"ஜான் டைலர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (Kanags பக்கம் ஜோன் டைலர் என்பதை ஜான் டைலர் என்பதற்கு நகர்த்தினார்)
சி (→‎top: பராமரிப்பு using AWB)
அரசுத்தலைவர் ஹாரிசன் பதவியில் இருந்த போது இறந்ததை அடுத்து, டைலர் தேர்தல் இல்லாமல் அரசுத்தலைவரான அமெரிக்காவின் முதலாவது துணைத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். அமெரிக்க அரசியல் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்படுவதைத் தவிர்ப்பதற்காக, டைலர் உடனடியாக அரசுத்தலைவராகப் பதவியேற்று [[வெள்ளை மாளிகை]]க்குக் குடி புகுந்தார்.<ref name="MillerCenterTyler">{{cite web|url=http://millercenter.org/president/biography/tyler-life-in-brief|title=John Tyler: Life in Brief|publisher=Miller Center of Public Affairs, University of Virginia|accessdate=January 29, 2017|deadurl=yes|archiveurl=https://web.archive.org/web/20170131195651/http://millercenter.org/president/biography/tyler-life-in-brief|archivedate=January 31, 2017|df=mdy-all}}</ref> விக் கட்சியினரின் பல கோட்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணாக இருந்ததை டைலர் அறிந்து, கட்சியின் பல மசோதாக்களை தனது [[வீட்டோ]] மூலம் நிராகரித்தார். இவரின் பல முடிவுகள் கடியின் முடிவுகளுக்கு எதிராக அமைந்தன. டைலரின் முக்கியமான பல அமைச்சர்கள் இவரது பதவிக் காலத்தில் தமது பதவிகளைத் துறந்து வெளியேறினார்கள். அத்துடன், டைலர் விக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். டைலரின் வீட்டோ ஒன்று அமெரிக்க சட்டமன்றத்தினால் அமெரிக்க வரலாற்றில் முதல் தடவையாக நிராகரிக்கப்பட்டது. உள்ளூர் அரசியலில் இவர் பல பிரச்சினைகளை எதிர்கொண்டாலும், வெளிநாட்டு அரசியலில் இவர் பல வெற்றிகளைக் கண்டார். [[பிரித்தானியா]]வுடனான வெப்ஸ்டர்-ஆசுபர்ட்டன் உடன்பாடு,<ref>[[#Roseboom|Roseboom]], p. 124.</ref> [[சிங் அரசமரபு|சின் சீனா]]வுடனான வாங்கியா உடன்பாடு என்பவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
 
1839 இல் [[டெக்சஸ்|டெக்சசு குடியரசு]] மெக்சிக்கோவில் இருந்து பிரிந்தது. டெக்சசை ஐக்கிய அமெரிக்காவுடன் இணைப்பது நாட்டின் பொருளாதாரத்துக்கு வளம் கூட்டும் என டைலர் நம்பினார்.<ref>[[#Crapol|Crapol]], pp. 176–78.</ref> 1844 தேர்தலில் போட்டியிடுவதற்குத் தீர்மானித்தாலும், அவரால் விக் கட்சியினரிடம் இருந்தும், சனநாயகவாதிகளிடம் இருந்தும் அவருக்கு ஆதரவு வராததால், போட்டியில் இருந்து விலகி, டெக்சசை இணைப்பதற்கு ஆதரவாக இருந்த சனநாயகவாதி யேம்சு போல்க் என்பவருக்கு தேர்தல் பிரசாரத்தில் ஆதரவளித்தார். போல்க் 1844 தேர்தலில் வெற்றி பெற்றார். டைலர் தாம் பதவியில் இருந்து விலகுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக டெக்சசை அமெரிக்காவுடன் இணைப்பதற்கு கையெழுத்திட்டார். போல்க்கின் ஆட்சியில் டெக்சசு இணைந்தது.<ref>{{cite web|title=Joint Resolution of the Congress of the United States, December 29, 1845|accessdate=May 14, 2014|url=http://avalon.law.yale.edu/19th_century/texan04.asp|publisher=Yale Law School}}</ref> 1861 இல் [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]] அரம்பித்த நிலையில், டைலர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனாலும் அவர் சில மாதங்களில் காலமானார். டைலர் அமெரிக்க வரலாற்றில் ஒரு தெளிவற்ற அரசியல் தலைவராகவே பார்க்கப்படுகிறார்.
 
== இறப்பு ==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2707586" இருந்து மீள்விக்கப்பட்டது