தாமசு ரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎வாழ்க்கை வரலாறு: பராமரிப்பு using AWB
வரிசை 16:
| width3 = 210
}}
ரோ எசெக்சு கவுன்ட்டியில் வான்சுடெட் அருகிலுள்ள கீழ் லெய்டனின் சர் இராபர்ட் ரோ, எலினோர் ஜெர்மி இணையருக்குப் பிறந்தார். தனது 12வது அகவையிலேயே, சூலை 6, 1593இல் ஆக்சுபோர்டின் மக்டலென் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழக நுழைவிற்குத் தேர்வானார். 1597இல் இங்கிலாந்தின் சீர்மிக்க வழக்கறிஞர் குழாமான ''மிடில் டெம்பிளில்'' உறுப்பினரானார்.<ref name=Williams>[http://www.archive.org/stream/cu31924030494953#page/n165/mode/2up W R Williams ''Parliamentary History of the County of Gloucester'']</ref> [[இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்]]தின் அவையில் சீமான் (எஸ்குயர்) ஆனார். சூலை 23, 1604இல் முதலாம் ஜேம்சு இவரை ''நைட்'' எனப்படும் ''ஆண்தகை'' ஆக்கினார். 1610இல் இளவரசர் என்றி இவரை [[மேற்கிந்தியத் தீவுகள்|மேற்கிந்தியத் தீவுகளுக்கு]] அனுப்பினார்.
 
[[File:Jahangir investing a courtier with a robe of honour watched by Sir Thomas Roe, English ambassador to the court of Jahangir at Agra from 1615-18, and others.jpg|thumb|1615 முதல் 1618 வரை [[ஆக்ரா]]வில் இங்கிலாந்தின் தூதராக இருந்த சர் தாமசு ரோ முன்னிலையில் [[ஜகாங்கீர்]] கொடையளித்தல்.]]
1614இல், இங்கிலாந்தின் [[நாடாளுமன்ற உறுப்பினர்|மக்களவைக்குத்]] தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name=Williams/> 1615 முதல் 1618 வரை [[இந்தியா]]வின் [[ஆக்ரா]]வில் [[முகலாயப் பேரரசு|மொகலாயப் பேரரசர்]] [[ஜஹாங்கீர்]] அவையில் இங்கிலாந்து அரசரின் தூதராக விளங்கினார். இவரது முதன்மை நோக்கம் [[சூரத்து|சூரத்திலிருந்த]] [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின்]] ஆலைகளுக்கு பாதுகாப்புக் கோருவதாகும். அரசவையில் விரைவிலேயே ஜகாங்கீரின் நட்பை வென்று இருவரும் இணைந்து மதுவருந்தும் பங்காளி ஆனார். அப்போது இவர் எழுதிய நாட்குறிப்பு ஜகாங்கீர் ஆட்சிக்கான மதிப்புமிக்க மூலமாக விளங்குகின்றது.
 
1621இல், மீண்டும் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name=Williams/> [[உதுமானியப் பேரரசு]]க்கான இங்கிலாந்து தூதராக நியமிக்கப்பட்டார். தமது பணிக்காலத்தில் இங்கிலாந்து வணிகர்களுக்கு பல உரிமைகளை நீட்டித்தார். 1624இல் [[அல்ஜியர்ஸ்|அல்சியர்சுடன்]] உடன்பாடு கண்டு பல நூறு ஆங்கில போர்கைதிகளை விடுவித்தார்.
 
1629இல் ரோ [[சுவீடன்|சுவீடனுக்கும்]] [[போலந்து]]க்கும் இடையேயான அமைதி காணும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டார். இதன்மூலம் சுவீடனின் அரசர் குசுதவுசு அடோல்பசு [[முப்பதாண்டுப் போர்|முப்பதாண்டுப் போரில்]] ஈடுபட முடிந்தது. ரோ மேலும் [[கதான்ஸ்க்|தான்சிக்கிற்கும்]] [[டென்மார்க்]]கிற்கும் இடையே உடன்பாடு காண உதவினார். 1630இல் தாயகம் திரும்பினார். 1631இல், லூக் பாக்சின் [[ஆர்க்டிக்]] தேடுதலுக்கு நிதியாதரவு வழங்கினார்; கனடாவிலுள்ள நீரிணை ''ரோசு வெல்கம் சவுண்டு'' இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.<ref>{{cite web
"https://ta.wikipedia.org/wiki/தாமசு_ரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது