"ஜார்ஜ் சுதர்சன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎பணிவாழ்வு: பராமரிப்பு using AWB
சி (→‎பணிவாழ்வு: பராமரிப்பு using AWB)
 
[[கோட்டயம்|கோட்டயத்திலுள்ள]] சிஎம்எஸ் கல்லூரியில் படித்தார்.<ref name=Ht>{{cite news|url=http://www.hindu.com/2008/07/05/stories/2008070556000300.htm|title=A proud moment for CMS College: Prof. Sudarshan delights all at his alma mater |date=Jul 5, 2008|publisher=The Hindu|accessdate=5 April 2010}}</ref> பின்னர் பட்டப்படிப்பை [[சென்னை கிறித்துவக் கல்லூரி]]யில் 1951இல் முடித்தார். தொடர்ந்து தனது முதுகலை பட்டத்தை [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து]] 1952இல் பெற்றார். [[டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்|டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகத்தில்]] (TIFR) இணைந்து [[ஓமி பாபா|ஹோமி பாபா]] போன்ற அறிவியலாளர்களுடன் பணியாற்றினார். பின்னர், [[நியூ யோர்க் மாநிலம்|நியூயார்க் மாநிலத்தின்]] ரோசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் இராபர்ட் மர்சக் வழிகாட்டுதலின்கீழ் பட்ட மாணவராக சேர்ந்தார். 1958இல் அப்பல்கலைக்கழகத்திலிருந்து [[முனைவர்]] பட்டம் பெற்றார். தொடர்ந்து [[ஆர்வர்டு பல்கலைக்கழகம்|ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில்]] யூலியன் சிவிங்கர் கீழ் முனைவர்பட்ட மேற்படிப்பு மாணவராக சேர்ந்தார்.
==பணிவாழ்வு==
சுதர்சன் இயற்பியலின் பல துறைகளிலும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளை அளித்துள்ளார். இராபர்ட்டு மர்சக்குடன் இணைந்து [[வலிகுறை இடைவினை]]யின் வி-ஏ கோட்பாட்டை முன்வைத்தவர் இவர்தான்; இதுவே பின்னாளில் வலுவற்ற மின் கோட்பாட்டிற்கு வழிகோலியது. [[ரிச்சர்டு பெயின்மான்|பெயின்மான்],], சுதர்சனின் பங்களிப்பை ஏற்று சுதர்சனும் மர்சக்கும் கண்டறிந்ததை தானும் கெல்மானும் வெளிப்படுத்தியதாக 1963இல் கூறினார்.<ref>''The beat of a different drum: The life and science of Richard Feynman'' by J. Mehra Clarendon Press Oxford (1994), p. 477, and references 29 and 40 therein</ref> ஒத்திணைந்த ஒளியை குவாண்டம் சார்பீட்டால் குறிப்பிடும் முறையை உருவாக்கினார்; இது கிளாபர்-சுதர்சன் பி உருவகிப்பு என அறியப்படுகிறது. இதற்குத் தான் இணையரில் ஒருவரான கிளாபருக்கு நோபல் பரிசு கொடுத்த நோபல் அகாதமி சுதர்சனுக்கு கொடுக்காதது சர்ச்சையாயிற்று.
 
குவாண்டம் ஒளியியலில் சுதர்சன் ஆற்றியிருக்கும் பங்கு சிறப்பானது. செவ்வியல் ஒளியியல் கோட்பாடுகளுக்கு இணையான குவாண்டம் ஒளியியல் கோட்பாடுகளைத் தமது தேற்றம் மூலம் நிலைநிறுத்தினார். இவரதுத் தேற்றம் சுதர்சன் உருவகிப்பைப் பயன்படுத்துகிறது. இந்த உருவகிப்பு குவாண்டம் கோட்பாடு கொண்டு ஒளி விளைவுகளை முன்கணிக்கிறது இந்த விளைவுகளைச் செவ்வியல் ஒளியியல் மூலம் விளக்க இயலாது. தவிரவும் சுதர்சன் டேக்கியான் துகள்களைக் குறித்து முதலில் முன்மொழிந்தவராவார். டேக்கியான் துகள்கள் ஒளியை விட விரைவாகச் செல்லக்கூடியவை.<ref>''Time Machines: Time Travel in Physics, Metaphysics, and Science Fiction'', p. 346, by Paul J. Nahin</ref> அவர் இயலாற்றல் படங்களை உருவாக்கினார்; இதன் மூலம் திறவெளி குவாண்டம் அமைப்புக் கோட்பாட்டை ஆய்வு செய்ய மிகவும் பயனுள்ளதாகும். பைத்யநாத் மிசுராவுடன் இணைந்து குவாண்டம் சீனோ விளைவை முன்மொழிந்தார்.<ref>{{Cite journal | last = Sudarshan | first = E. C. G. | author-link = | last2 = Misra | first2 = B. | author2-link = | title = The Zeno’s paradox in quantum theory | journal = Journal of Mathematical Physics | volume = 18 | issue = 4 | pages = 756–763 | date = | year = 1977 | url = | doi = 10.1063/1.523304| id = | postscript = <!--None--> | bibcode=1977JMP....18..756M}}</ref>
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2707870" இருந்து மீள்விக்கப்பட்டது