தோமினிக் சாவியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:அழியா உடல் உள்ள கிறித்தவப் புனிதர்கள்|அழியா உடல் உள்ள கிறித்தவப் ப...
சி பராமரிப்பு using AWB
வரிசை 27:
==தொடக்க காலம்==
===வீட்டு வாழ்வு===
தோமினிக் சாவியோ, 1842 ஏப்ரல் 2ந்தேதி [[இத்தாலி]]யில் உள்ள ரிவா ப்ரெஸோ சியரியில் பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்தே இயேசுவிடமும் அன்னை மரியாவிடமும் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். இவரது குடும்பமும் சூழ்நிலையும் இவரை புனிதத்தில் வளர்த்தன. இவரது பெற்றோர் இவரை கிறிஸ்தவ மதிப்பீடுகளில் வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டினர்.<ref name="bosconet.aust.com">Bosconet.aust.com: [http://www.bosconet.aust.com/Salesianity/3livesfinal.zip Don Bosco's Three Lives: The Life of Dominic Savio (Chapter 1: Home – The boy's character – His early goodness)]; Retrieved on November 24, 2006;</ref> நான்கு வயதிலேயே இவர் தனியாக செபிக்கும் திறமை பெற்றிருந்தார்.<ref>Traditionalcatholic.net: [http://www.traditionalcatholic.net/Tradition/Information/Saint/John_Bosco/The_Life_of_Dominic_Savio/Chapter_I.html The Life of Dominic Savio: Chapter 1-Early Life and Extraordinary Gifts]; Retrieved on November 24, 2006.</ref>
 
சாவியோ தான் ''முதல் [[நற்கருணை]]'' பெற்ற நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது, "என் வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியானதும் அற்புதமானதுமான நாள் அது" என்கிறார்.<ref name="BoscoNet 2006">Bosconet.aust.com: [http://www.bosconet.aust.com/Salesianity/3livesfinal.zip Don Bosco's Three Lives: The Life of Dominic Savio (Chapter 3: His first communion – Preparation, recollection and memories of the day)]; Retrieved on November 24, 2006.</ref> இவர் ஆலயத்தின் பீடச் சிறுவர்கள் குழுவில் இணைந்து [[திருப்பலி (வழிபாடு)|திருப்பலியில்]] குருக்களுக்கு உதவி செய்தார்; அதிகாலை 5 மணிக்கே ஆலயம் சென்றுவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். மழையிலும், குளிரிலும் இவர் ஆலயத்திற்கு தவறாமல் சென்றார்.
 
===ஆரட்டரியில்===
12 வயதில் கடவுளின் அழைப்பை உணர்ந்து, புனித [[ஜான் போஸ்கோ]] நடத்திய ஆரட்டரியில் சாவியோ சேர்ந்தார். 1854 அக்டோபர் முதல் திங்கள் கிழமை தனது தந்தையுடன் புனித [[ஜான் போஸ்கோ]]வை சந்தித்த இவர்,<ref name="ReferenceC">Traditionalcatholic.net: [http://www.traditionalcatholic.net/Tradition/Information/Saint/John_Bosco/The_Life_of_Dominic_Savio/Chapter_VI.html The Life of Dominic Savio: Chapter 6-My First Meeting with Dominic Savio. Some Curious Incidents Connected With It.]; Retrieved on November 24, 2006.</ref> “நான் தைக்கப்படாத துணியாக இருக்கிறேன், என்னை இயேசுவுக்கு உகந்த நல்ல சட்டையாகத் தைப்பது உங்கள் பணி” என்று அவரிடம் கூறினார்.
 
கெட்ட வார்த்தைகள் பேசிய சிறுவர்களை சாவியோ கண்டித்து திருத்தினார்; சண்டையிட்டுக் கொண்ட சிறார்களுக்கிடையே சமாதானம் செய்துவைத்தார். தீய வழிகளில் இருந்து விலகி, களங்கமற்ற தூய்மையான புண்ணிய வாழ்வு வாழ்ந்தார். தனது செயல்கள் அனைத்தையும் இறைவனின் புகழ்ச்சிக்காகவே செய்து வந்தார்.
வரிசை 44:
சாவியோவின் [[புனிதர் பட்டமளிப்பு|புனிதர் பட்டத்திற்கான]] நடவடிக்கைகளைத் தொடங்கிவைத்த [[திருத்தந்தை]] [[பத்தாம் பயஸ் (திருத்தந்தை)|10ம் பயஸ்]],<ref>Americancatholic.org: [http://www.americancatholic.org/Features/SaintOfDay/default.asp?id=1318 Saint of the day: St.Dominic Savio]; Retrieved on 24 November 2006.</ref> “தோமினிக் என்னும் இளைஞர், திருமுழுக்கில் பெற்ற புனிதத்தைப் பழுதின்றி காப்பாற்றிக் கொண்டவர்" என்று இவரைப் புகழ்கின்றார்.
 
1933ல் இவருக்கு [[வணக்கத்திற்குரியவர்]] பட்டம் வழங்கிய [[திருத்தந்தை]] [[பதினோராம் பயஸ் (திருத்தந்தை)|11ம் பயஸ்]], “தூய்மை, பக்தி, ஆன்மீகத் தாகம் ஆகியவற்றின் ஆற்றலால் சாவியோவின் கிறிஸ்தவ வாழ்வு நமக்கு முன்மாதிரியாக உள்ளது” என்று கூறுகிறார்.
 
[[திருத்தந்தை]] [[பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை)|12ம் பயஸ்]], தோமினிக் சாவியோவுக்கு 1950 மார்ச் 5ந்தேதி [[அருளாளர் பட்டம்|அருளாளர் பட்டமும்]], 1954 ஜூன் 12ந்தேதி [[புனிதர்]] பட்டமும்<ref>Catholic-forum.org: [http://www.catholic-forum.com/SAINTS/saintd05.htm Dominic Savio]; Retrieved on 24 November 2006.</ref> வழங்கி உரை நிகழ்த்திய போது, “இளைஞர்கள் சாவியோவின் வழிகளைப் பின்பற்ற வேண்டும். தீய சக்திகளின் தாக்கங்களைப் புறக்கணித்து, தூய்மையில் நிலைத்து நின்ற சாவியோவின் புனித வாழ்க்கை இளைஞர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டு” என்று கூறினார்.
வரிசை 64:
| PLACE OF DEATH =Mondonio, a ''frazione'' of Castelnuovo d’Asti (today [[Castelnuovo Don Bosco]]), Piedmont, Italy
}}
 
[[பகுப்பு:1842 பிறப்புகள்]]
[[பகுப்பு:இத்தாலியின் கிறித்தவப் புனிதர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தோமினிக்_சாவியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது