ஓமி பாபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 31:
 
== பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை ==
1909 அக்டோபர் 30 அன்று [[மும்பை]]யைச் சேர்ந்த வசதியான [[பார்சி மக்கள்|பார்சி]] குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே அவர் வீட்டு நூலகத்திருந்த அனைத்து [[அறிவியல்]] புத்தகங்களையும் படித்து முடித்தார். பாபாவின் தந்தை அவரை ஒரு [[பொறியாளர்|பொறியாளராக]] ஆக்க வேண்டும் என்று முனைந்து அவரை [[இங்கிலாந்து|இங்கிலாந்திற்கு]] அனுப்பினார். தந்தையின் விருப்பத்திற்கு இணங்க [[பொறியியல்]] படிப்பில் சேர 1927-ல் [[கேம்பிரிட்ஜ்]] புறப்பட்டார்.1930-ல் பாபா [[எந்திரவியல்]] படிப்பில் முதல் வகுப்பில் தேறியதையொட்டி, கோட்பாட்டு இயற்பியல் துறையில் ஆராய்ச்சிப் பிரிவு மாணவராகச் சேர்ந்தார்.<ref name="தீக்கதிர்">{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=89339 | title=ஹோமி ஜஹாங்கிர் பாபா | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=24 நவம்பர் 2014 | accessdate=24 நவம்பர் 2014}}</ref> அவர் என்ரிகோ [[ஃபெருமி]], வூல்வுகாங் [[பவுலி]] ஆகிய தலைசிறந்த இயற்பியலாளர்களுடன் பணியாற்றினார்.
 
== தொழில்முறை வாழ்க்கை ==
1933-ல் “[[காமா]] கதிர்களை உட்கிரகிப்பதில் [[எலெக்ட்ரான்]] பொழிவுகளின் பங்கு” பற்றி அவர் சமர்ப்பித்த அறிவியல் கட்டுரைக்கு [[ஐசக் நியூட்டன்]] படிப்புதவி கிடைத்தது. 1934-ல் டாக்டர் பட்டம் பெற்றார்.<ref name="தீக்கதிர்" /> 1937ஆம் ஆண்டு ஓமியும் ஹைட்லர் என்ற செருமானிய இயற்பியலாளரும் இணைந்து செய்த [[அண்டக்கதிர்]]-பற்றிய ஆராய்ச்சி அவர்களுக்கு உலகப்புகழைத் தந்தது.அத்தோடு நில்லாமல், மேலும் செய்த ஆய்வுகளால் [[மீசான்]] எனப்படும் [[அடிப்படைத் துகள்]] ஒன்று அண்டக்கதிர்களில் இருந்ததைக் கண்டறிந்தார். [[ஐன்ஸ்டைன்|ஐன்ஸ்டைனின்]] [[சார்பியல் தத்துவம்|சார்பியல் தத்துவத்திற்கான]] ஆய்வுச்சான்றையும் மீசானின் இயக்கத்தை ஆய்வு செய்ததன் மூலம் காட்டினார். இந்த மீசான் ஆய்வுச்சான்று மிகவும் புகழ் வாய்ந்தது.
 
== இறப்பு ==
வரிசை 44:
==வெளி இணைப்புகள்==
*[http://www.bbc.com/tamil/global-41809505 அணுசக்தி திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட ஹோமி பாபா]
 
[[பகுப்பு:1909 பிறப்புகள்]]
[[பகுப்பு:இந்திய இயற்பியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஓமி_பாபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது