"பெனடிக்ட் ஆர்னோல்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (→‎வாழ்க்கைக் குறிப்பு: பராமரிப்பு using AWB)
போர்களில் ஆர்னோல்ட் பல வெற்றிகளைப் பெற்ற போதும், அவருக்குப் பதவி உயர்வுகள் வழங்குவதில் அன்றைய சட்டமன்றம் பின் நின்றது. இவரது பல வெற்றிகளை வேறு அதிகாரிகள் தமது சாதனைகளாக உரிமை கோரினர்.<ref name="martin">[[#martin|Martin (1997)]]</ref> இராணுவ மற்றும் அரசியல் வட்டாரங்களில் இவரது எதிரிகள் ஊழல், மற்றும் பிற குற்றச்சாட்டுகளை இவர் மீது முன்வைத்தனர், ஆனாலும் முறையான விசாரணைகளின் போது இவற்றில் பெரும்பான்மைக் குற்றச்சாட்டுகளில் இருந்து குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டார். இவரது கணக்குகளை விசாரணை செய்த அமெரிக்கக் காங்கிரசு, இவர் காங்கிரசுக்கு கடன்பட்டிருந்ததாக முடிவு செய்தது. இதனாலும், பிரான்சுடன் அமெரிக்கா கூட்டுச் சேர்ந்தமையாலும், 1778 இல் அமெரிக்கக் குடியேற்றங்களுக்கு முழு சுயநிர்ணய உரிமை வழங்குவதற்கான முன்மொழிவை அமெரிக்க காங்கிரசு ஏற்றுக் கொள்ளாமையினாலும் ஆர்னோல்டு விரக்தி அடைந்தார். இதனால் அவர் அமெரிக்க இராணுவத்தில் இருந்து விலகி, எதிரணியான பிரித்தானிய இராணுவத்துடன் சேர பிரித்தானியாவுடன் இரகசியப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
 
1780 சூலையில், [[நியூயார்க்]]கின் மேற்கு முனையின் (''West Point'') தளபதியாக நியமிக்கப்பட்டார். பிரித்தானியாவிடம் அக்கோட்டையை சரணடைய வைப்பதே அவரது நோக்கமாக இருந்தது, ஆனாலும், அமெரிக்கப் படைகள் ஜான் அந்திரே என்ற பிரித்தானியப் படைத்துறைத் தளபதியைக் கைது செய்த போது அவரிடம் இருந்து மீட்கப்பட்ட சில ஆவணங்களில் இருந்து ஆர்னோல்டின் சதித் திட்டம் வெளிவந்தது.<ref name="Lossing187_9">[[#Lossing|Lossing (1852)]], pp. 187–189</ref> அந்திரே கைது செய்யப்பட்டதை அறிந்த ஆர்னோடு, தலைமறைவானார்.
 
பெனடிக்ட் ஆர்னோல்டின் நடவடிக்கைகள் சான்றுகளுடன் வழங்கப்பட்டபோது [[சியார்ச் வாசிங்டன்]] அமைதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும், சான்றுகளை அவர் விசாரித்து, ஆர்னோல்டை ஆந்திரேயிற்காக பரிமாற்றம் செய்ய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட தளபதி கிளின்டனுக்கு அறிவுறுத்தினார். கிளின்டன் இக்கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. இராணுவ விசாரணையை அடுத்து அந்திரே 1780 அக்டோபர் 2 இல் தூக்கிலிடப்பட்டார். வாசிங்டன் ஆர்னோல்டைக் கைது செய்வதற்குத் தனது ஆட்களை நியூயார்க்கிற்கு அனுப்பினார். ஆனாலும் ஆர்னோல்டு தனது இருப்பிடங்களை மாற்றி, டிசம்பரில் வர்ஜீனியாவுக்குத் தப்பி ஓட முடிந்தது.<ref name="Lossing160_197_210">[[#Lossing|Lossing (1852)]], pp. 160, 197–210</ref>
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2707825" இருந்து மீள்விக்கப்பட்டது