ஜெரோம் தாஸ் வறுவேல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (தேவைப்படும் முன்னேற்றங்கள் செய்யப்பட்டன.)
சி (பராமரிப்பு using AWB)
 
== பிறப்பும் தொடக்க காலக் கல்வியும் ==
1951 அக்டோபர் 21ஆம் நாள் கன்னியாகுமரி மாவட்டத்தில் படுவூர் என்ற கிராமத்தில் பிறந்த இவர் வெள்ளியாவிளை ஊரில் தொடக்கப் பள்ளியில் கல்வி பயின்றார். 1964, மே மாதம் 24ஆம் நாள் இவர் [[கோட்டாறு மறைமாவட்டம்|கோட்டாறு மறைமாவட்டத்தின்]] புனித ஞானப்பிரகாசியார் தொடக்கநிலை குருத்துவ கல்விக்கூடத்தில் சேர்ந்து, நாகர்கோவில் கார்மல் உயர்நிலைப் பள்ளியில் பயின்று, 1967ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் உயர்நிலைக் கல்வியை முடித்தார். 1967 ஜூன் முதல் 1968 மார்ச்சு வரை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் பல்கலை முற்படிப்பினை முடித்தார்.
 
== மேல்நிலைக் கல்வி ==
பின்னர் ஜெரோம் தாஸ், சலேசிய சபையினர் உரோமை நகரில் நடத்துகின்ற திருத்தந்தை பல்கலைக் கழகத்தில் இறையியல் பயிலுவதற்காக அனுப்பப்பட்டார். அதே பல்கலைக் கழகத்தில் அவர் பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டமும், கல்விபயிற்றுத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
 
1985ஆம் ஆண்டு, ஜூன் 2ஆம் நாள் ஜெரோம் தாஸ், சலேசிய சபைக் குருவாகத் திருநிலை பெற்றார். அவருக்குக் குருத்துவத் திருநிலைப்பாடு வழங்கியவர் [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]]<nowiki/>ஆவார்.
 
== இந்தியாவில் பணி ==
 
== குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமனம் ==
2014, டிசம்பர் 22: [[திருத்தந்தை பிரான்சிசு]] ஜெரோம் தாஸ் வறுவேலை குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமித்தார்.
 
2015, பெப்ருவரி 24: ஜெரோம் தாஸ் வறுவேல், புதிதாக உருவாக்கப்பட்ட குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். ஆயர் பட்ட விழாவிற்குத் தலைமை தாங்கியவர் கோட்டாறு மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ். இணைந்து பட்டம் வழங்கியவர்கள் மதுரைப் பேராயர் அந்தோணி பாப்புசாமி, மற்றும் சென்னை-மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2711478" இருந்து மீள்விக்கப்பட்டது