ஆஃப் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ்'' (மேற்கல்விக்கான தேசிய கல்விக்கழகம்) என்ற ஆய்வுக்கழகத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2000ம் ஆண்டு [[கம்பன் கழகம்|கம்பன் கழகத்தின்]] [[கி. வா. ஜகந்நாதன்|கி.வா.ஜ]] பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. 2001இல் [[மிச்சிகன் பல்கலைக்கழகம்|மிச்சிகன் பல்கலைக்கழகத்தில்]] (ஆன் ஆர்பர்) தமிழ்த் திரைப்படங்கள் பற்றி கற்பித்தார். 2003 ஆம் ஆண்டுக்கான [[தேசியத் திரைப்பட விருதுகள், இந்தியா|தேசியத் திரைப்பட விருதுகளின்]] நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்தார். 1998-2001 காலகட்டத்தில் [[ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்|ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின்]] இயக்குனராகப் பணியாற்றினார். தற்பொழுது அந்நூலகத்தின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக உள்ளார்.<ref name="B"/><ref name = D>{{cite web|title= An archive for Tamil studies |url=http://www.hinduonnet.com/fline/fl1717/17170650.htm |work=Frontline (magazine)|date=19 August 2000}}</ref><ref>[http://www.lib.uchicago.edu/e/su/southasia/rmrl_annual_report_2008-09.pdf Roja Muthiah Research Library Annual Report (2008-09)]</ref>
 
பாஸ்கரன் 2010ம் ஆண்டு வெளிவந்த [[அவள் பெயர் தமிழரசி]] என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
வரிசை 50:
 
=== கூற்றுக்கள் ===
சூழலியல் பற்றி பாஸ்கரனின் சில கூற்றுகள்:
 
{{Quotation|தமிழர்களைப் போல இயற்கையைப் போற்றியவர்களும் இல்லை...தமிழர்களைப் போல இயற்கையை மறந்தவர்களும் இல்லை}}
"https://ta.wikipedia.org/wiki/சு._தியடோர்_பாஸ்கரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது