இங்கிலாந்தின் இரண்டாம் யேம்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 37:
[[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு|முதலாம் சார்லசு]] மன்னரின் உயிருடனிருந்த இரண்டாவது மகனான இரண்டாம் யேம்சு,<ref>Miller, 1</ref> இவரது சகோதரரான [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு|இரண்டாம் சார்லசு]] இறந்ததை அடுத்து மன்னராக முடிசூடினார்.<ref>Miller, 118–119</ref> பிரித்தானியாவின் அரசியலில் பெரும் செல்வாக்குச் செலுத்தி வந்த [[சீர்திருத்தத் திருச்சபை|சீர்திருத்தவாதிகள்]] இவரை பிரெஞ்சு-சார்பானவராகவும், கத்தோலிக்க-சார்பானவராகவும், ஒரு முழுமையான அதிகாரம் கொண்ட ஆட்சியாளராக சந்தேகக் கண்ணோடு நோக்கினர்.<ref>Harris, 260–262; Prall, 312</ref> இரண்டாம் யேம்சு தனது வாரிசாகக் கத்தோலிக்கரான இளவரசர் யேம்சு பிரான்சிசு எட்வர்டு ஸ்டுவர்ட்டை அறிவித்ததை அடுத்து இங்கிலாந்தில் புரட்சி வெடித்தது. மன்னரின் புரட்டத்தாந்து மருமகனான மூன்றாம் வில்லியமை [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] இருந்து படையினரைக் கொண்டு வந்து அரசனுக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபடுமாறு தூண்டினர்.<ref>Ashley, 201–202</ref> 1688 ஆம் ஆண்டில் இப்புரட்சி இடம்பெற்று வெற்றி பெற்றது. இரண்டாம் யேம்சு மன்னர் இங்கிலாந்தில் இருந்து வெளியேறினார்.<ref name=miller205>Miller, 205–209</ref> இங்கிலாந்து நாடாளுமன்றம் 1688 டிசம்பர் 11 இல் இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார் என அறிவித்தது. இசுக்கொட்லாந்து நாடாளுமன்றம் 1689 ஏப்ரல் 11 இல் பதவியில் இருந்து அகற்றப்பட்டதாக அறிவித்தது. யேம்சின் மூத்த மகளும், புரொட்டத்தாந்து மதத்தவருமான இரண்டாம் மேரியையும், அவரது கணவர் ஒரேஞ்சின் வில்லியமும் மன்னர்களாக அறிவிக்கப்பட்டனர்.<ref>Ashley, 206–209; Harris, 329–348</ref> இரண்டாம் யேம்சு 1689 இல் [[அயர்லாந்து]] வந்திறங்கிய போது ஆட்சியைக் கைப்பற்ற முனைந்தார். 1690 சூலையில் இடம்பெற்ற போரில் இவரது படையினர் தோல்வியடைந்தனர்.<ref>Fitzpatrick, Brendan, ''New Gill History of Ireland 3: Seventeenth-Century Ireland – The War of Religions''(Dublin, 1988), page 253 | isbn=0-7171-1626-3</ref><ref>{{cite book |title=The Jacobites, Britain and Europe, 1688–1788 |last=Szechi |first=Daniel |year=1994 |publisher=Manchester University Press |location=48 |isbn=0-7190-3774-3}}</ref> இதனை அடுத்து யேம்சு [[பிரான்சு]] திரும்பினார். தனது வாழ்வின் இறுதிப் பகுதியை அவரது மைத்துனரான [[பிரான்சின் பதினான்காம் லூயி]]யின் ஆதரவில் கழித்தார். யேம்சு 1701 செப்டம்பர் 16 அன்று மூளைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.<ref name=miller240>Miller, 240</ref>
 
இரண்டாம் யேம்சு மன்னர் இங்கிலாந்து நாடாளுமன்றத்துடனான முரண்பாடுகள், மற்றும் ஆங்கிலேய ரோமன் கத்தோலிக்கர்களுக்கும், புரட்டத்தாந்து எதிர்ப்பாளிகளுக்கும் [[சமயச் சுதந்திரம்]] கிடைக்க ஆதரவளித்தமை போன்றவற்றுக்காக பெரிதும் அறியப்பட்டார்.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இங்கிலாந்தின்_இரண்டாம்_யேம்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது