உமேஷ் சந்திர பானர்ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 18:
}}
 
'''உமேஷ் சந்திர பானர்ஜி''' (Womesh Chunder Bonnerjee) (1844 – 1906) [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியின் முதல் தலைவர் ஆவார். இவர் [[வங்காளம்|வங்காளத்தைச்]] சேர்ந்த வழக்கறிஞர் ஆவார். [[ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை]] உறுப்பினர் பதவிக்கு, [[பிரித்தானிய இந்தியா]] சார்பாக போட்டியிட்ட முதல் இந்தியர் ஆவார்.
 
== இளமை ==
 
1844ல் [[கல்கத்தா]]வில் பிறந்த உமேஷ் சந்திர பானர்ஜி, பள்ளிப் படிப்பை முடித்தவுடன், 1862ல் [[கல்கத்தா உயர் நீதிமன்றம்| கல்கத்தா உயர்நீதிமன்றத்தில்]] எழுத்தர் பணியில் சேர்ந்தார். பின்னர் 1864ல் [[இங்கிலாந்து]] சென்று, 1867ல் வழக்கறிஞர் பட்டம் பெற்றார். <ref name="Mahmud1994">{{cite book|author=Sayed Jafar Mahmud|title=Pillars of Modern India, 1757-1947|url=https://books.google.com/books?id=w8XPyBqxwX8C&pg=PA19|year=1994|publisher=APH Publishing|isbn=978-81-7024-586-5|page=19}}</ref>
 
==இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவராக ==
 
31 டிசம்பர் 1885ல் [[பம்பாய்]] நகரத்தில், உமேஷ் சந்திர பானர்ஜி தலைமையில், [[தாதாபாய் நௌரோஜி]] மற்றும் ஆங்கிலேயரான [[ஆலன் ஆக்டவியன் ஹியூம்]] மற்றும் 72 உறுப்பினர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில், [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானிய இந்திய அரசில்]] இந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்த, [[இந்திய தேசிய காங்கிரசு]] என்ற அரசியல் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முதல் அகில இந்தியத் தலைவராக உமேஷ் பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite news|title=Sonia sings Vande Mataram at Congress function|url=http://www.rediff.com/news/report/cong/20061228.htm|publisher=[[Rediff]]|accessdate=23 August 2014|date=28 December 2006}}</ref>
 
1886ல் கல்கத்தாவில் [[தாதாபாய் நௌரோஜி]] தலைமையில் நடைபெற்ற அகில இந்திய தேசிய காங்கிரசு கூட்டத்தில், [[பம்பாய் மாகாணம்]], [[வங்காள மாகாணம்]], [[மத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா|மத்திய மாகாணம்]] மற்றும் [[பஞ்சாப் மாகாணம் (பிரித்தானிய இந்தியா)| பஞ்சாப் மாகாணங்களை]] ஒருங்கிணைக்க இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் நிலைக் குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டது.
 
1892ல் [[அலகாபாத்|அலகாபாத்தில்]] நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் மீண்டும் உமேஷ் சந்திர பானர்ஜி கட்சியின் தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். <ref name="Mahmud1994" /> இக்கூட்டத்தில் இந்தியர்கள் தங்களது அரசியல் சுதந்திரத்திற்கானத் தகுதியை நிரூபிக்க வேண்டிய நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.<ref>Lacy, Creighton (1965). ''The Conscience Of India – Moral Traditions In The Modern World'', Holt, New York: Rinehart and Winston, p. 123</ref>
 
உமேஷ் சந்திர பானர்ஜி [[இங்கிலாந்து]] சென்று [[கோமறை மன்றம்|பிரிவி கௌன்சில் நீதிமன்றத்தில்]], இந்தியர்களின் மேல்முறையீடு வழக்குகள் குறித்து வாதாடினார். <ref name="Mahmud1994" />
 
== மேற்கோள்கள் ==
வரிசை 39:
== வெளி இணைப்புகள் ==
* [http://www.congress.org.in/ Indian National Congress Website]
 
{{DEFAULTSORT:Bonnerjee, Umesh}}
 
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}
 
{{DEFAULTSORT:Bonnerjee, Umesh}}
[[பகுப்பு:இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:1844 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/உமேஷ்_சந்திர_பானர்ஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது